Skip to Content

10.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)                        

    கர்மயோகி

901) மனம் திருட்டு ஆசையை நாடும் என்பது ஆங்கில வாக்கு. லீலை என்ற உயர்ந்த கருத்தை இது தாழ்ந்த நிலையில் வெளிப்படுத்துகிறதுதானே மறைந்து, மறந்ததை மீண்டும் காண்பதே சிருஷ்டியில் பெரிய ஆனந்தம் என்பதே அடிப்படை உண்மை.

திருட்டு ஆசையை நாடும் மனம் பிரம்மத்தை திருட்டில் வெளிப்படுத்துகிறது.

தலைவருக்குத் தொண்டர்களை அதிகாரம் செய்வதில் ஆசை. தொண்டர் தலைவருக்குப் பணிவதில் ஆசை.

ஒரே ஆசை இரு வகையாகத் தென்படுகிறது. இதுவே இரட்டை எனப்படும்.

திருட்டுப் பழக்கம் உள்ளவர்களில் ஒரு சிலருக்குப் பொருள் தேவைப்படாது. என்றாலும் திருட ஆசையாக இருக்கும். இதற்கு Kleptomania கிளப்டோமேனியாஎனப் பெயர்ஜார்ஜ் Vஅரசனுக்குஇப்பழக்கம் உண்டு.

பொய் சொல்வது பரவலான பழக்கம்.

தப்பிக்கப் பொய் சொல்வது ஒன்று.

பெருமைக்குப் பொய் சொல்வது,

ஆதாயத்திற்குச் சொல்வதுஎன பொய் சொல்லும் வகைகள் பல.

பொய் சொல்ல ஆசைப்படுபவரும் உண்டு.

எதையும் பொய்யாகச் சொன்னால்தான் திருப்திஎன்பது ஒரு வகை.

அவர்கள் மெய்யைச் சொல்லும்பொழுது பொய்யாகத் திரித்துச் சொல்வர்.

எலக்ஷனில் காசு கொடுக்காமல் ஜெயித்தவர் அந்த மெய்யை காசு கொடுத்து ஜெயித்தேன் என்ற பொய்யாக மாற்றிச் சொல்வதுபோல் பேசுபவருண்டு.

தன் வாயால் மெய் வரும் "பாவத்தை' செய்யக்கூடாதுஎன்ற முடிவு உடையவர் அவர்.

எந்தச் சாதனையும் பர்சனாலிட்டி அளவுக்கே பலிக்கும்என்பது சட்டம்.

மனிதனுடைய பொதுவான பர்சனாலிட்டி பொய் சொல்வது.

அதனால் மனம் பொய்யை நாடுகிறது. பொய் செயல்படுவது திருட்டு.

சமூகத்தில் சத்தியசந்தன்எனப்பட்டவருண்டுஅது குறைவு.

பொய்யையே கருவியாக்கி வாழ்பவருண்டுஅதுவும் மிகக்குறைவு.

இடைப்பட்டவர் பல்வேறு அளவில் பொய் சொல்வார்கள்.

பொய் செயல்படும்பொழுது திருட்டானாலும், பொய் சொல்லும் அளவுக்குத் திருடுபவரில்லை.

பொய்யை மனம் ஏற்றாலும் அதைச் செயல்படுத்தும் திருட்டை அந்த அளவுக்கு மனிதனால் ஏற்கமுடியவில்லை.

திருட்டு ஆசையை நாடுவதும் பிரம்மத்தின் செயல்.

சிருஷ்டியில் பேரானந்தம் அனுபவிக்க பிரம்மம் ஒளிந்து கண்டுபிடிக்கிறது.

மனிதன் திருட்டு ஆசையை நாடுவதும் பிரம்மம் தன்னைக் கண்டுபிடிக்க ஒளிவதும் ஒரேவிதமான செயல்களாகும்.

காதல் திருமணங்களில் ஒரு சிலவற்றில் இந்த அம்சம் உண்டு.

திருட்டுத்தனமாகச் செய்வதே செய்வதாகும் என நினைப்பவரில் சிலர் இதை நாடுவர்.

எல்லா உறவுகளிலும், எல்லாச் செயல்களிலும் இந்த அம்சம் ஏதாவது

ஒரு வகையில் ஏதோ ஓரளவு செயல்படும்.

****

902) தீமை மாறுதலுக்கு அவசியம்தீமை என்ன என்பதை அறிந்தால் தீமை மறையும்தெளிவு குறையும் வரை தீமையால் கஷ்டப்படவேண்டும்.

தீமையின்றி மாறுதலில்லை. தெளிவால் தீமை அழியும்.

     அனுபவம் என்பதை பட்டறிவு என்கிறோம். பாடுபட்டுப் பெறும் அறிவுக்கு அப்பெயர். பாடுபடாமல் உட்கார்ந்திருப்பவனுக்கு அனுபவமில்லை. கொடுமைக்கு ஆளானவர் பலர் வாழ்வில் முன்னேறினர். அக்கொடுமையில்லாமல் அம்முன்னேற்றமில்லைகஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் கொடுமை செய்வதையே செய்யும். டைப்பிஸ்டுக்கு விரல் வலிக்கும், நரம்பு சுண்டி இழுக்கும்பாத்திரம் தேய்ப்பவருக்கு கை முரடாகும்மண்ணெண்ணெயில் வேலை செய்பவருக்கு மற்ற வாசனை தெரியாதுஇவை நாற்றம், அழுக்கு, சிரமம் ஆகும்இவை இருண்டால் தீமையுண்டாகும். அது கடுமையானது, கொடுமை வழி வரும்பட்டினி கிடப்பது சிரமம்; வயிறு வலிக்கும்.  சாப்பாடு இருந்து, ஒருவர் கொடுக்க மனமின்றி பட்டினி போடுவது மனமும் வலிபடும் கொடுமைஅந்தச் சாப்பாட்டை ஊசலடிக்கவைத்து, அழுகியபின் கொடுத்து சாப்பிடச் சொல்வது சிறுமை, கடுமை, கொடுமை கலந்த கயமை. பாத்திரம் தேய்த்தால் கை முரடாகும்; அது தன் மிருதுத் தன்மையை இழக்கும்பட்டினி கிடந்தால் நரம்பில் வேகம் எழும்; குணம் கெட்டு எரிச்சல் எழும்பிறர் வேண்டும் என்றே பட்டினி போட்டால் மனம் கசந்துவிடும்இதைக் கடந்து வேதனை, வதை, சித்ரவதை ஆகியவை மனத்தையும் ஊடுருவி ஆத்மாவை எட்டி அதைக் கசப்பாக்கும். உடலோ,உணர்வோ, மனமோ கசங்கலாம்; ஆத்மா வெளிவந்தால் அதற்குக் கசப்புத் தெரியாது.   ஆழ்ந்து புதைந்துள்ள ஆத்மா வெளிவர கொடுமை உலகில் உலவுகிறது. வெளிவந்த ஆத்மா மனத்தையும், உயிரையும், உடலையும் கசப்பில் இருந்து விடுவித்து ஒளிமயமாக்குவது மாறுதல். அதனால்,

தீமையின்றி மாறுதலில்லை.

மாற்றம் மனிதனுக்கு ஏற்றம்.

நாம் தேடுவது திருவுருமாற்றம்.

மாற்றம் உருவை மாற்றுவது உரு மாற்றம்.

அது தெய்வீக உருவானால் அம்மாற்றம்,

திருவுருமாற்றம் எனப்படும்.

அதைச் செய்வது சரணாகதி.

சரணாகதி சமர்ப்பணத்தில் ஆரம்பிக்கிறது.

சமர்ப்பணம் எழ அன்னை நினைவு வேண்டும்.

அது மேலெழ "நாம்" என்ற நினைவு நீங்கவேண்டும்.

அது அடக்கம்.

அகந்தை அழிவது அடக்கம் எனப்படும்.

தீமை இவற்றிற்கெல்லாம் அவசியம்.

தொடரும்.....

****

ஜீவிய மணி

பெறுவது சிறியது; கொடுப்பது பெரியது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உலகம் ஜடத்தால் ஆளப்படுகிறது. ஜடம் மனத்தை நிர்ணயிக்கிறது. சிருஷ்டியும், பரிணாமமும் மனத்தால் நடப்பவை. அவற்றுள் மனம் ஜடத்தை நிர்ணயிக்கிறது. எனவே ஜடத்தை மாற்றி அங்கு மனத்தை பிரதிஷ்டை செய்தால் அளவுகடந்த முன்னேற்றமான மாற்றம் ஏற்படும்என்பது மட்டுமில்லை, அடுத்த பரிணாமக் கட்டத்தில் அளவால் நிர்ணயிக்க முடியாத வளர்ச்சிக்குரிய முன்னேற்றமும் எழும்.

மனமும், ஜடமும் இடம் மாறினால்

உலக முன்னேற்றம் பெரியதாகும்.


 



book | by Dr. Radut