Skip to Content

08.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள் 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)   

N. அசோகன்

 61.தண்டனை, தோல்வி, நஷ்டம் மற்றும் ஏமாற்றம் என்று இவையெல்லாம் அறிவில்லாமலும், விழிப்புணர்வு இல்லாமலும், வளைந்து கொடுக்காமலும் இருக்கின்றவர்களுக்கு இம்மாதிரி இருக்கக்கூடாதுஎன்று உணர்த்துவதற்காக வாழ்க்கை கையாளும் முறைகளாகும்.

62. விழிப்புணர்வு இல்லாமல் சோம்பேறிகளாக இருப்பவர்களுடைய முன்னேற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக இயற்கை நெருக்கடிகள் மற்றும் சோதனைகளை அவர்கள்மேல் திணிக்கிறது.

63. பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முயல்வது ஒரு நல்ல தீர்வு இல்லை.இப்பொழுது தீர்க்காமல் விடப்படும் பிரச்சினை பின்னர் இதைவிடத் தீவிரமாக திரும்பிவரும்.

64. எதிர்பார்ப்பு என்பது நம்முடைய எனர்ஜி மற்றும் கவனத்தையெல்லாம் வீண் தேக்க நிலையில் முடக்கிவைப்பதால் பலன் வருவது தாமதமாகிறதுமாறாக கையில் இருக்கும் வேலையில் நாம் தீவிரமாக ஈடுபடும்பொழுது நம்முடைய எனர்ஜி பயனுள்ள வகையில் செலவாகிறது. அதனால் பலன் கிடைப்பது விரைவு பெறுகிறது.

65. விறகு அடுப்பு, ஆட்டுக்கல், திரிவிளக்கு போன்றவைகளை இன்று தேவையற்றவை என்று விட்டுவிட்டோம்இம்மாதிரியே அன்னையிடம் வந்தபிறகு அன்பர்கள் பிரார்த்தனை பலத்தை ஏற்று ஜாதகம், பணபலம்,பதவிபலம் ஆகியவற்றை நம்புவதையும், மருந்து, மாத்திரைகளை நம்புவதையும் விட முன்வர வேண்டும்.

66. நல்லெண்ணமும் பிறருக்குத் தன்னை வழங்குதலும் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரக்கூடிய விஷயங்களாகும்ஏனென்றால் இவை இவற்றை வெளிப்படுத்துபவருடைய பர்சனாலிட்டியை விரிவுப்படுத்துகின்றன.

67. சுத்தம், காலம் தவறாமை, சுமுகம் ஆகியவை சூழலை உயர்த்துவதால் கூடுதல் வருமானத்தைக் கொண்டுவருகின்றனமாறாக, அசுத்தம்,காலம் தவறுதல் மற்றும் சமூகக் குறைபாடுகள் போன்றவை சூழலைத் தாழ்த்துவதால் வருகின்ற வருமானத்தைக் குறைக்கின்றன.

68. எந்நேரமும் முகத்தில் புன்முறுவலைத் தக்கவைத்துக்கொள்வது எந்த விதமான சூழ்நிலையையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடிய சக்தி படைத்ததாகும்.

69. நம்முடைய உடைமைகளை நாம் சரியாக கவனித்துக்கொள்கிறோம் என்பதற்கு அடையாளம் நாம் அவற்றை நிறைய உபயோகப்படுத்துவதுதான்எந்தப் பொருளையும் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது பார்ப்பதற்குப் புதியதாகவே இருக்கும். ஆனால் இது நம்முடைய கண்ணோட்டம்ஆனால் அவைகளுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் தேய்மானம் வந்தாலும் அவை பயன்படுத்தப்படுவதையே விரும்புகின்றன. பயன்படும்பொழுது அவைகளுக்கு கவனம் கிடைக்கிறதுபயன்படுத்தப்படாமல் புதியதாக இருந்தாலும் அவை உதாசீனத்திற்கு ஆளாவதாக எடுத்துக்கொள்கின்றன.

70. நாம் நெடுங்காலக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது நம்முடைய முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருப்பவை நல்ல தொழில் பண்புகள்தாம்.ஆதாயத்திற்காகக் குறுக்குவழியில் போனால் இறுதியில் அது சிக்கலில் போய்தான் முடியும்

71. ஜாக்கிரதை உணர்வு நம்மை விழிப்பாக வைத்திருப்பதால் அது நமக்கு நல்லது செய்கிறதுஆனால் பயம், கவலை போன்ற உணர்வுகள் நம்முடைய மனஉறுதியைத் தலைகீழாக மாற்றுவதால் நல்லதைவிட நமக்கு அதிகத் தீங்கே செய்கின்றனநல்ல விஷயங்கள்மேல் நாம் காட்டும் ஆர்வம் அவற்றை நம்மை நாடி வரச் செய்வதுபோல் தீய விஷயங்கள் சம்பந்தமாக நமக்கு வரும் பயமும் இந்தத் தீங்கு எல்லாம் நம்மை நாடி வரவும் செய்யும்.

72. வாழ்க்கை ஒரு நிலையான பாணியில் போய்க் கொண்டிருக்கும் பொழுது நம் உடம்பு அதன் சௌகரியத்திற்கு ஏற்றவாறு சில பழக்கவழக்கத்தை உண்டுபண்ணிக்கொள்கிறதுஆனால் நம் வாழ்க்கைச் சூழ்நிலை திடீரென்று மாறினால் சௌகரியமாக இருந்த அதே பழக்கவழக்கங்கள் இப்பொழுது அசௌகரியமாக ஆகிவிடும்.

73. உண்மைஎன்பது ஒரு நேர்கோடு இல்லைமாறாக, பூகோளம்போல உருண்டையானதுமனித அறிவு ஒரு பக்கத்தைத்தான் பார்க்கக்கூடியது.  ஆனால் சத்தியஜீவியம் பல பக்கங்களையும் பார்க்கக்கூடியதுஆகவே மனித அறிவைவிட சத்தியஜீவியம் உண்மையை அதிகம் சார்ந்துள்ளது.

74. விழிப்புணர்வு குறைந்தவர்கள் வாழ்க்கையில் ஒரு தீவிரமான சுவையை நாடும்பொழுது அடுத்தவர்களைத் திட்டி, துன்புறுத்தி, அந்தத் தீவிரச் சுவையை தேடிக்கொள்கிறார்கள்அதன்படி பார்க்கும்பொழுது கொடுமை என்பது விழிப்புணர்வு குறைவிலிருந்து பிறக்கிறதுஎன்று தெரிகிறது.

75. அடுத்தவருடைய கண்ணோட்டத்தை நாம் ஏற்பதுஎன்பது நம்முடைய அறிவு விரிவடைவதற்கு அடையாளமாகும்அப்படி விரிவடைவது நம் அறிவு சத்தியஜீவியமயமாவதை குறிக்கும்.

76. ஆசை இல்லாத மனிதன் எதற்கும் நகரமாட்டான்ஆகவே அவனை நகர்த்துவதற்காக இயற்கை மனிதனுக்குள் ஆசையை விதைத்ததுஆசை இல்லாதவன் நகரமாட்டான்என்றால் அதிக ஆசையை வளர்த்துக் கொண்டவன் கூடுதலாக, சுறுசுறுப்பாக இருப்பான்ஆனால் ஆசை குறைந்த நிலை, ஆசை மிகுந்த நிலைஇவை இரண்டுமே தவறான மனநிலைகள்தாம்இயற்கை ஓர் இடைப்பட்ட மிதமான ஆசை நிலையையே விரும்பும்.

77. நம்முடைய பர்சனாலிட்டியில் மனஉறுதிஎன்பது நம் எண்ணங்களை செயல்படுத்தும் சக்திகொண்டதுஅறிவு நம்மை வழிநடத்துகிறது. உறுதி செயல்படுத்துகின்றதுஉடம்பு நிறைவேற்றுகின்றது.

78. உள்எழுச்சிஎன்பது நம் பகுத்தறிவைத் தாண்டிய மனநிலையைக் குறிக்கிறது. ஆனால் விஞ்ஞானம் பகுத்தறிவைத் தாண்டிய நிலையை பகுத்தறிவு அற்ற நிலைஎன்று குறிக்கிறதுவிஞ்ஞானம் அதை எப்படி வர்ணித்தாலும் ஆக்கப்பூர்வமான வேலைகள் எல்லாமே உள்எழுச்சியில் இருந்து பிறப்பவைதாம்.

79. நம் மூளையிலிருந்து அறிவு பிறப்பதாக விஞ்ஞானம் சொல்வது தவறு.மனித அறிவுஎன்பது தானே சுயமாக, சூட்சுமமாக இருக்கின்ற ஒரு சக்தியாகும். அது நம்முடைய மூளையின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதுநம் மூளையை முன்னிறுத்தி அறிவைப் பின்னிருத்துவது குதிரைக்கு முன்னால் வண்டியை நிறுத்துவது போலாகும்.

80. உடம்பும் உயிரும் சூட்சுமமான ஒரு கயிற்றால் பிணைக்கப்பட்டுள்ளனஅந்தக் கயிறு அறுபடும்பொழுது உடலும் உயிரும் பிரிந்து இறப்பு நேர்கிறது.

தொடரும்.....


 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

"இலட்சக்கணக்காகப் பிரபஞ்சங்களைத் தன் ஓர் அசைவால் பரமாத்மா நிரப்ப முடியும்'' என்று பகவான் சொன்னபொழுது அவர் தாம் பார்த்ததைச் சொல்லவில்லை; தம் நிலையை விவரித்தார்.

பகவான் நிலை பரமாத்மாவின் நிலை.

பரம்பொருளை விளக்கும் பகவான் எழுதுவது சுயசரிதை.

The Life Divineபகவான் சொந்த வரலாறு.

  • சிருஷ்டியை விளக்கும் பகவான் தாம் செய்ததை எழுதுகிறார்.
  •  The Life Divineபிரபஞ்ச வரலாறில்லை; பகவானின் சொந்த வரலாறு.


 


 

 



book | by Dr. Radut