Skip to Content

10.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                                (சென்ற இதழின் தொடர்ச்சி....)      கர்மயோகி

XIV. The Supermind As Creator

Page No.123, Para No.3

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

We need to give an account of this consciousness.

இந்த ஜீவியத்தை நாம் விவரிக்கவேண்டும்.

It must be given to the human mind.

மனத்திற்குப் புரியுமாறு சொல்லவேண்டும்.

For that there should be a relation between them.

அதற்கு இவற்றிடையே தொடர்பு தேவை.

Otherwise it is impossible.

தொடர்பு இல்லாவிட்டால் விவரிக்கமுடியாது.

It must have some identity with the mental being.

மனத்துடன் அதற்கு ஏதாவது தொடர்பு தேவை.

It must have some relation with the mind.

மனத்தின் ஜீவனுடன் தொடர்புவேண்டும்.

Its nature may be a vision.

அது காட்சியாக இருக்கலாம்.

It may be a vision of knowledge.

அது ஞானத்தின் திருஷ்டியாக இருக்கலாம்.

It may not be a dynamic power of knowledge.

அது செயல்திறனுள்ள ஞானமாக இருக்கலாம்.

Then the results will be different.

அப்படியானால் பலன் வேறு.

We could hope for an illumination.

அது ஞானோதயமாக இருக்கும்.

It may not be a greater light and power.

அது பெரிய ஜோதியாகவோ, சக்தியாகவோ இல்லாமலிருக்கலாம்.

They will work for the world.

அவை உலகுக்காகச் செயல்படும்.

This consciousness is a creatrix of the world.

இந்த ஜீவியம் உலகை சிருஷ்டித்தது.

Therefore it won't be a mere knowledge.

எனவே இது வெறும் ஞானமாக இருக்காது.

It will also be a power of knowledge.,

அது ஞானத்தின் திறனாகவுமிருக்கும்.

It is not only a Will to light and vision.

ஞானத்தின் திறனாகவோ, காட்சியின் திறனாகவோமட்டும் அது இருக்காது.

It will be a Will to power and works.

அது செயலின் திறனாகவும், சக்தியின் திறனாகவுமிருக்கும்

Mind too is created out of it.

மனமும் அதனுள்ளிருந்து உற்பத்தியானது.

Mind must have developed out of it.

மனம் அதன் உள்ளிலிருந்து எழுந்தது.

It must be a development by limitation.

வரையறையால் அது வளர்ந்தது.

Therefore mind may resolve back into it.

எனவே மனம் அதை மீண்டும் அடையமுடியும்.

It may be through a reverse development.

அவ்வழி வந்த வழியாகப் போவதாகும்.

It is a development by expansion.

அவ்வழி விரிவடையும் வழியாகும்.

Mind is contrary to Supermind in operation.

செயல்படுவதில் சத்தியஜீவியம் மனத்தைவிட உயர்ந்தது, எதிரானது.

They are settled modes of operation.

மனம் செயல்படுவதில் முடிவான வகையுண்டு.

Mind must be identical with the Supermind.

மனமும், சத்தியஜீவியமும் இரண்டறக்கலந்தவையாக இருக்கவேண்டும்.

It is identical in essence.

இரண்டிற்கும் சாரம் ஒன்று.

The potentiality of mind is concealed in Supermind.

மனம் சத்தியஜீவியத்தினுள் புதைந்துள்ளது.

It is so inspite of the differences.

மாறுபாடிருப்பினும் இது உண்மை.

Mind becomes contrary to Supermind in actual forms.

உருவம் பெறும்பொழுது மனம் சத்தியஜீவியத்தின்று மாறுபட்டது.

Therefore there may be some methods of comparison.

எனவே ஒற்றுமையான அம்சங்களிருக்கவேண்டும்.

There may be other methods of contrast.

வேறுபடுத்திப் பார்க்கும் வேறு வழிகளிருக்கலாம்.

It could be in terms of our intellectual knowledge.

அவை நம் அறிவுக்குரியவையாக இருக்கலாம்.

It may give some idea of Supermind.

அதிலிருந்து நாம் சத்தியஜீவியத்தை அறியலாம்.

That idea may be from our point of view.

அது நம் கண்ணோட்டத்திற்குரியதாக இருக்கலாம்.

So, it may be rational to try these methods.

அம்முறைகளைக் கடைப்பிடிப்பது சரியாக இருக்கலாம்.

It may be also profitable.

அது பலன் தரலாம்.

The idea may be inadequate.

இந்த எண்ணம் போதாது எனவுமிருக்கலாம்.

The terms may be insufficient.

இக்கொள்கைகள் பற்றாக்குறையானதாக இருக்கலாம்.

Still, it may be a finger of light.

இருந்தாலும் இது சுட்டிக்காட்ட உதவலாம்.

It can point onward.

இது வழிகாட்டலாம்.

It may lead us to some distance at least.

ஓரளவு நம்மை இது வழிநடத்திச்செல்லலாம்.

We may hope to tread that way.

இவ்வழி போக நாம் முயலலாம்.

It is possible for mind to go beyond itself.

மனம் தன்னைக் கடக்க முடியலாம்.

It can do so to certain heights.

ஓரளவு அதை மனம் சாதிக்கலாம்.

It is another plane of consciousness.

அது அடுத்தகட்ட ஜீவியம்.

It may receive a higher power.

அதன் உயர்ந்த சக்தியை நாம் காணலாம்.

It may be a modified power.

அது சற்று மாறுபட்டிருக்கலாம்.

They may be of the supramental plane.

அது சத்தியஜீவியமாக இருக்கலாம்.

We can know by illumination.

நாம் அதை ஜோதியால் அறியலாம்.

Or, we may know by intuition.

நாம் அதை ஞானத்தால் அறியலாம்.

It may be a direct contact.

நேரடித் தொடர்பாலும் அறியலாம்.

It may be even an experience.

அது ஆத்மானுபவமாகவுமிருக்கலாம்.

To live in it is a victory.

அங்கு வாழ்வது வெற்றி.

To act in it is also a victory.

அங்கு செயல்படுவது வெற்றி.

Still, it is not humanly possible.

இதுவரை அது மனிதனால் முடிந்ததில்லை.

Page No.124, Para No.4


 

At first let us pause a moment.

சற்று நிதானிப்போம்.

Let us ask whether there is any light from the past.

கடந்தகால ஞானம் ஏதேனும் உண்டா என யோசிப்போம்.

Can we find that light?

ஏதேனும் ஜோதி வழிகாட்டுமா?

This is an ill-explored domain.

இதுவரை எவரும் கண்டறியாத லோகம் இது.

Can that light guide us?

பழைய ஞானம் வழிகாட்டுமா?

We need a name.

இதற்கு ஒரு பெயர் தேவை.

We need a starting point.

நாம் ஆரம்பிக்க ஓர் இடம் குறிப்பிடவேண்டும்.

This is a state of consciousness.

இது ஒரு ஜீவியம்

We have called it Supermind.

இதை சத்தியஜீவியம்என நாம் அழைத்தோம்

The word is not precise.

இது தெளிவற்ற சொல்.

It may be mistaken.

இதைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.

It may be taken for a super-eminent mind.

மிக உயர்ந்த மனம் எனக் கொள்ளும் வாய்ப்புண்டு.

A mind above the ordinary mentality.

மனித மனத்தை விட உயர்ந்தது என நினைக்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.

But not radically changed.

அடிப்படை மாறுதலில்லாததாகக் கொள்ளலாம்.

Or, it can be contrary.

எதிராகவுமிருக்கும்.

It may note what is beyond mind.

மனத்தைக் கடந்ததை அது கண்ணுறும்.

Therefore, it may assume something too vast.

மிகப் பரந்த ஜீவியமாக நினைத்துவிடலாம்.

It may mean the ineffable itself.

சொல்லைக்கடந்த நிலையாகக் கருதிவிடலாம்.

We need a subsidiary description.

அதன் பகுதியானதைக் குறிக்கும் சொல் தேவை.

It should be more accurate.

மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டுவது அவசியம்.

It must limit its significance.

வரையறையிட்டுத் தெளிவுபடுத்தவேண்டும்.

Page No.124, Para No.5


 

The Vedic verses are cryptic.

வேதம் மறைபொருளானது.

There is a help for us about this.

நாம் தேடுவதை அங்குக் காணலாம்.

The Supermind is divine.

சத்தியஜீவியம் தெய்வீகமானது.

It is immortal.

அது அழிவில்லாதது.

We find its gospel there.

அதன் தாரக மந்திரத்தை இங்குக் காணலாம்.

The Vedas contain it.

அது வேதத்திலுள்ளது.

It is concealed in its expression.

சொல்வதை வேதம் மறைத்துச் சொல்கிறது.

There is a veil on it.

வேதத்தின்மீது திரையொன்றுளது.

Some flashes come through the veil.

திரையைமீறிச் சில பொறிகள் வெளிவருகின்றன.

They are illuminating.

அவை பிரகாசமானவை.

It is described as a vastness.

சத்தியஜீவியம் பரந்தவெளியாகக் கூறப்படுகிறது.

Our consciousness is ordinary.

நம் ஜீவியம் சாதாரணமானது.

Its firmaments are limited.

அதன் வானவெளி வரம்புக்குட்பட்டது.

The Supermind is vaster than that.

சத்தியஜீவியம் அதைக்கடந்தது.

There is the truth of being.

ஜீவனில் சத்தியம் உண்டு.

It expresses itself.

அது தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

That truth and that expression are one.

சத்தியமும், அதன் வெளிப்பாடும் ஒன்றே.

They join luminously.

அவை ஜோதிமயமாகச் சந்திக்கின்றன.

There is a truth of vision.

திருஷ்டிக்குச் சத்தியம் உண்டு.

It is inevitable.

அது தவிர்க்கமுடியாதது.

It assures its inevitability.

தவிர்க்கமுடியாது என உறுதி கூறுகிறது.

That truth is formulated.

அந்த சத்தியம் உருவகப்படுத்தப்பட்டது.

It has an arrangement.

அது ஓர் ஏற்பாடு.

Its word and act are defined.

அதன் சொல்லும், செயலும் விளக்கப்பட்டுள்ளன.

There is a result of movement.

சலனத்திற்குப் பலன் உண்டு.

There is a result of action and expression.

பலனும் வெளிப்பாடும் உண்டு.

It is infallible law or ordinance.

அது தவறாத சட்டம். அவசரச் சட்டம்.

The Vedas describe Supermind.

வேதம் சத்தியஜீவியத்தை விளக்குகிறது.

It has some essential terms.

அதற்குச் சில முக்கிய அம்சங்களுண்டு.

Vast all-comprehensiveness is one.

பரந்து விரியும் ஞானம் ஒன்று.

Luminous truth is another.

ஜோதிமயமான சத்தியம் அடுத்தது.

Harmony of being in that vastness is a third.

அப்பரவெளியில் சுமுகம் அடுத்தது.

It is a not a vague chaos.

ஏதோ குழறுபடியான குழப்பமன்று.

Nor is it a self-lost obscurity.

தன்னை இழந்த இருளன்று.

That harmonious truth of being is expressive.

சுமுகமான ஜீவனின் சத்தியம் எடுத்துக் கூறவல்லது.

Truth of Law and act too express it.

சட்டத்தின் உண்மையும், செயலும் எடுத்துக் கூறுகின்றன.

Knowledge offers its own expression.

ஞானம் தானும் வெளிப்படுத்தும்.

These are the essential terms.

இவை முக்கிய அம்சங்கள்.

The Gods are of Supermind.

தெய்வங்கள் சத்தியஜீவியத்திற்குரியவை.

It is their highest secret entity.

அது அவர்களது பெரிய இரகஸ்யம்.

They carry the powers of this Supermind.

சத்தியஜீவிய சக்தி அவர்கட்குண்டு.

They are born of it.

அதிலிருந்து அவர்கள் பிறந்தவர்கள்.

They are seated in it.

அங்கே அவர்கள் வீற்றிருக்கிறார்கள்.

Supermind is their proper home.

சத்தியஜீவியம் அவர்கள் பிறந்த இடம்.

Their knowledge is 'truth-conscious'.

அவர்கள் ஞானம் "சத்திய-ஜீவியம்".

Their action carries the 'seer-will.'

அவர்கள் செயலுக்கு "திருஷ்டியின்-திறன்" உண்டு.

Their conscious-force is turned towards works.

சித்-சக்தி வேலையை எடுத்துக்கொள்கிறது.

It has also turned towards creation.

அது சிருஷ்டியை நோக்கிப்போகிறது.

It has a direct knowledge.

அதன் ஞானம் நேரடி ஞானம்.

It is guided by it.

சத்தியஜீவியம் அவர்களை வழிநடத்துகிறது.

It is a knowledge of the works.

ஞானம் செயலைப்பற்றியது.

It is the essence and the law.

ஞானம் அதன் சாரம், சட்டம்.

It is a knowledge that determines.

அது நிர்ணயிக்கும் ஞானம்.

It determines a will-power.

செயல்திறனை நிர்ணயிக்கும் ஞானம் அது.

It is wholly effective.

அது முழுத்திறன் பெற்றது.

It does not deviate.

அது வழுவாது.

Nor does it falter in its process or its result.

வழியிலோ, பலனிலோ அது வழுவாது.

It expresses in the act.

அது செயலில் வெளிப்படும்.

It has seen the act in its vision.

செயலைத் தன் திருஷ்டியில் அது கண்டுள்ளது.

It fulfils spontaneously.

உடனே பூர்த்தியாகும்.

It is inevitable.

அது தவிர்க்கமுடியாதது.

Light is here one with Force.

ஞானமும், திறனும் இதில் இணைந்துள்ளன.

Light is a vibration of knowledge.

ஜோதி ஞானத்தின் சுடர்.

Its rhythm is that of the will.

அதன் அசைவு திறனுடையது.

Both are one.

இரண்டும் ஒன்றே.

It is so perfectly.

அவை சிறப்பாக இணைகின்றன.

It does not seek.

அது நாடுவதில்லை.

It does not grope.

அது தடுமாறுவதில்லை.

It takes no effort.

அது முயல்வதில்லை.

Its result is assured.

அதன் பலன் நிச்சயம்.

The divine Nature has a double power.

தெய்வீகச் சுபாவத்திற்கு இருவகையான சக்தியுண்டு.

It is a spontaneous self-formulation.

தானே தன்னை அமைத்துக்கொள்ளவல்லது.

It is a self-arrangement.

அது சொந்த ஏற்பாடு.

It wells naturally out of its essence.

அதன் சாரத்திலிருந்து இயல்பாக அது எழுகிறது.

It is the essence of manifestation.

அது சிருஷ்டியின் சாரம்.

It expresses its original truth.

ஆதியின் சத்தியம் அதன் வெளிப்பாடு.

It is a self-force of light.

அது ஜோதியின் சுயசக்தி.

It is inherent in the thing itself.

அது பொருள்களில் பொதிந்துள்ளது.

It is the source of its spontaneous and inevitable self-arrangement.

இயல்பாக, தவிர்க்கமுடியாதபடி சுயஏற்பாட்டின் உற்பத்தி ஸ்தானம் அது.

                                                        Contd......

தொடரும்...

****

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

(Physical organisation) வாழ்வின் அமைப்பு மனிதனுடைய மையம். மௌனமான ஆழ்மனதின் செயல், உயிரைக் காப்பாற்றக்கூடியது அல்லது வாழ்வுள்ள நிலையில் அனுபவிப்பது. கலையுணர்வும், அறிவின் ஆராய்ச்சியும்கூட அதனால் ஒதுக்கப்படுகிறது. தன் போக்கை (occupation) அனுபவிக்க மனிதன் ஒதுக்கிய செயல்கள் திடீரென முளைத்துக் குறுக்கிட்டு, அவனுடைய முக்கிய வேலையில் எழும். இதுபோல் பேரிலக்கியமும் எழுவதுண்டு.

விரும்பி ஒதுக்கிய சக்தி திரும்பவந்து பேரிலக்கியம் எழுதியதுண்டு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாய்ப்புகளை உற்பத்திசெய்வது நம் நோக்கம். எதை நாம் நாடுகிறோம்என்பது எந்த வாய்ப்பை உற்பத்திசெய்கிறோம் என்பதை நிர்ணயிக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக நாம் அதிக வசதியை அனுபவிக்க முடிவு செய்து விட்டோம். எதிர்காலம் அதிகவசதியை அளிக்கப்போகிறது. எனவே எதிர்காலம் அதிகவாய்ப்புகளை உற்பத்தி செய்யும் என்பது திண்ணம்.

ஆசையின்றித் தேடும் அதிகவசதி நமக்கும், நாட்டுக்கும் வளம் தரும்.


 


 


 


 


 


 


 


 


 


 


 


 book | by Dr. Radut