Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னையின் பாதவிந்தாரமே சரணம்! ஸ்ரீ அரவிந்த அன்னை சரணம். எங்கள் வாழ்வில் அனைத்துமே அன்னைதான். நாங்கள் வீட்டின் ஒரு பகுதி கட்டுவோம் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தோம். அன்னைதான் அதற்குரிய சூழலை உருவாக்கிக் கொடுத்தார். நாங்கள் கடன்வாங்கிதான் வீடு கட்டினோம். நாங்கள் ஒருவரிடமும் கடன் கேட்கவில்லை. அவர்களே வீடு ஏறி வந்து கடன் கொடுத்து, எங்களை வீடு கட்டச் சொன்னார்கள். வீடும் நன்றாக அமைந்தது.

என் மூத்தார் பெண். அவளுக்கு மூளையில் T.B. கட்டி இருந்து இருக்கிறது. ஆனால், வெளியில் தெரியவில்லை. கல்யாணம் ஆகி, கர்ப்பம் அடைந்ததும் அடிக்கடி வலிப்பு வர ஆரம்பித்தது. டாக்டரிடம் டெஸ்ட் பண்ணியதில், அவளுக்கு மூளைக்கட்டி இருப்பதாகக் கூறினார். அவர் குடும்பத்தார் அனைவரும் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர். நானும், அவளும், அவள் குடும்பத்தினரும் அடிக்கடி அன்னைக்கு பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். டாக்டரிடம் காண்பித்து மருந்து, மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். பிரசவத்தன்றும் வலிப்பு வந்துவிட்டது. தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். அவள் பிறந்த நாளன்று, அதிகாலையில், ஒருவர் தலையின் மண்டைஓட்டில் ஓட்டை போட்டுக்கொண்டு ஒரு புழு வெளி வருவதாகவும், நான் என் கையினால் அந்த புழுவை அகற்றுவது போலவும் கனவு கண்டேன். அன்று இரவே டாக்டரிடம் சென்று தலையில் ஸ்கேன் செய்ததில் டாக்டர், "மூளையில் உள்ள கட்டி வியக்கும் அளவுக்கு கரைந்து இருக்கிறது''என்றார். எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இந்த அற்புதத்தை நடத்தியது ஸ்ரீ அன்னைதான். ஸ்ரீ அன்னைக்குஆயிரம் கோடி நன்றிகள்!

எங்கள் வாழ்வில் நடந்தது: எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தபையன் உடம்பு பலவீனமானவன். 10ஆம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில்தான் படித்தான். படிப்பும் சுமாராகப் படிப்பான். 10ஆம் வகுப்பு முடித்ததும் DME படித்தான். அப்போதுதான் அன்னையை நாங்கள் ஏற்றுக்கொண்டு இருந்த நேரம். அவன் DME பாஸ்பண்ணியதே அன்னையால்தான். அவன் B.E. படிப்பான் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அன்னைதான் அவனை B.E..யில் பாஸ்செய்ய வைத்தார். இப்போது வேலைக்கும் போகிறான். அவனை இந்த அளவு உயர்த்தியது அன்னை மட்டுமே.

என் நாத்தனார் அரக்கோணம் பக்கத்தில் செஞ்சி, பனப்பாக்கம் என்ற கிராமத்தில் வசித்துவருகிறார். என் நாத்தனாரும் அன்னை பக்தர். அவர் கிராமத்தில் அனைவருக்கும் அன்னையைப் பற்றிச் சொல்வார். அவர்களுடைய பக்கத்து வீட்டிலுள்ள ஒரு பால்காரப் பெண் அன்னையின் தீவிரபக்தை. தினமும் மாடுகளை மேய விட்டுவிட்டு அன்னைக்காக அங்குள்ள பூக்களை பறித்துக் கொண்டு வருவாள்.மாடுகள் தினமும் 1 லிட்டர் பால்தான் கறக்குமாம். அவர் அன்னையின் பக்தர் ஆன அன்றிலிருந்து மாடுகள் 2 லிட்டர் பால் கறக்கிறதாம். இதுவும் அன்னையின் அருள்தான்.

என் மூத்தார் பையன் செல்போன் வைத்திருந்தான். ஒரு நாள் அவன் வீட்டிலேயே யாரோ அதைத் திருடிக்கொண்டு போய் விட்டனர். வீடு முழுவதும் தேடிஆயிற்று. 3 நாட்கள் கழித்து நானும், என் கணவரும் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அப்போது செல்போன் காணாமல் போனதைப்பற்றிச் சொல்லி மிகவும் வருத்தப்பட்டான். அங்கிருந்து நாங்கள் மாம்பலம் தியான மையம் போவதாக இருந்தோம். அதனால் மூத்தார் பையனிடமிருந்து காணிக்கையாக ரூ.11/- பெற்றுக்கொண்டு தியான மையத்தில் அந்தக் காணிக்கையைச் சேர்த்துவிட்டு, எங்கள் வீட்டிற்குத் திரும்பினோம். 10 நாட்கள் ஆகிவிட்டது. இந்த விஷயம் மறந்தும் போய்விட்டது. 10 நாட்கள் சென்று, யார் எடுத்துச் சென்றார்களோ அவர்களே கொண்டு வந்து இவர்கள் வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். யார் எடுத்துச்சென்றார்கள், யார் கொண்டு வந்து வைத்தார்கள் என்று இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. அவர்களுக்கு மிக்கசந்தோஷம், செல்போன் திரும்பக் கிடைத்ததில். இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஸ்ரீ அன்னை தவிர யாரும் இல்லை. அன்னை அருளே காணாமல் போன பொருளைத் திரும்பக் கிடைக்கவைத்தது.

அன்னையின் பாதமே சரணம்! அன்னைக்கு அனேக கோடி நன்றிகள்!!

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பூரணயோகத்தின் சுருக்கம் ஆத்மசமர்ப்பணம். யோகம் என்ற

கட்டிடத்தில் ஆத்மசமர்ப்பணம் ஒரு செங்கல்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தீவிரமான ஆசை தீவிரத்தையும், ஆசையின் திறனையும் இழந்தபின் உயிரற்ற - ஜடமான - வாழ்வாகிறது. ஆனால், அது வாழ்வை முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. நம் போக்கை நிர்ணயிக்கும் திறனுள்ளது. "உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்'' என்ற மந்திரம், நம்மை அதன் பிடியிலிருந்து விடுவித்து, ஆனந்தத்தை உற்பத்திசெய்கிறது. அதனால், "உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்" என Agenda 12, 13இல், அன்னை ஜடத்தைத் திருவுருமாற்றம் செய்ய, (ஜடத்தின் ஜீவியமன்று) எடுத்த முயற்சிகளை விவரித்திருக்கிறார்.

உயிரற்ற ஜடம் மாறுவது திருவுள்ளம்.


 



book | by Dr. Radut