Skip to Content

04.லைப் டிவைன் - கருத்து

"The Life Divine" - கருத்து

மனம், வாழ்வு, ஜடத்தில் அவற்றின் ஆரம்பத்திலிருந்து அறியாமைக்குரிய காரணம் காணப்படவில்லை.

. "1862இல் அமெரிக்காவில் ஏழைகள் (slum dwellers) ஏழு வாரத்தில் வீடு,வாசல் பெற்று மத்தியதர மக்களானார்கள். கூலி 10 மடங்கு அதிகம்.பயிரிட விரும்புகிறவர்க்கு 160 ஏக்கர் நிலம் இனாமாகத் தந்தனர். படகு வலித்தவன் 10 வருஷங்களில் ஆலை முதலாளியானான்" என்று வரலாற்று ஆசிரியர் Paul Johnson பால் ஜான்சன் எழுதுகிறார்,

"அன்று அமெரிக்காவில் வறுமையானவன் தன்னையே நொந்துகொள்ள வேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் பொருளீட்டாதவன் என்றும் சம்பாதிக்க மாட்டான்''.

. மனிதனுக்கு, கர்மம், வறுமை, நோயில்லை. அவனே அவற்றை நாடினால் அவனை ஆண்டவன் உள்பட எவரும் தடுக்க முடியாது என்பது நெடுநாட்களாக அறிஞர், உலகைப்பற்றிக் கூறுவது. அதன் அடிப்படை யோகத்தத்துவம் மேலே காணப்படும் கூற்று.

. மனத்திலும், வாழ்விலும், ஜடத்திலும் அறியாமையில்லை எனில், அறியாமை மனிதன் விரும்பி நாடுவதாகும்.

. Mind and Supermind என்ற அத்தியாயம் கீழ்க்கண்டவற்றைக் கூறுகிறது.

. மனம் சத்தியஜீவியத்தின் உபகருவி.

. இதனால் முழுமையைக் காண ஒரே பார்வையில் முடியாது. ஆனால் இரு பகுதிகளாகக் காண முடியும். மனத்தில் அறியாமையில்லை. மனம் ஒரு புறத்தைக் காண மறுத்தால் அறியாமை ஏற்படும்.

. ஒரு புறத்தை மட்டும் காண முடிவு செய்யும் மனம் சத்திய ஜீவியத்துடனுள்ள தொடர்பை இழந்துவிடுகிறது. அது அறியாமையின் ஆரம்பம்.

. தீராத பிரச்சினையில்லை; தீர்க்காத பிரச்சினையுண்டு. முடிவில்லாத சிக்கலை ஆராய்ந்தால் முடிவு தெரியும். "அதை நான் ஏற்க முடியாது'' என்பார் பிரச்சினைக்குரியவர். தீர்வுண்டு. "என் இஷ்டப்படி தீர்வு வேண்டும்'' என்று வற்புறுத்தினால் தீர்வில்லை என்பதே உண்மை.

. இக்கருத்து எந்த நாட்டிற்கும் பொருந்தும். உதாரணமாக, அணுகுண்டு ஒழிப்புத் திட்டம் 50 ஆண்டுகளாக முடிவு பெறாமலிருக்கிறது. ஏன்? முடியவில்லையா? என்ன தடை? அணுகுண்டு வைத்துள்ள அரசுகள் அதை விட்டுக்கொடுக்க இசையவில்லை. இது ஒரு பிரச்சினையாகுமா?

தீர்க்க முடியாததே பிரச்சினை. தீர்க்க விரும்பாதது பிரச்சினை இல்லை. பிரச்சினை அறியாமையின் சின்னம். அறியாமை எங்குமில்லை. நாமே விரும்பித் தேடுவது

Taste of Ignorance.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

திரும்பத் திரும்ப வரும் செயல்கள் தங்கள் முத்திரைகளைத் தாங்கி வரும். அவற்றின் உருவங்களும் தெளிவாகத் தெரியும்.அன்னையிடமும் திரும்பத் திரும்ப வரும். அதன் குணம் வேறு.

திரும்ப வருவது திரிந்து வரும்.


 



book | by Dr. Radut