Skip to Content

06. சாவித்ரி

சாவித்ரி

P.64 In her fancies of the moment and its mood.

அவள் நினைவும் நேரத்தின் வேகமும்.

. இவ்எளிய உலகின் எழில் நடை.

. ஊடுருவும் பார்வைக்கு அவற்றின் ஆழமும் விநோதமும் தெரியும்.

. இயற்கையின் எளிய ரூபங்கள் உண்மையில் அற்புதத்தின் அலங்காரம்.

. சாட்சியின் பார்வை வலிமையின் அசைவைக் காணும்.

. அவள் பிரபஞ்ச நர்த்தனம் திரை மறைவிலிருந்து எழும்.

. எழுச்சி தரும் நிகழ்ச்சி, ஆன்மாவுக்குரிய தண்டனை.

. அவள் சக்தி நடத்துகிறது; ஆதரிக்கும் அவள் கரம் அழிக்கும்.

. மோனத்தில் அவள் சொல், நம் இதயக்கதவைத் தட்டும்.

. சிகரத்தைக் கடந்த சிறந்த மௌனம்.

. அவள் அடியும், நுனியும் ஆகர்ஷிக்கும் நம் ஆன்மா.

. வாழ்வெனும் நம் ஆடையை புனையும் அவள் செயல்.

. நம்மைக் கண்டும், இழந்தும் நிற்கும் அவள் முழுமையான புனிதம்.

. இனிமையும், கசப்பும்; பெருந்தன்மையும், கயமையும்.

. பயங்கர அழகின் பவித்திரம்.

. பிரபஞ்சத்தின் அவள் கட்டிய பிதிராஜ்ஜியம்.

. அவளுடைய சூட்சுமமான பெரிய சட்டங்கள் அவனை ஆட்கொள்ளும்.

. அவள் மடியில் தவழும் குழந்தை அவன் ஜீவியம்.

. அகன்ற அவள் வீச்சு அவன் கருத்து நடம் செய்யும் மைதானம்.

. அவள் அகன்ற சோதனைக்கு அவன் ஜீவன் ஆராய்ச்சிக்கூடம்.

. காலத்தின் ரூபங்களை ஞானத்துடன் கட்டிப் போடுபவள்.

. குறுகிய மனத்தின் பெருகி வரும் தவறு.

. விதியின் தோற்றமான விளையாட்டான சமயம்.

. மரணமெனும் ஆட்டம்; வேதனை எனும் இருள்.

. அழியாத ஜீவனின் மாறிய போராட்டம்.

. புவியெனும் முழுமையில் ஆத்மா எனும் சூட்சும அணு.

. அவள் கைவண்ணத்தின் வர்ணம் அவன் உடல்.

. மரணத்தின் அரங்கில் உயிரோடுள்ள ஆத்மா.

. ஜீவனின் சந்துபொந்துகள்மூலம் அவன் காலத்தைக் கடந்தான்.

. இருளிலிருந்து மரணமிலா ஜோதிக்கு அவளைக் கொண்டு சேர்த்தான்.

. இப்பெரும் சரணாகதி அவன் சுதந்திரத்தின் புனிதச் சிகரம்.

. பிரபஞ்சத்தைக் கடந்த அவனது சக்தி அவளைச் சரணடைகிறது.

. பிரபஞ்ச அஞ்ஞானமெனும் அவளுடைய புதிர்.

. அவளுடைய புரியாத புதிர்.

. அழியும் அவதியில் எழுந்த ஜீவன்.

. அவளிட்ட அச்சில் அவன் தன்னை வார்க்கிறான்.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதப் பூரணம் (perfection) என்பது குறையான நிலையில் பூரணமான வெளிப்பாடு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வின் அமைப்பு முறையைச் சொல்லி, சத்தியஜீவிய அமைப்புக்கு நம்மை பகவான் போகச் சொல்லும்பொழுது,இடையேயுள்ள அமைப்புகளை - உணர்வு, மனம் -புறக்கணிக்கிறார். ஏனெனில், உடலின் அமைப்பு, உண்மையில் மனத்தின் அமைப்பாகும். மனமே ஜடத்தை ஆள்வதால் அது உண்மையில் மனத்தின் அமைப்பாகும்.

முடிவான கட்டமே முதற் கட்டம்.


 


 



book | by Dr. Radut