Skip to Content

13.நாமம் ரூபத்தின் சொரூபம்

நாமம் ரூபத்தின் சொரூபம்

கல்லூரி நாட்களில் மாணவர்கள் தலைவராகவோ, தொண்டராகவோ இருப்பதுண்டு. அப்படித் தொண்டராய் வேலை செய்த மாணவனுடைய தலைவர் தாமோதரன். இவர் பெரும் பணக்காரர். 50 ஆண்டுகளுக்குமுன் கலப்புத்திருமணம் செய்து பஸ் ஓனரானவர்; தலைவர்; சாந்தமானவர்; அதிர்ந்து பேசாதவர்; வேலையைச் சிறப்பாக செய்பவர். மாணவன் தலைவரை 3 மாதங்களுக்கொருமுறை சந்திப்பான். வேறு எந்த தொடர்புமில்லை. அந்த நாளில் நன்கொடை ½ ரூபாய் அதிகம். 5 ரூபாய் கொடுப்பவரில்லை. யாரோ ஒருவர் அப்படிக் கொடுப்பார். இத்தலைவர் சாந்தமானவர், பெரும் பணக்காரர்என்பதால் மாணவன் இவருடன், இவர் நண்பர்களிடம் பணம் வசூல் செய்யப் போகும்பொழுது ஒருவர் 50/- ரூபாயும், அடுத்தவர் 25/- ரூபாயும், மற்றவர்கள் ரூ.10/-உம் கொடுத்தனர். அது மாணவனுக்கும், தலைவருக்கும் ஆச்சரியம். அது அவர்கள் அனுபவத்திலில்லை.

20 ஆண்டுகள் கழித்து, மாணவன் செய்த தொழிலில் பாங்கில் 3000/- ரூபாய் கடன் கேட்டான். பாங்க் அவனுக்கு 10,000/- ரூபாய், அவன் கேட்காமல், அவன் அறியாமல் சாங்ஷன் செய்தது. அந்த பாங்க்கின் தலைவர் பெயர் தாமோதரன். தம் வாழ்வில் இதுபோல் தொடர்பை அறியாத பெயரே அவர் கண்டதில்லை.

பெயரை நாமம் என்கிறோம். ஆன்மீகச் சட்டப்படி நாமம் என்பது ஆன்மாவின் ரூபம்; அதாவது உருவம். ஆன்மா தான் பெற்ற ரூபத்திற்குரிய சுபாவம் உடையதாக இருக்கும். சுபாவம் ஒரு விஷயத்தில் வெளிப்படுவது குணம். ஆன்மா என்பது பரமாத்மாவின் பகுதி. பரமாத்மாவின் ரூபத்தை சுயரூபம் என்பர். பேச்சுவழக்கில் சொரூபம்என்பர். "உன் சொரூபத்தைக் காட்டிவிட்டாய்''எனக் கோபமாகக் கூறுவோம். சொரூபம் பெருந்தன்மையாக, அதிர்ஷ்டமாக, செல்வமாக இருக்கும். கோபமாக, கருமித்தனமாக, பொறாமையாக இருக்கும். இது ஆன்மா ஏற்ற அகந்தையின் இருபுறம்.

- நாமம் ரூபத்தின் சொரூபம்.

- தாமோதரனின் சொரூபம் அதிகச் செல்வம்.

- தான் விரும்பியவரை மணக்கத் தவறினால், அதே பெயருள்ளவரை மணப்பதுண்டு. வாழ்வு தவிர்த்த திருமணத்தை மனம் ஆழ்ந்து போற்றும் தன்மையிது.

*******


 



book | by Dr. Radut