Skip to Content

05.சாவித்ரி

சாவித்ரி

P.53 Too seldom is the shadow of what must come.

எதிர்கால நிகழ்ச்சிகள் எட்டிப்பார்க்கும் நிழல்.

. இரகஸ்ய உணர்வு க்ஷணத்தில் பெறும் ரூபம்.

. புலப்படாதது தரும் அதிர்ச்சியான புத்துணர்வு.

. பதிலிறுக்கப் பலரில்லை.

. பிரபஞ்சத்தை இயக்கும் பிரம்மாண்டமான உறுதி.

. புலனறியும் புது ரூபம்.

. உலகை அறியும் உள்ளுணர்வு.

. நமது எல்லையான கூட்டமான வட்டம்.

. பார்த்து, தொட்டு, நினைத்து யூகிப்பது.

. அரூபியின் ஜோதி அரிதாக மலரும்.

. தீர்க்கதரிசனம் விழித்தெழுந்தது.

. புறம் நமது புலன்.

. அழிந்துபோன காலம் ஆதரவான பின்னணி.

. ஆத்மா மனத்துள் சிறைப்பட்டுள்ளது; நாம் நம் செயலின் அடிமை.

. பார்வையின் திரையை விலக்கி விவேகத்தின் சூரிய ஜோதியை எட்ட முடியாது.

. விலங்கு மனத்தின் விபரீத வாரிசு.

. மனிதன் இயற்கையின் இரும்புக் கரங்களின் குழவி.

. நகரும் மணித்துளியின் நளின வாழ்வு.

. குறுகிய நியாயம் குலவும் நிகழ்காலம்.

. பேயான கடந்தகாலம் பெயர்ந்துவரும் நினைவு.

. எதிர்காலம் ஏகவேகமாக விலகுகிறது.

. காண்பது கற்பனைக்குரிய உடை, முகமன்று.

. நிலையற்ற சிறு சக்தி நிலையான ஆயுதம்.

. எதிரான சந்தர்ப்பத்தின் பலனைக் காக்கிறான்.

. உழலும் அறியாமை அறிவுக்குத் துணை.

. செய்ததின் பலனை செறிவாக சேர்ப்பது.

. எண்ணத்தின் பலனை எடைபோட்டுப் பார்க்கிறான்.

. என்ன பலன் வரும், எப்பொழுது வரும் என அவன் அறியான்.

. முடிவாகப் பிழைப்பானா எனவும் அறியமாட்டான்.

. மறைந்த விலங்கென மறைவானா எனவும் தெரியாது.

. அரசாண்ட இடத்திலேயே அழிவானா?

. வாழ்வின் கருத்து அவன் அறியாதது.

. அழியாத சிகரத்தின் அமரர்கள்.

. காலத்தையும், இடத்தையும் கடந்த வாழ்வு.

. சிந்தனையிலிருந்து விடுபட்ட வாழ்வின் தலைவர்கள்.


 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

பகுத்தறிவுக்கு ஒவ்வாததுஎன்பதால், அருளின் செயலை மனிதன் பிடிவாதமாக எதிர்க்கிறான். அருள் அவன் பகுத்தறிவுக்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. தனக்குப் பாதகமானது (அம்பாள் வெற்றிலைப் பாக்கு எச்சில்) என்பதில் அருளைக் காண்பதே விவேகம்.

வெற்றிலைப் பாக்கு எச்சிலில் அருளைக் காண்பதே அதிர்ஷ்டம்.


 


 



book | by Dr. Radut