Skip to Content

09.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....) கர்மயோகி

853) உனக்குரியதை அனுபவிக்காமலிருப்பதும், உரிமை இல்லாததை அனுபவிக்க விரும்புவதும் மன்னிக்க முடியாதது. (கடைசிவரை ஏற்றுக்கொள்ளாததால் அது பூர்த்தியாகாமல் இருக்கிறது).

உள்ளதை உள்ளபடி ஏற்பதவசியம்.

. சாப்பாட்டை அதிகமாக அனுபவிப்பவன் சாப்பாட்டுராமன். அவன் அல்பாயுசு.

. அவனுக்கு இல்லாத வியாதிகள் வரும்.

. USAஇல் 30% மக்கள், 8 கோடி பேர் overweight வயதிற்கு மீறிய எடையிருப்பதால் இதயக்கோளாறு, சர்க்கரைவியாதி, B.P. என்ற நோய்களால் வதைகின்றனர்.

. அளவுக்குமீறி அனுபவிப்பது தவறு எனில் அளவுள்ளவரை அனுபவிக்காததும் தவறு.

. வசதியுள்ளவன், 'ஆன்மீகம் உயர்ந்தது' என்பதால் ஒரு வேளை சாப்பிட்டால் அவன் வயிறு நாள் முழுவதும் அலறும். அவன் வயிற்றைப் பட்டினிபோட அவனுக்கு உரிமையில்லை.

. அளவுக்குமீறி சாப்பிடுவது வியாதி என்றால், குறைத்துச் சாப்பிடுவதும் வியாதியை வரவழைக்கும்.

. கற்பனையாகச் சிலவற்றைக் கருதுவோம்:

. The Life Divine உயர்ந்த நூல். அதனால் நாமெல்லாம் அதைப் படிக்கக் கூடாது.

. கல்வி உயர்ந்தது. அளவோடு - 10ஆம் வகுப்பு - படிக்கவேண்டும். அதற்குமேல் அதைப் படிப்பது சரியில்லை.

. உயர்ந்த நாற்காலிகளை வாங்கிப்போட்டு, அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது.

. ஜனநாயகம் சிறந்தது. எவரும் MLAக்கு மேற்பதவியை நாடக்கூடாது.அது பேராசையாகும் எனில் நாட்டில் அரசு இருக்காது.

. பட்டு உயர்ந்தது என்பதால் அதை உடுத்தக் கூடாது.

. இவள் அழகி, உயர்ந்தவள். அதனால் இவளை மணப்பது அவளை மட்டமாக்குவதாகும் என நினைத்தால் அவள் பெண்மை பூர்த்தி ஆகாது.

. அன்னையின் காரை எவரும் பயன்படுத்தாமல் பூட்டி வைத்தபொழுது, அன்னை "பொருள்களைப் பயன்படுத்துவதே அவற்றிற்கு நாம் செய்யும் பூஜை''என்றார்.

. இது உயர்ந்த பேனா. அதனால் இதனால் எழுதக் கூடாது.

. மேற்கண்டவை பல அர்த்தமற்றவையானாலும், இதுபோன்ற பழக்கங்கள் நாட்டில் உலவுகின்றன.

. அதனால் மனிதன் பிறப்பு பூர்த்தியாகாமலிருக்கிறது என்பதை பகவானும், அன்னையும் பலவாறு எடுத்துக் கூறியுள்ளனர்.

. அளவுக்கு மீறுவது தவறு எனில், குறைவதும் தவறாகும்.

*******

854. மனிதனின் பரநலம் (selflessness) தெய்வீகச் சுயநலமாக (selfishness) மாறுவது ஆன்மீக முன்னேற்றம்.

மனிதனின் பரநலம் இறைவனின் சுயநலம்.

. சுயநலம் குறுகிய பகுதி.

. பரநலம் பெரிய பகுதி.

. மனிதன் சிறியவனானாலும், பெரியவனானாலும் பகுதியே.

. ஆண்டவன் என்றும் முழுமை.

. ஆண்டவன் சிறியதாக இருக்க முடியாது.

. இறைவன் சிறியதாக இருந்தாலும் அவன் முழுமை.

. பகவான் சுயநலத்தைக் கண்டித்ததில்லை.

. சுயநலத்தைப் பற்றிப் பேசினால் "இறைவனே முழுச்சுயநலமி" என்பார்.

. இறைவன் எல்லாக் காரியங்களையும் தன் பிரியப்படியே நடத்த விரும்புவதால் அவனே பெரிய சுயநலமி என்கிறார்.

. ஸ்தாபனத்தின் சுயநலம் உறுப்பினர்களின் பெருநலம்.

. நாட்டுப்பற்று நம்மைக்கடந்தது என்பதால் நம் பரநலத்தையும் கடந்தது.

. குடும்பத்தைச் சுயநலமாக நடத்துபவர், தன்னைப் புறக்கணிப்பார்.

. அடுத்த கட்டம் புரிவது கடினம்.

. எதிரியின் சுயநலம் என் பரநலத்திற்கு உறுதுணை. அவனுடைய சுயநலமே நான் என் சுயநலத்தைக் கடக்க உதவுகிறது. அதனால் துரோகம் செய்பவர் ஆண்டவன் இட்ட கட்டளையை அவனியில் செயல்படுத்துபவராவர்.

எதிரியை நம்புவது மனித சுபாவம்.

ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்பும்.

எதிரியை நம்புவது அறிவீனம். அவனை நம்பினால் அவன் நமது சுயநலத்தைக் கரைப்பான்.

எதிரி எதிரேயுள்ள இறைவனின் பிரதிநிதி.

. எந்த அளவுக்கு எதிரியின் அட்டூழியத்தை மனம் ஏற்கிறதோ, அந்த அளவுக்கு மனிதன் இறைவனை ஏற்கிறான்.

. இவை முரண்பாடாய்த் தெரியும்.

. அவை உண்மையில் உடன்பாடே.

. மனிதனுக்கு முரண்பாடு, இறைவனுக்கு உடன்பாடு.

தொடரும்.....

*******


 

 


 

ஜீவிய மணி

சூரியோதயத்திற்குமுன் நிலம் தெளியும்.


 


 



book | by Dr. Radut