Skip to Content

13. Agenda

 "Agenda"

It used to be one of Infinity.

உயர்ந்த சாந்தி, நம்பிக்கை (certitude) உடலும் மாறும்.

  • பணம் வந்தால் வசதி வரும்; ஏழ்மை மாறும்.

வரும் பணம் அளவு கடந்து வந்தால், சிறிய வீடு பெரிய வீடாகும்.

பணம் வருவதால் பண்பு வரவேண்டுமானால், பணத்தின் அளவு

அதிகமானால் போதாது, பணத்தின் தன்மை உயர்வாக இருக்க வேண்டும்.

அரிசி வியாபாரத்தில் வரும்பணம், பழக்கடை பெரியதாவதால் வரும் பணம் பண்பைப் பெற்றுத் தாராது.

படிப்பால் வரும் வருமானம், சிறந்த தொழில் வளர்வதால் பிரபலம் வந்து பெருகும் வருமானம், படிப்பையும், அத்துடன் பண்பையும் சேர்த்துக் கொண்டு வரும்.

  • தேஜஸ் அது போன்றதே.

  • போலீஸுக்கு அடங்காத அராஜகம், ரிஸர்வ் போலீஸுக்கும், ஸ்பெஷல் போலீஸுக்கும் அடங்கும். இராணுவம் வந்தால், எதுவும் அடங்கும்.

  • பணம் வந்தால் ஏழ்மை போகும், நல்ல பழக்கம்வரும்எனக் கூற முடியாது.

கெட்ட பழக்கம் தவறாமல் வர வாய்ப்புண்டு.

பணம் வரும்வழி, வழியில் உள்ள பழக்கங்களைச் சேர்த்துக்கொண்டு வரும்.

பணம் வந்து, அதனால் படிப்பு வந்து, அப்படிப்பால் வரும்பெரிய வருமானம் பக்குவத்தையும் கூடவே கொண்டுவரும்.

  • அறிவு முகப்பொலிவைத் தரும்.

அது ஆத்ம ஞானமானால், அகம் பொலிவு பெற்று, முகத்தில் மிளிரும். ஞானம் உயர்ந்து பிரம்ம ஞானமானால், அதை "பிரம்ம வித்யா' எனக் கூறுவர்.

உயர்ந்த ஞானம் உடலையும் தொடும்; உடல் பளபளக்கும்.

  • சாந்தி குணத்தைச் சாந்தப்படுத்தி, "சாது' என மாற்றும்.

சாந்தம் மேலெழுந்தவாரியானால், சாது ஒரு நாள் மிரண்டு காடு கொள்ளாத கோபம் எழும்.

சாது மிரண்டு எழாத அளவு சாந்தம் உண்டு.

அது குணத்தைக் கட்டுப்படுத்தாமல், சாந்தமாக மாற்றும்.

சாந்தி உயர்ந்து, அதனால் நம்பிக்கை எழுவதை certitudeஎன்கிறார் அன்னை.

அது உடலையும் தொடும்; உடல் மிருதுவாகும்.

உடல் திருவுருமாற அச்சாந்தி உதவும்.


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

தாழ்ந்த வாழ்வை விட்டு மனிதன் உயர்ந்த வாழ்வை

நாடினால், எதையெல்லாம் விட்டுவிட்டு உயர்ந்ததைத்

தேடினானோ, அவையெல்லாம் இந்த வாழ்விலும் பெரிய அளவிலிருக்கும்.


 

விட்டு நகர்ந்ததும் தொட்டுத் தொடரும்.


 


 


 


 


 



book | by Dr. Radut