Skip to Content

6. சாவித்ரி

சாவித்ரி


 

P.85 The leaden grip of Matter it can break.

ஜடத்தின் உடும்புப் பிடியைத் தகர்க்கும் அடி.


 

  • காலனின் கோபக் கனலைக் கடுமையாக உதாசீனம் செய்தாள்.

     

  • க்ஷணத்தின் செயல் யுகத்தின் சிருஷ்டியாகும்.

  • எண்ணத்தின் எழுச்சி முடித்த முடிச்சு.

     

  • லேசான சொல் பாராமுகமாக எழுப்பிய பாரம்.

     

  • ஊமையாக உருண்டு திரண்ட சக்தி கட்டவிழ்ந்த நிலை.

     

  • புதிரான சமாதிக் குகையின் உட்புறம்.

     

  • உடன் உறக்கம் கைக்குத் தரும் வலிமை.

     

  • மூச்சு நின்றது. இதயத் துடிப்பும் நின்றது.

     

  • காணாததைக் கண்டு, நடக்காததை நடத்தியது.

     

  • பேசாத எண்ணம் பாதையின்றிப் போய்ச் சேர்ந்தது.

     

  • மௌன உறுதி நிகழ்ச்சிகளை மௌனமாக நடத்தியது.

     

  • கை, கால் அசையாமல் காத தூரத்தில் செயல்படும்.

     

  • மலை போன்ற அஞ்ஞானம், இக்குட்டையான வாழ்வு.

     

  • தீர்க்கதரிசனம் ஒளிப் பிழம்பாய் பிரகாசிக்கும்.

     

  • மதுவின் ஆட்டமும் ரௌத்தாக்கினியும்.

     

  • உடனுள் தேவதை எழுந்து உலுக்கினாள்.

     

  • சர்வ ஞானமும், சர்வ வல்லமையும் உள் நுழைந்தன.

     

  • மறைந்துள்ள மலைபோன்ற மகேசனின் சக்தி எழுந்தது.

     

  • ஒளிமயமான சக்ரவர்த்தியாய்த் தன்னுலகில் வீற்றிருந்தது.

     

  • இக்கடுமையான லோகத்திற்கும் மனம் அரசாள வரும்.

     

  • எண்ணமெனும் தெய்வீக தர்க்கம்.

     

  • மாறும் நேரத்தில் தாவும் அசைவு.

     

  • சிருஷ்டியின் ஆச்சரியம் வரவில்லை.

     

  • ஜடத்தின் கண்மூடிச் செயன் திறமை.

     

  • அனைத்தும் அதிசயம்; அதிசயத்தால் மாறும்.

     

  • இரகஸ்ய இயற்கையின் வமைமிக்க எல்லை.

     

  • ஜடமழிந்த பெருவெளியின் ஓரத்தில்,

     

  • கட்டுக்கடங்காத பெருமை நிறை சக்தியின் சாம்ராஜ்யம்.

     

  • அங்கு மனம் வாழ்வின் ரூபங்களை வரைகின்றது.

     

  • ஆத்மா தன் எண்ணங்களை அதன் சக்தியால் பூர்த்தி செய்கிறது.

     

  • மலை போன்ற சொற்கள் மகிமையான பார்வை தரும் நிஷ்டை.

     

  • பிரிந்த லோகங்களின் தெரியாத தொடர்பு,

     

  • அவள் சட்டத்தை ஏற்கும் கற்றுக்குட்டி.

     

  • புதிரான அவள் உலகின் பெரும் ஜோதியைக் கொணர்வாள்.

     

  • அவன் நிற்கும் இடம் இது. மாய்ந்த உலகில் அவனடிகள்.


 

***

     

     

    ஸ்ரீ அரவிந்த சுடர்


     

    கெட்டது என்பது நல்லதால் வெளிப்படுத்த முடியாத முழுமையின் மற்றொரு பகுதியை வெளிப்படுத்துவது என்ற யோகக் கருத்தை சமூகம் அறிந்ததால், இந்த நூற்றாண்டில் சமூக முன்னேற்றம் வளர்ந்தது.


     

    கெட்டதை நல்லதாகக் கொண்டதால் உலகம் முன்னேறுகிறது.


     

     



book | by Dr. Radut