Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.136 The staring visage of her ignorance

அறியாமையின் திருமுகம் ஆழ்ந்து நோக்கும்

  • ஏழ்மையான ஆடையற்ற அவளுடல்
  • அவளறையின் சேற்றிலிருந்து ஊர்ந்து முதலில் எழுந்து வந்தாள்
  • இறுகிய ஜடம் ஊமையாக அவள் கிடந்தாள்
  • அதன் இருண்ட மயக்கமும், குறுகிய வெளியும் அவளை ஆட்டிப் படைத்தன
  • ஒளியால் சிதைக்க முடியாத இருளால் அவள் பிணைக்கப் பெற்றாள்
  • உயர்மட்ட உதவியாக வரும் ஒளியிருப்பதாகத் தெரியவில்லை
  • மேல் நோக்கிப் பார்க்கும் நோக்கு அவளுக்குரியதில்லை
  • பயமறியாத பாதங்கள் நடை பயிலுவதை மறந்தன
  • பெருமையும் பேரானந்தமும் உதாசீனமாக ஒதுக்கப்பட்டன
  • காலமெனும் அரங்கில் கரணம் போடும் பாங்கு
  • பொறுத்து வாழும் பொறுமையற்று உழல்பவள்
  • படபடக்கும் பரந்த இடம் தேடும் பாங்கு
  • விவரமற்ற புல்வெளி விழுங்கும் ஒளியற்ற அரங்கம்
  • வீடிற்ற, உடலில்லாத, பெயருமற்ற தாய் தோன்றியது
  • உருவமும் திருஷ்டியுமற்ற துணியால் கட்டுப்பட்ட மனம்
  • ஆத்ம பெயர்ச்சிக்கு அது தேடும் உடல்
  • அதன் பிரார்த்தனை பலிக்கவில்லை, எண்ணம் தடுமாறியது
  • சிந்திக்க முடியாத, வாழும் உரிமை பெறாத
  • இருண்ட குட்டையுலகில் அது நுழைந்தது
  • இந்தக் கசந்த மந்திரம் உற்பத்தியான இடம்
  • வாழ்வும் ஜடமும் சந்திக்கும் மங்கிய சிறு உலகம்
  • அரைகுறையாகக் காணும் அர்த்தமற்ற அவலங்கள்
  • பிடிபடாத ஆரம்பம், இழந்த முடிவுகள் தொடரும்
  • வாழ்வு பிறந்து, வாழுமுன் இறந்தது
  • ஜடமான பூமியோ, நிலையான அசைவோ அற்றது
  • மனமற்ற உறுதியின் தழல் பெற்ற சக்தி
  • தன்னைத் தானே உணர முடியாத இருள் மங்கலாகத் தெரியும் தன்னுடல்
  • சூன்யத்திலிடும் போராட்டம் போல்
  • உள்ளதனைத்தும் உயிர் பெற்ற வினோத லோகம்
  • சக்தியுள்ள எண்ணம் காரணமாகவோ, சட்டமாகவோயில்லை
  • அர்த்தமற்ற சிறுகுழந்தையின் ஆனந்த ஆட்டத்திற்கான ஆர்ப்பாட்டம்
  • மினுமினுக்கும் மனம், சிறு குழந்தையின் தாறுமாறான மின்னல்
  • உருவமற்ற சக்திகள் உரிமையற்று ஓட்டும்
  • அடுப்பில் எரியும் நெருப்பை ஆதவனாகக் கொள்ளும்
  • கண்கட்டிய சக்தி சிந்தித்துச் செயல்பட இயலாத

தொடரும்....

*******



book | by Dr. Radut