Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/58) அகந்தையின் உணர்வுகள் ஆன்மாவுக்கு உழைப்பதில்லை.

  • அகந்தை கரைந்து குணங்கள் அழிந்தால் யோகம் பூர்த்தியாகும்.
  • குணங்கள் தமஸ், ரஜஸ், சத்வா ஆகும்.
  • குணங்கள் இயற்கையெனும் பிரகிருதி.
  • குணங்கள் அழிவது பிரகிருதியின் ஆத்மா - சைத்ய புருஷன் - வெளிவர உதவும்.
  • அகந்தை கரைந்தால் மனிதன் பிரபஞ்ச முழுவதும் பரவுவான்.
  • அகந்தை கரைந்தவுடன் மேல் மனம் விலகி நாம் அடி மனம் செல்கிறோம்.
  • பிரபஞ்சத்தையடைந்த பின் அதைக் கடந்து பிரம்மத்தையடைய வேண்டும்.
  • எனவே யோகத்தைச் சுருக்கிக் கீழ்கண்டவாறு கூறலாம்.
    அகந்தை அழிந்து, பிரகிருதியின் சைத்தியம் வெளி வருவது யோகம்.
  • முன்னோர் தேடியது மோட்சம்.
  • புத்தர் அகந்தையை அழித்து நிர்வாணம் எய்தினார்.
  • அகந்தையை அழித்த பின் பௌத்தம் பிரம்மத்தையும் கரைக்கச் சொல்கிறது.
  • பிரம்மத்தை அகந்தையைக் கரைத்தது போல் கரைக்க முடியாது.
  • அகந்தை நாம் ஏற்படுத்தியது என்பதால் நம்மால் கரைக்க முடியும்.
  • பிரம்மம் மனம் ஏற்படுமுன் இருந்ததால், மனத்தால் பிரம்மத்தைக் கரைக்க முடியாது.
  • பிரம்மத்தைப் பற்றி நம் கருத்தைக் கரைத்தால், நாம் பிரம்மம் கரைந்து போயிற்று என நினைக்கிறோம்.
  • என்றாலும் பௌத்தம் பெற்ற சித்தி பெரிய சித்தி, மிகப்பெரிய சித்தி.
  • இதனால் பிறவி அழியும்.
  • பிறவி அழிவதே மோட்ச சித்தி.
  • பிறவி அழிவதே கணக்கில் சேராத அர்த்தமற்ற சிறிய சித்தி என்கிறார் பகவான்.
  • எண்ணமற்றபின் மௌனம் Silence குடி கொள்ளும்.
  • செயலற்றபின் மௌனத்தின் பின்னுள்ள மௌனம் Silence beyond Silence எழும். இதை Silence behind the Silence மௌனத்திற்குப் பின்னாலுள்ள மௌனம் எனலாம். முதலில் சொல்லியது பகவான் சொல் page 29, The Life Divineஇல் உள்ளது. கடந்திருப்பது பின்னாலிருப்பது என்னவென்றால் மேலும் விளங்கும் என நான் இப்படிக் கூறினேன்.
  • சப்த பிரம்மம், சப்தத்திலிருந்து சிருஷ்டி எழுந்தது. பீஜாக்ஷரம் "ஓம்” எழுந்த இடம் மௌனத்தின் பின்னாலுள்ள மௌனம்.
  • உபநிஷதங்கள் மேலும் வளர முடியாமல் ஆன்மீகம் தளர்ச்சியுள்ள பொழுது பௌத்தம் ஏற்பட்டதால் அந்த தத்துவம் நெகட்டிவாக இருப்பதாக பகவான் கூறுகிறார்.
  • மீண்டும் அது போல் ஆன்மீகம் திறனெழுந்தபொழுது அத்வைதம் எழுந்தது எனவும் பகவான் கூறுகிறார்.
  • எது எப்படியானாலும் பௌத்தம் அகந்தையை வளர விடவில்லை. அது பெரியது பெரிய ஆன்மீக சித்தியான நிர்வாணமாகும்.

******

II/59) இன்றுள்ள உறவுகளைக் கரைத்தால் உடலின் ஆன்மா சத்தியத்தை (existence) உணர ஆரம்பிக்கும்.

  • உடலின் ஆன்மா உணரும் சத்தியம்.
  • பூரணயோகம் மனித வாழ்வைத் தெய்வீக வாழ்வாக மாற்றுவது.
  • மனித வாழ்வு என்பது மனம் வாழும் வாழ்வு.
  • மனத்தில் எண்ணம், உணர்ச்சி, கிளர்ச்சிகள் (sensations) உண்டு.
  • மௌனம் எண்ணங்களற்றுப் போகச் செய்யும்.
  • உறவுகள் அற்றுப் போனால் உணர்ச்சிகள் மறையும்.
  • புலன்கள் செயல்படாவிட்டால் கிளர்ச்சிகள் இரா.
  • சமாதி நிலையெட்ட தபஸ்வி புலன்களை அவித்துக் கொள்கிறார்.
  • உடலில் செல் புற்று வைத்தாலும் தெரியாது.
  • உடலில் சூடு போட்டாலும் உள்ளே மனம் அறியாது.
  • இது புலன்கள் அவிந்ததால் மனம் கரைந்த நிலை.
  • மனம், உணர்ச்சி, உடலுள் இவை அனைத்தும் உள்ளன.
  • மனத்துள் மனம், உணர்ச்சி, உடலும்;
    உணர்வில் மனம், உணர்ச்சி, உடலும்;
    உடலுள் மனம், உணர்ச்சி, உடலும் உண்டு.
    • மனத்தின் உடல் மூளை.
      மனத்தின் உணர்ச்சி நரம்பு முனைகள்.
      மனத்தின் மனம் சிந்தனை.
    • உணர்ச்சியின் உடல் நரம்பு.
      உணர்ச்சியின் உணர்ச்சி ஆசை, ஆர்வம், பாசம்.
      உணர்ச்சியின் மனம் ஆசையை அனுமதிக்கும் எண்ணம்.
    • உடலின் உடல் என்பது கை, கால், இதயம், தசை, எலும்பாலான உடல்.
      உடலின் உணர்ச்சி என்பது தசை அறியும் உணர்ச்சி.
      உடலின் மனம் என்பது செல்களில் உள்ள அறிவு - மனம்.
  • உடலுக்கு ஆன்மாவுண்டு.
    அதை உடலின் சைத்திய புருஷன் என்போம்.
  • மனம் பெற்ற ஆன்மா மனத்தின் சைத்திய புருஷன்.
  • உணர்வு பெற்ற ஆன்மா உணர்வு (உயிர்) பெற்ற சைத்திய புருஷன்.
  • உடலின் உணர்வையும், அறிவையும் கடந்த நிலையில் உடலின் ஆன்மா உறைகிறது.
  • ஆபத்தில் உடல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொழுது செயல்படுவது உடலின் மனம்.
  • அதைக் கடந்து உடலில் ஆன்மா வெளிப்படும்.
  • Morris Goodman என்பவரைப் பற்றி எழுதுவதுண்டு. விமானத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு முதல் இதயம், ஈரல் முறிந்து 24 மணியில் இறந்து விடுவார் என்றவர் 11 மாதத்தில் உயிர் பெற்று எழுவார் என அவர் உறுதி பூண்டு பிழைத்து இன்று சொற்பொழிவுகள் ஆற்றுகிறார்.
  • அவரைக் காப்பாற்றியது அவர் உடலின் ஆன்மா.

தொடரும்....

*******



book | by Dr. Radut