Skip to Content

04.உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)       

                                                                                                                     கர்மயோகி

மனிதனின் ஆன்மீக இலட்சியம்

--சத்தியம்என்பது ஒன்று, அறிய முடியாததுவேதாந்தம் சச்சிதானந்தத்தைக் கடந்து அசத் உண்டு னக் கண்டது.

--ஜடமோ, ஆன்மாவோ உண்மையாக இருக்க வேண்டுமானால், சிகரத்தையும் ஜடத்தையும் அறிய வேண்டும்.

--பிரம்மம், பிரபஞ்சம், ஜீவாத்மா ஆகியவை அவசியம். ‘அது’ மாறவில்லைமாறுவது நம் கண்ணோட்டம்.

--பிரபஞ்சத்தைக் கடந்தது பாதாளம், மனிதன், பரமாத்மாவை சிருஷ்டித்ததுஅகந்தை கூட்டைவிட்டு வெளியேறி அவற்றை அறிகிறது.

--எனவே ஜீவாத்மாவே சூட்சும இரகஸ்யம். தெய்வீக ஆன்மா இதர விடுதலை பெற்ற ஆன்மாக்களில் குட்டி போடுகிறது.

தாவரம், விலங்கு, மனிதன் குட்டிபோடப் பருவம் உண்டுசெடி வளர்ந்து, பூத்து, காய்த்து, பழுத்து, விதை பிடிக்கும்விதை அடுத்த மரத்தை உற்பத்தி செய்யும்விலங்கு வளர்ந்து, முதிர்ந்து, பருவம் எய்தினால் குட்டி போடும். மனிதன் 16 வயது, பெண் 14அல்லது 15 வயதானால் பிள்ளை பிறக்கும். The child is an extension of the body.  உடல் குழந்தையாக ஜனிக்க உடலுக்குரிய பருவம் 15 வயதளவில் வருகிறதுஉடல் குட்டிபோடுவதுபோல் உயிரும் குட்டி போடும். வீரர்கள், கலைஞர்கள், தலைவர்கள் தங்கள் வீரம், கலை, தலைமை குழந்தைகளில் அல்லது சிஷ்யர்களில் எழுவதைக் காணலாம். மகாத்மா காந்தி 1920இல் இராஜாஜி தம்வாரிசு என்றார். நேரு வந்த பிறகு நேருவே தம் வாரிசு என்றார்தலைமை அடுத்த தலைமுறையில் வருவதுண்டு.

மாஸிடேனியா பிலிப் மகன் அலெக்ஸாண்டர் அப்படித் தலைமையைத் தகப்பனாரிடம் இருந்து பெற்றவன்மனம் அறிவை உற்பத்தி செய்தால், ஞானத்திற்கும் வாரிசுண்டுராமகிருஷ்ண பரமஹம்சருக்கு விவேகானந்தர் அப்படி வாரிசாக அமைந்தார். ஆத்மாவுக்குரிய வாரிசும் உண்டு. ஆத்மாவின் வாரிசு சூட்சும உலகில் எழும்.  அவர் குடும்பத்தில் அது எழவேண்டும்என்ற நிர்ப்பந்தமில்லை. மோட்சம்பெற்ற ஆத்மா முதிர்ச்சி பெற்றது. தெய்வீக ஆன்மா உலகில் ஜனிக்கக் காத்துள்ளது. அது எந்த ஆத்மா மோட்சத் தகுதி பெறுகிறதுஎனக் காத்துள்ளது.

  • தெய்வீக ஆன்மா மோட்சம் பெற்ற ஆன்மாவில் ஜனிக்கும்.
  • இதே காரணத்தால் ஓர் ஆன்மா சித்தி பெறும் நேரம் பல ஆன்மாக்கள் சித்தி பெறுவதை உலகம் உணர்ந்து உள்ளது.

--ஆதியிலிருந்த ஐக்கியத்தை மீண்டும் பெறுவது மனிதனின் கடமை.

பிரபஞ்சமும் மனிதனும்

--விஷ்ணு மனிதன் அதிகபட்சம் எட்டிய இலட்சியம். சத் தன்னை  ரூபத்தில் சித்தித்து ஜீவாத்மாவில் வெளிப்படுத்துவது விஷ்ணு எனப்படும்.

--மனம், உயிர், உடலில் (ஜீவாத்மாவின் பகுதிகளில்) அனந்தம் சிருஷ்டியாக வெளிப்பட உதவுவது விஷ்ணு.

--பிரபஞ்சம் செறிந்து, அச்செறிவின் மூலம் பிரம்மத்தையடைய முயல்வதற்காக ஜீவாத்மா ஏற்பட்டது.

--ஜீவாத்மா பிரபஞ்சத்தின் மூலமே பிரம்மத்தைச் சித்திக்க முடியும்.

--ஜீவாத்மா வாழ்வில் ஆன்மாவைச் சித்திக்கப் பயன்படுவது மனோமயப் புருஷன்.

--தெய்வீக வாழ்வையடைய மனோமயப் புருஷனைக் கடந்த புருஷன் தேவை.

--மேல்மனத்தை ஊடுருவி உள்ளே போனால் அசத் அதற்கு விடை தரும்அசத் சச்சிதானந்தத்தைவிடப் பெரியது.

அகந்தை

--ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவானால் அகந்தையிலிருந்து தப்பலாம்.

உடலின் ஜீவியத்துள் ஆன்மா வெளிப்படுவது அகந்தை அழிய உதவும்.

--மரணம் என்பது மாற்றம்என உயர்ந்த ஜீவியம் அறியும்.

--பூமி சூரியனைச் சுற்றி வருவதை நம் புலன்கள்காண பிரபஞ்சமும், பிரம்மமும் சித்திக்க வேண்டும்.

--பகுத்தறிவு மூலம் நம்முள் பிரம்மம் வர முடியும்.

--சுயநலமாக நாம் செயல்பட மறுத்தால் சுயமான ஆனந்தம் நமக்கு அனுபவமாகும்.

சுய ஆனந்தம் எனில் என்ன?

ஆனந்தம் புறத்திலிருந்தும், அகத்திலிருந்தும் எழும்.

வசதி, விருந்து, உடை, பதவி, பிரபலம் தருவது ஆனந்தம் புறத்திலிருந்து எழுவது.

அறிவு, திறமை, நாணயம், நிதானம் ஆகியவற்றிலிருந்து எழுவது அகம் தரும் ஆனந்தம்.

இவை அகம் தந்தாலும், இவை நம் புறச்செயல்களால் அகத்தில் சேகரிக்கப்பட்டவை.

சுயம்என்பது இவற்றைக் கடந்த ஆத்மாவிலிருந்து எழுவது. அது பிரம்மம் நம்முள் உறையுமிடம்.

அந்த ஆனந்தம் இனம் புரியாத இன்பம் எனப்படும் causeless joy

அது ஆத்மானந்தம், பிரம்மானந்தம்.

அதுவும் bliss அல்லது delightஆக இருக்கலாம்.

வளராத ஆத்மா எழுப்பும் ஆனந்தம் bliss. அது பகுதியானது.

வளரும் ஆன்மா எழுப்பும் ஆனந்தம் delight. அது முழுமையானது.

இது சுய ஆனந்தம்.

சுய ஆனந்தம் எழ சுயநலம் (selfishness) இருக்கக் கூடாது.

சுயநலம் அகந்தையிலிருந்து எழுவது.

சுய ஆனந்தம் எழ சுயநலமான அகந்தை அகன்று அழிய வேண்டும்.

--இயற்கை ஜீவனில் அனந்தம் மலரக் காத்துள்ளது

வேதாந்த ஞானம்

--அறிவு புலனைக் கடந்தால் பாதாளத்தின் ஞானத்தையும், பரமாத்மா ஞானத்தையும் இணைக்கவல்லது.

--வேதாந்தம் பிரம்ம ஞானத்தின் மூலம் பிரபஞ்சத்தை அறிய முயல்கிறது.

--‘அது’ ஞானத்தால் உள்ளே அறியப்படுவது.

--வேதாந்தம் ‘சோஹம்’, ‘அஹம்பிரம்மாஸி’, ‘சர்வம் பிரம்மம்’ என்பவற்றை அறியும்.

சத் புருஷன்

--வாழ்வுஎன்பது சக்தி. இதைக் கடந்த நிலையுண்டுஎன அறிவு கூறுகிறது. அது இடத்தையும், காலத்தையும் கடந்தது.

--கடந்தது பிரம்மம்.

--வாழ்வு என்பது சலனம். சலனம் காலம், இடம், இரண்டும் உண்மை. நித்தியம் சத்தியம். சலனத்தால் ஏற்படும் காலம் பிரம்மம். பிரகிருதிஎன்பது புருஷன்.

--‘அது’ நம்முள்ள்ளது. நாம் அதனுள் சென்று நிலையாக வாழலாம்.

--ஞானம் பிரகிருதியிலுறைந்தால் காலம் உற்பத்தியாகிறது.

--சத்புருஷன், பிரபஞ்ச வாழ்வு என்பவை ஜீவனுடைய சத்தியம், பிரகிருதியின் உண்மை. அவை அடிப்படையான உண்மைகள்.

--இவையிரண்டிற்கும் உள்ள தொடர்பை அறிவது விவேகம்.

--நிலை, சலனம், ஐக்கியம், பன்மை என்பவை மனம் கற்பித்த உண்மை. பிரம்மம் இவற்றைக் கடந்தது.

--சத் என்னஎன அறிவோம். சக்தி என்பதென்ன?

--சத், சக்தி வெவ்வேறானவையா? சக்தி சத்தினுடைய வெளிப்பாடா என்பது முக்கியக் கேள்வி.

சித்-சக்தி

--வாழ்வின் தோற்றங்களை ஆராய்ந்தால், அவை சக்தியாகவும், ரூபமாகவும் முடியும்.

--உலகை நிர்மாணிக்கும்சக்தி விழிப்பான சக்திஅச்சக்தியில் வெளிப்படும் சக்தி விழிப்பான ஜீவன்சிறப்பான ரூபம் இலட்சியம்.

ஆனந்தம்

--பிரம்மம் மேலும் ஓர் ஆனந்தத்தை நாடுகிறது.

--தீமை, வேதனை என்பவை தார்மீகக் கருத்துகள். அதில் உண்மையில்லை.

--வாழ்வு தர்மத்திற்குக் கட்டுப்பட்டதன்று. மனிதன் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன்.

நாம் வாழ்வுஎன அறிவது ஊர், உலகம் வாழும் வாழ்வு .

தத்துவம்
வாழ்வுஎனக் கூறுவது மனம், வாழ்வு, உடல்
வரிசைக்குரியது  

இதன் முழு வரிசை சத் - சித் - ஆனந்தம்  - சத்தியஜீவியம் -

மனம் - வாழ்வு - உடல் வாழ்வு life  என்ற அத்தியாயத்தில் இது
விளக்கப்படுகிறது.

மனம்
ஞானம், உறுதி என்ற இருபகுதிகள் உடையது.

ஞானத்திற்குத் திறனில்லை.  உறுதிக்கு 
ஞானமில்லை.

பரிணாம வளர்ச்சியை நாம் மேல் நோக்கி
ப் போவதாக அறிவோம் .

மனம் சிர்ஷ்டியில் அடுத்த கட்ட வாழ்வாகும்.

மனம் வாழ்வாக மாற
ஞானம்  உறுதிமேல் செயல்படும், உறுதியைத்
தாக்கும் உறுதிக்கு அறிவு தரும் .

உறுதி வலிமை வாய்ந்த இருள். 
ஞானம் ஒளி பொருந்தியது.

உறுதி ஞானத்தை ஏற்றால் உற்சாகமான சக்தி பிறக்கும்.

உலகத்தின் ஞானம், உலகத்தின் உறுதியை செயல்படுத்தினால்
உலகம் சக்திபெறும்.  அதை வாழ்வு, life என்கிறோம்


நாம் இன்றறிந்த உலகமும், பிரபஞ்சமும்  அழிந்தால் அவ்வாழ்வு
இருக்கும்என பகவான் 
கூறுகிறார்.

இந்த வாழ்வின் பகுதிகள் மூன்று.

மனிதன் இடைப்பட்டவன்.

விலங்கும் தாவரமும் கீழ்ப்பட்டவை

கந்தர்வர்கள், மோகினி, தெய்வம் மனிதனுக்கு மேற்பட்டவை.

மனிதனுக்கு நல்லது, கெட்டது உண்டு ; பாவம், புண்ணியம் உண்டு ;
தர்மம்திற்கு அவன்
கட்டுப்பட்டவன்.


விலங்குக்குப்  பவாமில்லை, நல்லதில்லை, புண்ணியமில்லை.

தெய்வம்,
கந்தர்வர்கள் ஆகியோற்குப் பாவ, புண்ணியம், நல்லது,
கெட்டது என்ற தர்மமில்லை.

மனிதன் மட்டுமே தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன்.

இந்த யோகம் மனிதனுக்குரியதன்று, இறைவனுக்குரியது.

அதனால் மனிதனுக்கு மட்டுமே உரிய தர்மம் இந்த யோகத்தைக்
கட்டுப்படுத்தாது.

--மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தர்மம்ஒரு கட்டம்

--பாதாளமும், பரமாத்மாவும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டனவில்லை என்பதால், இவை இரண்டுடன் மனிதனுக்கும் பொதுவானது எதுஎனக் காண்போம்.

--ஜீவனின் ஆனந்தம் பிரகிருதியின் ஆனந்தமாவதே மூன்றிற்கும் பொது.

--பிரபஞ்சத்தை ஜீவாத்மாவில் சச்சிதானந்தம் காண முயலும் பொழுது இதையே செய்கிறது.

--பொருள்களில், பொருள்களைக் கடந்த ஆனந்தத்தைக் காண சச்சிதானந்தம் முயல்கிறது.

--மனிதன் ஆனந்தத்தை மறந்து பொருளை நாடி வலியை அனுபவிக்கிறான்.

--சுதந்திரமான மனிதனின் ஆனந்தம் பொருள்களில் பிரதிபலிக்கிறது.

சிறைப்பட்ட மனிதன் ஆனந்தத்திற்காகப் பொருள்களை நாடி ஏமாறுகிறான்.

--சத்புருஷனுக்கு உலகம் மாயை.

உலகம் தோற்றம்.

--மாயை, பிரகிருதி, லீலை.

அவனே லீலை, அவனே ஆடுபவன், அவனே அரங்கம்.

--சிருஷ்டியின் இரகஸ்ய மூலம்:

சலனமற்ற ஆனந்தம் ஆனந்தச் சலனமாவது.

--நாம் முழு ஜீவியம், முழு ஆனந்தம், உலகம் நம்மைப் ஸ்பர்சிக்கும் பொழுது அதை வேதனையால் வரவேற்கும் நிர்ப்பந்தமில்லை.

--எல்லாப் பகுதிகளிலும் விடுதலை பெற்றபின் முழு விடுதலை கிடைக்கும்.

--ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவாகும் பொழுது வலி ஆனந்தமாக நேரடியாக மாறும்.

தெய்வீக மாயை

--நாம் சத்தியத்தை அறிவோம். சத்தியம் எப்படி உலகமாகிறது என அறியோம்.

--அசைவற்ற சத்தியம் உலகத்தின் அசைவான சத்தியமாக மாயையால் மாற்றப் படுகிறது.

--லீலை நடக்க எல்லாம் ஒன்றிலும், ஒன்று எல்லாவற்றுள்ளும் இருக்கும்படி மாறவேண்டும்எல்லாம் எல்லாவற்றுள்ளுமிருப்பது  லீலைக்குதவாது.

--மனம் சத்தியத்தைக் காணமுடியாதபடி தடுக்கிறது.

--யதார்த்தம், இலட்சியம் இரண்டும் உலகம் அறிந்தது. பகவான் சொல்வது அவற்றைக் கடந்தது.

--மனம் பிரபஞ்சத்தை விளக்கிக் கூற முடியாதுஅதைச் செய்அனந்த ஜீவியம் அனந்தமான மனமாக வேண்டும்அதுவே சத்தியஜீவியம்.

--அறிவைப் பயன்படுத்தாவிட்டால், ஞானம் கொலுவீற்றிருப்பதைக்  காணலாம்.

சத்தியஜீவியம் - சிருஷ்டி கர்த்தா

--தெய்வம் பிறந்தது சத்தியஜீவிய லோகத்தில்.

இங்கு ஞானமும், உறுதியும் இணைந்து செயல்படுகின்றன.

இதற்கு இருபகுதிகள் உண்டு. மரபில் அவற்றை ஹிரண்யகர்ப்பம் எனவும் பிரக்ஞாஎனவும் கூறுவர். பகவான் அவற்றை

1)God காலத்தைக் கடந்த சத்தியஜீவியம்.

2) உலகம் காலத்தில் சத்தியஜீவியம் என்றழைக்கிறார்.

--சத்தியஜீவியம் பிரம்மத்தின் பரந்த வெளிப்பாடு.

ஐக்கியத்தினின்று எண்ணத்தால் (Real-Idea) சத்தியஜீவியம் உலகை சிருஷ்டிக்கிறது.

--இயற்கை (பிரகிருதி) என்பது சத்புருஷன் செய்த முடிவின் பலன். ஆதியில் தன்னிடையேயுள் சத்தியத்தை சத்புருஷன் சக்தியாகவும், ரூபமாகவும் மாற்றுவது சிருஷ்டி.

--எண்ணம் என்பது ஜீவனுடைய (vibration) கதிரான எழுச்சி.

--சத்தியஜீவியம் ஐக்கியத்தில் ஆரம்பிக்கிறது, பிரிவினையில் இல்லை.

உயர்ந்த சத்தியஜீவியம்

--தெய்வீக ஜீவியத்தின் பொதுவான சத்தியம் மனம்எனும் லோகத்தில் வெளிப்படுவது சத்தியஜீவியம்.

(மனத்தில் ஆத்மா உண்டு. அது ஆன்மீகமாக வெளிப்படுவது மௌனம், சாந்தி, ஜோதியாகத் தெரிகிறது. ஆத்மா மனத்திலும் வெளிப்படும் (Psychological truth) பொய் சொல்ல மறுப்பது
ஆன்மா மனத்தில் வெளிப்படுவதாகும்அதேபோல் தெய்வீக ஜீவியம் (Psychological truth)வெளிப்படுகிறது. அது மனத்தில் வெளிப்படுகிறது. அதுமனத்தில் வெளிப்படுகிறது. அது சத்தியஜீவியம்.)

--காலமும், இடமுமில்லாமல் உலகம் முன்னேற முடியாது. காலம் கற்பனையில் உருவாக்குவதை இடம் பொருளாக மாற்றுகிறது.

அகத்தின் வாய்ப்பைப் புறம் வெளிப்படுத்துவது அபிவிருத்தி, முன்னேற்றம்.

பிரபஞ்சம் சத்தியஜீவியத்தின் ஞானதிருஷ்டி.

ஞானி, ஞானம், ஞானத்தால் அறியப்படுவதுஎன்ற பேதம் இங்கில்லை.

--பிரம்மம் அனைத்திலும் உண்டு. அனைத்தும் பிரம்மத்திலுண்டு. அனைத்தும் பிரம்மம்என்பது சத்தியஜீவியச் சூத்திரம்.

--ஞானி, ஞானம், ஞானம் அறியும் பொருள்என்ற பிரிவினை அடுத்த கட்டத்தில் உற்பத்தியாகிறது. அது தொடர்ந்தால் அஞ்ஞானமாகும்.

சிருஷ்டியில் அனைத்தும் முழுமையாக இருந்து பின் பிரிந்தது. கடவுள், இறைவன், ஜீவியம்எனப் பலவாறு நாம் கூறுவது ஒன்றே. ஒன்று ஒன்றாக இருந்தால் லீலையில்லைஇரண்டாகப் பிரிந்தால்,பலவானால் ஒன்றுடன் மற்றது உறவாடும். அது லீலை. Consciousness ஜீவியம்என்பது ஆரம்பத்தில் ஒன்றே. சமுத்திரம் என்றனர் வேதரிஷிகள்ஒன்று பலவாகப் பிரிவது சிருஷ்டி. பலவாகப் பிரிவதின் பாங்கு பலஅவற்றுள் ஒன்று ஞானி, ஞானம், ஞானம் அறிவது. நான் உட்கார்ந்துள்ளேன்எதிரில் என் மகன் இருக்கிறான். நான் அவனை என் மகன்என அறிவேன். அறிபவன் ஞானி, அறிவு ஞானம், அறியப்படுவது எதிரில் உள்ள பொருள்.  இவை மூன்றாகத் தெரிவது நம் வாழ்வு. இவை மூன்றல்ல, ஒன்றேஅதையே ஆடுபவன், ஆட்டம், அரங்கம் என்கிறோம். இப்பிரிவால் சிருஷ்டி, லீலை ஏற்படுகிறதுலீலைக்காக ஒன்றானது பலவாகத் தோன்றுகிறதுபலஎனப் பிரித்துவிட்டால் ஒன்றுஎன்ற உண்மை போய்விடும்மகன் திருமணம் செய்து தனிக்குடும்பம் வைத்தாலும் அதுவும் என்குடும்பமே. வேறு குடும்பம்என நினைத்து விட்டால் இல்லாத பிரிவினைக்கு உயிர் வரும்அப்படிப் பிரிப்பது அஞ்ஞானம்.முதலாளி தான் வேறு, கம்பனி வேறு என நினைத்தால், அது எப்படியிருக்கும்?

--கடவுள் ஜீவாத்மா, அகந்தை என்ற மூன்று நிலைகளைகடவுள், ஜீவாத்மா, அகந்தை என்ற மூன்று நிலைகளை சத்தியஜீவியம் ஏற்கிறது.

தெய்வீக ஆன்மா

--தெய்வீக வாழ்வு உண்டானால் தெய்வீக ஆன்மா இருக்க வேண்டும்.

--இது முழுமையுடையதுஎன்பதால் கீழ் லோகத்தையோ, மேல் லோகத்தையோ விலக்க முடியாது. அதனால் அவ்விரு லோகங்களிலும் தெய்வீக ஆன்மா இருக்க முடியாது.

ச்சிதானந்தம் மேல் லோகத்திற்குரியதானதால் அங்கும் இருக்க முடியாது. அக்ஷரப் பிரம்மம் உள்ள சச்சிதானந்தம் மேல் லோகத்திற்கு மட்டும் உரியதுபகவான் கண்டது முழுப் பிரம்மம். இது க்ஷர, அக்ஷரப் பிரம்மம் இரண்டையும் உட்கொண்டதுமேலும் ஓர் அம்சமுடையதுஇது வளரும் ஆன்மா உறையும் சச்சிதானந்தம். இதனுள் மேல் லோகமும், கீழ் லோகமும் உண்டு.

· தெய்வீக ஆன்மா சச்சிதானந்த லீலையுள் உளள்து.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உலகப் போரைத் தடுக்கும் சூட்சுமச் சாதனமாக அன்னை ஆரோவில் நகரத்தை நிர்மாணித்தார். நம் வாழ்வின் துர்அதிர்ஷ்டங்களைத் தடுக்க, நாமும் அதுபோல் ஒரு சாதனத்தைத் தேடலாம். புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் சாதனங்களையும் ஏற்படுத்தலாம்.

போரைத் தடுக்கும் சமாதான நகர்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஸ்ரீ அரவிந்தருடைய யோகம் அறிவுக்கேற்றது என்பதால் அதற்குப் பலனுண்டு; உணர்வில் சந்தோஷமுண்டு;பகுத்தறிவுக்குப் பொருத்தமானது; சாந்தியும் மௌனமும் சேர்க்கவல்லது.

பகுத்தறிவுக்கு ஏற்றவாறு பலனும் சாந்தியும் தரவல்லது ஸ்ரீ அரவிந்தம்.


 



book | by Dr. Radut