Skip to Content

11.வரம் பெறுவது எப்படி?

வரம் பெறுவது எப்படி?

உரிமை நம்முடையது விரதம், நோன்பு, உடலை வறுத்துவது, துதி, தவம் ஆகியவை ஆண்டவனின் வரத்தை நமக்குப் பெற்றுத் தரும். அது மோட்சம் தரும்.

- நாம் நாடும் மோட்சம் பூலோகச் சுவர்க்கம்.

- நம் குடும்ப வாழ்வில் அபரிமிதம், செல்வாக்கு, பெருகிவரும் பணம், தொடர்ந்து உயரும் அந்தஸ்து, நிம்மதியான மனம்,நிரந்தரமான பாதுகாப்பு security நாம் தேடும் மோட்சம்.

- நாம் தலைக்கு $500 ஆண்டு வருமானம் (மாதம் ரூ.2000/-)பெறுகிறோம். அமெரிக்கர் வெறும்கையுடன் அந்நாட்டை அடைந்தவர் $30,000 (மாதம் ரூ.120,000) பெறுகின்றனர்.அவர்கள் உழைப்பாலும், அறிவாலும் அதைப் பெற்றனர்.

- அதே உழைப்புடனும், அறிவுடனும் நமக்கு அன்னையின் அருளும் உண்டு.

- நாம் பலன் பெற குடும்பத்தையும், சர்க்காரையும் எதிர்பார்க்கிறோம்.

- அமெரிக்கர் தங்கள் பங்குக்குள்ள முயற்சியை நம்மைப்போல் 40 மடங்கு எடுத்ததால் அவர்களால் குடும்பத்திற்கும், சர்க்காருக்கும், உலகத்திற்கும் தர முடிகிறது.

நம் பங்கு முயற்சியைத்

தைரியமாக அளவுகடந்து எடுப்பது

வரம் பெறும் தகுதி.

****


 



book | by Dr. Radut