Skip to Content

12.உரிமை நம்முடையது

 உரிமை நம்முடையது

1978இல் அமெரிக்க வியாபாரி இந்திய வியாபாரிக்கு முழு பாக்கியையும் செக்மூலம் (telexஇல்) அனுப்பினார். இருவரும் நேரடியாகச் சந்தித்துப் பேசிய பொழுது இந்திய வியாபாரி 8 இலட்சம் பாக்கி என்றார். அமெரிக்கர் 4 இலட்சம் என்றார். பேசி முடிவு செய்ததில் 4 இலட்சம் கொடுத்து கணக்கை முடிவு செய்யத் தீர்மானம் செய்தனர். அமெரிக்காவிருந்து அதன்படி 4இலட்சம் பணம் அனுப்பி, எந்தக் கணக்கிற்குப் பணத்தைக் கட்டுவது என telex instruction மூலம் அனுப்பினார். பணம் வந்தவுடன் இந்திய வியாபாரி தான் பேசியதற்கு மாறாக 4 இலட்சத்தைப் பழைய கணக்கிற்கு நேர் செய்து கொண்டு மேலும் 4 இலட்சம் கேட்டார். கேஸ் கோர்ட்டிற்குப் போயிற்று.பாங்க் வக்கீலும் இந்திய வியாபாரி வக்கீலும் ஒருவரே. பாங்க் இந்திய வியாபாரிக்குச் சாதகமாக telex instructioin வரவில்லை என கோர்ட்டில் பொய் சொல்லிற்று

மூன்று வருஷம் கேஸ் நடந்தது. பொய் தன்னை நிலைநிறுத்தியது.

நாம் பாங்கை மதிக்கிறோம். பணம் நம்முடையது. பாங்க்குடையதன்று.பணத்தைக் கொடுத்துவிட்டோம். என்ன செய்வதுஎன மலைப்பாக இருக்கிறது.பணம் நம்முடையது. உரிமை நம்முடையது என நாம் மறந்துபோகிறோம்.அமெரிக்க வியாபாரி அதைப் புரிந்து கொண்டவுடன், தம் பணத்தைத் திருப்பித் தரும்படி பாங்க்கைக் கேட்டார். அடுத்த நாள் இந்திய பாங்க் கோர்ட்டில் உண்மையை ஒத்துக் கொண்டது.

மகன் போட்டியில் பங்குகொள்கிறான், பரிசு பெறுகிறான். பரிசுடன் பணம் பெறுகிறான். பரிசு அன்னை கொடுத்தது. பணம் அன்னையுடையது. நாம் நம் உரிமையை பாங்க் விஷயத்தில் மறப்பதுபோல் பரிசும், பணமும் அன்னைக்குரியது என மறந்து விடுகிறோம். சிறுவனுடைய எதிர்காலம் ஒளிமயமாக இருக்க பரிசுக்குரிய நன்றியை அன்னைக்குச் செலுத்த வேண்டும்.பரிசுத்தொகை காணிக்கையாக வேண்டும்.

- பாங்க் விஷயத்தில் உரிமை நம்முடையது எனவும்,

- பரிசு விஷயத்தில் அருள் அன்னையுடையது எனவும், நாம் மறந்துவிடுகிறோம்.

 

****


 



book | by Dr. Radut