Skip to Content

05.வல்லுநரை விஞ்சும் அரசியல்வாதி

வல்லுநரை விஞ்சும் அரசியல்வாதி

N .அசோகன்

     வல்லுநர்களின் அறிவு நம்மை வியக்கவைக்கும். சைக்கிள் தயாரிப்பில் திறமை பெற்ற வல்லுநர்கள் ஒரு சைக்கிளைப் பார்த்தவுடனேயே செயினின் தரம் சரியில்லைகொள்முதல் பிரிவில் நல்ல தரமான இரும்பை வாங்குவதாகத் தெரியவில்லைஎன்று உடனே சொல்லி விடுவார்கள். ஒரு துறையில் வல்லமை பெற்ற நிபுணர் அத்துறையில் இயங்கும் ஒரு கம்பெனிக்குள் வந்து ஆராய்ச்சி செய்யும்பொழுது அங்குள்ளவர்களை விட அக்கம்பெனியைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்வார்குடும்பக் கட்டுப்பாட்டிற்கான அறுவைசிகிச்சை அதிகபட்சமாகச் செய்ததற்காக தேசிய விருது வாங்கிய மருத்துவமனைக்கு வந்த ஆடிட்டர் அம்மருத்துவமனை சாதித்ததாகச் சொல்வதில் உண்மையில்லை என்றார்.  1,700 அறுவை சிகிச்சை செய்ததாகச் சொல்பவர்கள் 200 ஆபரேஷனுக்குத்தான் மயக்க மருந்து வாங்கியுள்ளார்கள்ஆகவே இதில் உண்மையில்லை என்று நிரூபித்தார்வானிலை வல்லுநர்கள் ஒரு கிராமத்திற்கு வந்து 100 அடி ஆழத்திற்கு மண்ணைத் தோண்டிப் பார்த்துவிட்டு கடந்த 100 வருடங்களில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்று கணக்கிட்டுச் சொல்லிவிடுகிறார்கள்இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது வல்லுநர்களின் அறிவு மிக உயர்ந்ததாகத் தோன்றுகிறதுஇருந்தாலும் எதிர்காலத்தில் சாதிக்கப் போவது இவ்வறிவில்லை.

    வீடு கட்டவேண்டும், அறுவைசிகிச்சை செய்யவேண்டும், மாணவனின் அறிவுத் திறனை மதிப்பிடவேண்டுமென்ற இடங்களில் வல்லுநரின் அறிவு தான் இறுதியானதுஆனால் ஒரு வல்லுநரால் ஒரு மேதாவியின் அறிவை எடைபோட முடியாதுஒரு மனிதனிடம் பெரிய தலைமைக் குணமுள்ளதென்பதை வல்லுநரால் முன்கூட்டிச் சொல்ல முடியாது. ஒரு தேசத்தில் இதுவரை பார்த்தறியாத சூழ்நிலை உருவாகும்பொழுது அதை சமாளிப்பதெப்படி என்பதில் வல்லுநரே தோற்கிறார்.  1947இல் காஷ்மீர் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபொழுது அரசியல் வல்லுநரான மவுண்ட் பேட்டன், ஐக்கிய நாடுகள் சபைக்குப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு போக நேருவிடம் சொன்னார். ஆனால் இன்றுவரை தீராத பிரச்சினையாகக் காஷ்மீர் உள்ளதுஆனால் அதே ஆண்டு இனக்கலவரம் மூண்டு பத்து இலட்சம் பேர் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தபொழுது நேருவும், பட்டேலும் என்ன செய்வதுஎன்று தெரியாமல் விழித்தார்கள்ஆனால் வல்லுநரான மவுண்ட் பேட்டன் ஒரு நிமிடத்தில் அப்பிரச்சினைக்குத் தீர்வு சொன்னார். ஆகவே தெரிந்த இடங்களில் சாதிக்கும் வல்லுநர், தெரியாத இடங்களில் தோற்கிறார்.

     காமராஜர் முதல்வராக இருந்தபொழுது சென்னையில் ரிசர்வ் வங்கி இருக்குமிடத்தில் ஒரு மேம்பாலம் கட்டும் வேலை வெகு நாள்களாகத் தாமதமாகிக்கொண்டிருந்ததுவிதிமுறைகளின் குறுக்கீட்டால் இந்தத் தாமதம் நேர்ந்திருந்ததுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் இரயில்வே துறை அமைச்சர் ஆகியோரை காமராஜர் அழைத்து கலந்துரையாடல் செய்தார்வழக்கம்போல் பேச்சுவார்த்தையில் முடக்கம் வந்ததுஇரயில்வே அமைச்சர் எழுந்து போக முயன்றார்அப்பொழுது காமராஜர் குறுக்கிட்டு, "தயவுசெய்து அமருங்கள்நாம் மக்களுக்குச் சேவை செய்யும் அமைச்சர்கள். அரசாங்கத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் அல்ல. ..எஸ். அதிகாரிகளால் சாதிக்க முடியாததை சாதிக்கத்தான் நாமிருக்கிறோம். இப்பிரச்சினைக்கு ஒரு வழியைக் கண்டே தீர்வோம்'' என்றார். அதன்படி ஒரு தீர்வு அக்கலந்தாலோசனையில் கண்டுபிடிக்கப்பட்டு அந்த மேம்பாலம் கட்டப்பட்டதுவல்லுநரின் அறிவு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது கடந்தகாலத்தைச் சேர்ந்தது, மற்றும் பகுதியானது. வல்லுநருக்கு எதிர்காலத்தையோ அல்லது முழுமையைப் பற்றியோ தெரியாது. ஆனால் அரசியல்வாதிகள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள். அதனால் அவர்களால் வல்லுநரைத் தாண்டிச் செயல்பட முடியும். வல்லுநரைப்போலவே மனிதனின் அறிவும் பகுதியானது; கடந்தகாலத்தைச் சேர்ந்ததுஆனால் மனிதனின் ஆன்மா எதிர்காலத்தையும் உள்ளடக்கியதுஅதற்கு முழுமையான அறிவுமுண்டு.

     நாம் செய்கின்ற காரியங்களை வெற்றிகரமாக முடிக்க ஆசைப்படுகிறோம். நமக்கு அனுபவமுள்ள இடங்களில் இது சாத்தியமாகிறதுமுன்னனுபவம் இல்லாத இடங்களில் நாம் எப்படிச் செயல்படுவதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம்பழைய அனுபவத்தைக்கொண்டு புதிய துறையில் செயல்பட முயன்றால் அங்கே வேலை கெட்டுப்போகிறதுஒரு பிரச்சினை தீர மறுக்கும்பொழுது அங்கே நம் அறிவு ஆழ்ந்து சிந்திக்கிறதுஅச்சிந்தனை நல்ல பலனை அளிக்கலாம் அல்லது தவறிப்போகலாம். ஆனால் நம் ஆன்மா சிந்திக்க மறுக்கிறதுஅந்த மறுப்பு, தீர்வை அளிக்கிறதுஏனென்றால் மௌனம் சிந்தனையைவிட சக்திவாய்ந்தது. "என்ன செய்வதுஎன்று எனக்குத் தெரியவில்லை'' என்று உண்மையாக ஒத்துக்கொள்வதில் அடக்கம் இருக்கிறது. அந்த அடக்கம் ஆன்மாவை வெளிக்கொண்டுவருகிறதுஆன்மீக மௌனம் கொண்டுவரும் தீர்வு சிந்தனையில் பிறக்கும் தீர்வைவிட சக்திவாய்ந்தது. அந்தத் தீர்வு ஆன்மா கொண்டுவரக்கூடிய எண்ணற்ற சாத்தியக்கூறுகளில் ஒன்றாகவிருக்கும்இந்த ரீதியில்தான் அனுபவசாலியான அரசியல்வாதி, வல்லுநரான அதிகாரியைத் தாண்டிச் செயல்படுகிறார். அதாவது முழுமையை உணர்ந்த அரசியல்வாதி, பகுதியை மட்டும் அறிந்த வல்லுநரைக் கடந்து செயல்படுகிறார்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

"நான், தனி' என்பதைத் தாண்டினால் மேலே போகும்பொழுது எல்லாம் ஒன்றிலும், ஒன்று எல்லாவற்றிலும் தெரியும்நான் பரிணாம மனிதனல்லன், ஆன்மீக மனிதன்என அறிந்தால் கீழே வரும்பொழுது எல்லாம் ஒன்றிலும், ஒன்று எல்லாவற்றிலும் தெரியும்.

உபநிஷத உண்மை.


 


 


 book | by Dr. Radut