Skip to Content

09.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)  

கர்மயோகி

899) நம்பர் போடுவதில் குறை ஏற்பட்டால், மனம் ஏற்றுக் கொள்ளும் பொறுப்பை, செயலில் பூர்த்திசெய்யும் திறனை அதற்குரிய சிறப்புடன் பெறவில்லைஎனப் பொருள்.

மனம் ஏற்றதை செயல் ஏற்பது அரிது.

. மனம் உயர்வாக இருந்தாலும் செயல் அதற்கேற்ப இருப்பதில்லை.

 இது இயற்கையில் உள்ள இடைவெளி.

. நமது திறமையை கையெழுத்து காட்டும், சமையலில் உப்பு பதம் காட்டும், அரசியலில் சமயோசிதம் காட்டும்.

. கையெழுத்து ஒரு கலை. மனிதனுடைய ஆழ்ந்த சுபாவத்தை அது தவறாமல் காட்டக்கூடியது. வாக்கிய முடிவில் முற்றுப்புள்ளியுண்டுஅதைத் தவறாது போடுபவர் உண்டுதவறாது போடாதவருண்டுசில சமயங்களில் போடுபவரும் உண்டு.

. தவறாது முற்றுப்புள்ளி வைப்பவர் எடுத்த காரியத்தில் முழுக் கவனமாக இருப்பார்முடியும்வரை மனம் வேறெதிலும் செல்லாது. முடிந்தபிறகும் அதை உறுதிப்படுத்திக்கொள்வார்வேலைக்குப் பொறுப்பானவர் இவர்; பிறரிடம் உள்ள பொறுப்பு வேறு; வேலையில் உள்ளது வேறுவேலையென ஏற்றால், அதில் முழுப்பொறுப்பு வகிக்கும் சுபாவமுள்ளவர்.

. initial முதலெழுத்து M. Kalyanam என்றால் M என்ற எழுத்தை initial என்கிறோம். கல்யாணம் என்பவர் முருகன் மகன் என்பதை M என்ற initial குறிக்கிறது. தகப்பனார் செல்வாக்குள்ளவரானால் M பெரியதாக இருக்கும்.  தகப்பனார் படிக்காதவரானால் M சிறியதாக அமையும்வீட்டைவிட்டு தகப்பனார் கொடுமையால் ஓடி வந்தவர் M என்ற எழுத்தை எவ்வளவு சிறியதாக எழுத முடியுமோ அவ்வளவு சிறியதாக எழுதுவார்.  Signature கையெழுத்துப் போடும்பொழுது அந்த M என்ற எழுத்தைக் கண்டுபிடிக்க முடியாதபடி பெயருள் மறைந்திருக்கும்ஒரு IASஆபீசர் தகப்பனாருடன் கோபப்பட்டுத் தம் signatureஇலிருந்து initialஐ எடுத்துவிட்டார்கலப்புத் திருமணம் கலாட்டாவில் நடந்து அதில் பிறந்த மகன் initial போடுவதில்லைஅவர் தம் பெற்றோர் செய்ததை மறுப்பதை இப்படிக் காட்டுகிறார்முழுச் சுயநலமிகள் signatureஐச் சுற்றி ஒரு வளையம் போடுவார்கள்தன்னைப் பற்றி அதிக அபிப்பிராயமுள்ளவர்கள் தன் signatureஇல் முதலெழுத்தைப் பெரியதாக எழுதுவர்அப்படிப்பட்ட ஒருவர் initial போலத் தம் பெயரின் முதலெழுத்தை 5 மடங்கு பெரியதாகப் போடுவார்வாழ்க்கை முன்னேற்றம் ஏற்பட்டாலும், மனம் அடங்கினாலும், அன்னையை அதிகமாக ஏற்றாலும், தோல்வி மேல் தோல்வி வந்தாலும் பெரிய முதலெழுத்து குறுகி இருந்த இடம் தெரியாமல் போகும்.

. இதுபோன்று கையெழுத்து handwritingஇல் கண்டுபிடிக்கப்பட்டவை சுமார் 300க்கு மேற்பட்ட கருத்துகள்.

. பெயர்களின் கீழ் கோடு போடுபவர் பிரபலம் நாடுபவர்.

. பெயரைத் தொடர்ந்து எழுதுபவர் வேலையை நிறுத்தாமல் முடிப்பவர்.

. அதுபோல் நம்பர் போடும்பொழுது எழும் குறை ஏற்ற வேலையைச் செய்ய மனமில்லை எனக் காட்டுகிறது.

****

900) (Form) உருவம் ஏற்படாமல் (content) உள்ளுணர்வு சிதறிப் போகும்.               உருவம் அழிந்து பதிந்தால் உள்ளுணர்வு கசங்கிவிடும்.

ரூபமற்ற சக்தியில்லை. ரூபம் நீடித்தால் சக்தியழியும்.

. உருவம் உயிரைக் காப்பாற்றும்.

. உருவமில்லாமல் உயிர் இருப்பது ஆவி; உடலன்று.

. உயிரில்லாமல் உருவம் சிறப்பானால், படிக்காதவன் பட்டமளிப்பு விழா உடையை ஏற்பதுபோன்றது.

. அது மானம் போகும் செயல்; ஜெயிலுக்கும் அழைத்துப்போகும்.

. உருவத்திற்கும் உள்ளுணர்வான உயிருக்கும் என்ன தொடர்பு?

. உயிர் முதலில்; உருவம் இரண்டாவது.

. உருவமின்றி உயிரில்லை; உயிரின்றி உருவமில்லை.

. கருவில் குழந்தை உருவாவதையும், முட்டை உருவாவதும் தெளிவு படுத்தும்.

. எது முதல் என்பதைவிட எது எதை எப்படி ஆதரிக்கிறது என்பது முக்கியம்.

. பொதுவாக அழகை நாம் உருவம்என அறிவோம்.

. உள்ளே ஜீவன் பவித்திரமானால் புறத்தில் அழகு சேரும்.

. புற அழகு அகத்தூய்மையை வெளிப்படுத்தும்.

அதுவே ஆரம்பக் கால நிலை, நிபந்தனை எனலாம்.

பரிசைப் பெட்டியில் வைத்துக் கொடுக்கும் பழக்கம் வந்தபிறகு பரிசு இல்லாமல் பெட்டி ஏற்படுகிறது.

அகத்தூய்மையால் புறஅழகு வந்து நிலைத்த பல தலைமுறைகட்குப் பின் அகமும், புறமும் பிரிய முடியும்என்ற நிலையும் வருகிறது.

அகமின்றி எழும் புறம் அர்த்தமற்ற சொல்லாகும்.

குணமில்லாத பெண்கட்கு அழகு இருந்தால் அவ்வழகு கர்வமாக மாறும்.

தன்மையில்லாத ஆணுக்கு அழகு அமைந்தால் அவன் பெண்கள் வாழ்வை சிதைக்க முடியும்.

புறம் பொலிவு பெறாமல் அகம் ஆழ்ந்திருந்தால் அகம் நிறையும்,

ஆனால் வாழ்வில் அது மிளிராது.

குணமும், தன்மையும், செயலாகவும், நிகழ்ச்சியாகவுமாக மாறி ஜீவனின்

சக்தி வெளிப்படுகிறது.

குணமும், தன்மையுமற்ற அகம் செயலாக, சக்தியாக மாறினால் அந்த

ஜீவன் பேயாகி, பிசாசாகி, பிறரை அழிக்கும் சக்தியாகும்.

பிறரை அழிக்கும்வாயிலாகத் தன்னையே அழித்துக்கொள்வான்.

விகாரமான குணவான், அழகான குணம்கெட்டவன் அபூர்வம். பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய தோற்றம் ராஜகம்பீரம் என வர்ணிக்கப்படுகிறதுஎந்த அரசனும் பெற்றிராத பொன்மேனியான பொன்னொளி அவருடையதுஅவர் அகம் சத்தியஜீவியம். அதன் புறம் இதுவரை மனிதன் பெறாத கம்பீரம்.

தொடரும்...

**** 

ஜீவிய மணி

அறிவிலும் அறியாமையிலும் உள்ளது பிரம்மம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மாறிய பார்வை, மனத்தின் பிரச்சினைகளைக் கரைக்கிறது. உணர்வில் மாறிய நோக்கம் உள்ளத்தைப் பூரிக்கச் செய்யும்.உடல் உணர்வு (physical sensitivities) மாறினால் உள்ளும் புறமும் திருவுருமாற்றம் உண்டு.

உடல் திருவுருமாறும் உள்ளுணர்வு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

விழிப்பு ஏற்பட்டபோதெல்லாம், நிரந்தர அருள் தடையின்றி வயப்படுகிறது. அருள் நம்மை நாடி வருவது திருவுருமாற்றத் திற்கு வழிசெய்யும். ஆர்வம் திருவுருமாற்றத்தைப் பூர்த்தி செய்யும்.

நிரந்தர விழிப்பின் ஆர்வம் அருளின் நிரந்தர திருவுருமாற்றம்.


 


 


 


 



book | by Dr. Radut