Skip to Content

08.சாவித்ரி

சாவித்ரி

 

P.75 And Nature's correspondence with the soul

are written in the mystic heart of Life.

இறைவனோடு இயற்கையின் பொருத்தம்

வாழ்வின் இதயத்தில் வரிவடிவம் பெற்றுள்ளது.

. ஆன்ம நினைவெனும் ஆதர்சக் கண்ணாடியில்,

ஒளிபொருந்திய குறிப்புகளைக் கண்டெடுத்தான்.

கோழிக்கிறுக்கெனும் கோட்டின் ஒளியில்,

முன்னுரையும் மூலக்கருத்தும் தப்பி எழுந்தன.

இகவாழ்வை நடத்தும் இருண்ட ஒப்பந்தம்.

ஜடமான இயற்கையின் இருளான தூக்கம்.

பூரணனுக்குப் புது உடையளிக்கும் முயற்சி.

மீண்டும் படித்து, புதியதாகப் புரிந்துகொண்டு,

வினோதமான குறியீடுகளும், கலைந்து கிடக்கும் சிக்கல் அடையாளங்களும்,

புதிரின் கட்டவிழ்த்து, அசரீரியாகப் பேசி,

கண்ணை மூடிய நிபந்தனைகளும், கிண்டல் செய்யும் சொற்களும்,

சத்தியத்தின் சதுரங்கம் ஆழ்ந்த தலைகீழ் திருப்பம்.

அவை அவசியமென அறியும் ஞானம்.

பெருநெறிக்குரிய கடின நிபந்தனைகள்.

இயற்கையின் பிரம்மப் பிரயத்தனம்.

போர்முனையின் ஞானம் போதிக்கும் திட்டம்.

தெய்வத்தை எதிர்க்கும் சட்டம்.

இணைபிரியாத முரண்பாட்டின் முடிவில்லாத பட்டியல்.

பிரபஞ்ச நிஷ்டையிருக்கும் ஊமை உமாதேவி,

சிருஷ்டியின் ஆனந்த வலியை அவசியமாகப் பயன்படுத்தி,

ரூபம் ஜனிக்க அரூபியின் அனுமதி,

எதையும் சாதிக்கும் ஏற்றமிகு திறமை,

ஜடமும் இருளான உலகில் அறியும் அவா,

மரணத்தின் சாம்ராஜ்யத்தில் வாழும் வண்ணம்,

உடலின் பற்றான பாசப் பிடிப்பில் அமிர்த ஊற்றை நாடும் மனம்.

ஆத்மா தலையெடுத்து ஆவன செய்யும் அமைப்பு.

உயிரும் மூச்சும் உழலும் உலகில் அதிசயப் பிறப்பு.

இருளோடு இறைவன் இணைந்தெழுதிய நிர்ணயம்.

பிரபஞ்ச மனம் அமைதியின் குரலை அடுத்த முறையும் எழுப்பும்.

பிரம்மம் கொடுத்த வாக்கின் பிரயத்தனம்.

உலகின் உணர்ச்சி உந்துதலாகி,

மரணத்தில் பிறப்பு குரலெழுப்பி,

காலமெனும் கஷ்டத்தின் பாயிரம்.

ஆழத்தில் உலகம் புதைத்த இரகஸ்ய ரோஜா.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

விஷய ஞானம் (conceptual understanding) என்பது ஞானத்தின் ஒரு பகுதி. சொற்களின் ஆதியைத் தெளிவாக அறிவதால் பெறக்கூடியதுசொற்களின் ஆதியை அறிவது போல் கருத்தின் ஆதியையும் அறிந்தால் விஷய ஞானம் பூர்த்தியாகும்.

கருத்தின் ஆதியை அறிந்தால் விஷய ஞானம் பூர்த்தியாகும்.


 


 



book | by Dr. Radut