Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

      பகவான் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, குருநாதர் அவர்களை வணங்கி இக்கட்டுரையை எழுதுகிறேன்.

     என் சித்தி மூலம் 1991இல் மதர் பற்றி அறிந்துகொண்டேன். ஆனால் ஈடுபாடு இல்லை.  Final year முடித்து, அன்னை தரிசனம் முடித்து வந்த பின்பு நான் எதிர்பாராதவிதமாக அந்த செமஸ்டரில் நிறைய மார்க் எடுத்து காலேஜில் இரண்டாமிடத்தில் வந்தேன்.

      என் கணவரின் குடும்பமும், எங்கள் குடும்பமும் சிறு வயது முதல் (3 தலைமுறையாக) நண்பர்கள். எங்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனபொழுது அவர் வேலையில்லாமல் இருந்தார்சித்தியின் வீட்டில் "அன்னையின் தரிசனம்'' படித்தேன்மதர் மேல் நம்பிக்கை ஏற்பட்டு 3 நாள் பிரார்த்தனை செய்தேன்அவரும் நவம்பர் 17ஆம் தேதி 1992இல் அன்னை தரிசனம் செய்தார்நான் நவம்பர் 24லிருந்து 26வரை பிரார்த்தனை செய்தேன்டிசம்பர் 1ஆம் தேதி அவர் வேலையில் சேர்ந்துவிட்டார்.  Foreign வேலைக்கு முயன்று கிட்டத்தட்ட 1¼ வருடம் வேலையில்லாமல் அன்னை தரிசனம் செய்த 10 நாட்களுக்குள் வேலை கிடைத்ததுஇதன்மூலம் நான் அன்னையிடம் நெருங்கி வந்தேன்.

     எங்களுக்கு 1996ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அப்பொழுது இவருக்கு severe ulcer. டாக்டரிடம் காட்டி ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தார். பாதி நாள் ஆபீஸ் போக முடியாதுவயிற்றுவலி, வாந்தி வந்துவிடும். ஒரு முறை இவர் ஆரோக்கியம் பற்றி சொசைட்டிக்குக் கடிதம் போட்ட பொழுது ஸ்ரீநிவாசா தெரு தியான மையம் அட்ரஸ் கொடுத்தனர். அது தான் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. அன்றே சென்டருக்குப் போய் பூவரசம்பூ வாங்கி வந்து 3 நாட்கள் பிரார்த்தனை செய்தேன்இவர் ஆரோக்கியம் முன்னேற்றமடைந்து நல்ல நிலைமைக்கு வந்தார்.

      பிறகு இவர் ஆபீஸில் கம்பனி loss என்று கூறி கடைசியாகச் சேர்ந்த 3 பேரை திடீரென வேலையை விட்டுப் போகச் சொல்லிவிட்டனர்மதரிடம் வேண்டினேன். பழைய கம்பனியிலேயே வேலை கிடைத்தது.

     திருமணம் ஆனபொழுது இவருக்குக் கல்யாணக் கடன் இருந்தது.அதனால் குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட்டோம். 1998இல் என் தங்கைக்கு திருமணம் ஆனதுஉறவினர்கள், அம்மா,அப்பாவிற்காக சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் எங்களுக்கு அது கூடிவரவில்லை; தள்ளிப்போயிற்று.

     1998ஆம் ஆண்டு என் செயினை ஒருவன் அறுத்துக்கொண்டு போய் விட்டான். போலீஸில் புகார் கொடுத்தோம். 4 மாதத்திற்குள் செயின் கிடைத்துவிட்டதுஸ்ரீ அன்னையின் அருளால்தான் இது கிடைத்தது. 1998ஆம் ஆண்டு ஜூலை இறுதியில் சென்டர் சர்வீஸுக்கு வந்தேன்.  2 மாதத்திற்குள் செயின் கிடைத்தது. மேலும் எங்கள் வாழ்க்கைத்தரம் பிறகுதான் உயர்ந்தது. அதுவரை எங்கள் வீட்டில் மிக்ஸி, கிரைண்டர், B/W TV தவிர எதுவும் கிடையாது. பிறகு ஃபிரிட்ஜ்,வாஷிங் மெஷின், கலர் டிவி, போன், கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம் என்று எல்லாம் வாங்க முடிந்தது.

     நாங்கள் பில் இல்லாமல் 9000 ரூபாய்க்கு wooden cot, kurlon bed வாங்கினோம். Guarantee formஇல் கடையின் sealஉம் வாங்கவில்லை.  1 வருடம் முடியும் முன்பு பார்த்தால் பெட்டில் சின்ன சின்ன ஓட்டைகள் இருந்ததுபுகார் செய்தோம். பிப்ரவரி 99இல் வாங்கியதுகம்பனி ஊழியர் வந்து பார்த்துவிட்டுப் போய்விட்டார். பில் இருந்தால் மாற்றிக் கொடுக்கலாம் என்றார்நாங்கள் தினமும் கணக்கு எழுதுவோம். அந்த டைரியை காட்டினேன். பிப்ரவரி 99இல் வாங்கியதற்கு இது தவிர என்னிடம் வேறு ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டேன்மார்ச் 17ஆம் தேதி (தியான மையம் ஆரம்பித்த நாள்) அன்று கம்பனியிலிருந்து புது பெட் (நவீன தொழில்நுட்பத்துடன், அதிக விலை, புதிதாக உற்பத்தி செய்தது) கொடுத்துவிட்டு பழைய பெட்டை எடுத்துப் போனார்கள்இந்தியாவில் இது போல் 1 வருடம் உபயோகித்த பொருளை பில்கூட இல்லாமல் மாற்றிக் கொடுத்ததை நான் கேள்விப்பட்டதேயில்லை.

     என் கணவர் தம் நண்பரின் பேச்சைக் கேட்டு அதிக சம்பளத்திற்கு அவர் கம்பனியில் சேர்ந்தார். சம்பளம் ஒழுங்காக வரவில்லை. ஒரே tension. மாம்பலம் சென்டரில் ஆலோசனை கேட்டு, அங்குக் கூறியபடி பிரார்த்தனை செய்தோம். 15ஆம் நாள் பழைய கம்பனி எம்.டி. தானே போன் செய்து "மறுபடியும் வேலையில் சேர்கிறாயா?'' என்றார். 3 மாதம் தான் நண்பரின் கம்பனியில் இருந்தார்பழைய வேலையை விடும் பொழுது 5000 ரூபாய் சம்பளம். மறுபடியும் வேலையில் சேரும்பொழுது 10,000 ரூபாய் ஆனதுஇது அன்னையின் அருளால்தான் நடந்தது.

   நானும் குழந்தைக்காக டாக்டரிடம் போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டேன். ஜூலை 4ஆம் தேதி நாங்கள் இருவரும் சொசைட்டிக்கு போனோம். அங்கு கூறியபடி hourly consecration, மற்றும் Token Actஐ ஏற்றுக் கொண்டேன். மார்ச் மாதம் ஒரு அன்பர் prayer for a child என்று ஒரு prayer எழுதிக் கொடுத்தார். தினமும் காலையில் 15 நிமிடம் பிரார்த்தனை செய்து வந்தோம். ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விஷயம் கூடிவந்தது. 6 வருடம் குழந்தையில்லாமல் இப்பொழுது conceiveஆனதால் ஓய்வில் இருக்கிறேன். அன்னையின் அருளால் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டி வருகிறேன்.

இது தவிர ஸ்ரீ அன்னையின் அருளால் எங்கள் உறவினர்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளன. என் பெரிய நாத்தனாரின் பெண்ணுக்கு உடலில் இரத்தத்தில் ஏதோ பிரச்சினை; liverமோசமாக உள்ளது என்று ட்ரீட்மெண்ட் எடுத்து, நிறைய மருந்து சாப்பிட்டார்மதரிடம் வந்த பிறகு எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு தியானத்தின் மூலமே அவர் வியாதி சரியானது. அவளுக்குத் திருமணம் செய்ய முடியுமா என்று நினைத்தோம். அவளுக்குப் பாண்டியிலேயே அன்னை முறைப்படி திருமணம் முடிந்து, அவளும் இப்பொழுது conceive ஆகியிருக்கிறாள்.

     என் கடைசி நாத்தனாருக்கு 4 வருடம் முன்பு brain tumour வந்து ஆபரேஷன் செய்து கேன்சர் என்று 1 மாதம் ரேடியேஷன் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள். 1 மாதம் முடிந்து C.T.scan செய்ததில் தலையில் பல இடங்களில் பரவிவிட்டது என்றும் 1 வருடம் இருந்தாலே அதிகம் என்று ட்ரீட்மெண்டை நிறுத்திவிட்டனர். இப்பொழுது 4 வருடங்கள் ஆகிறது. எந்தப் பிரச்சினையுமின்றி இன்று நலமாக இருக்கிறார். அவர் இப்பொழுது சொந்த பிளாட் வாங்கி கணவருடன் சந்தோஷமாக இருக்கிறார்.

     எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஸ்ரீ அன்னையை ஏற்றுக் கொண்டுள்ளனர். மாம்பலம் தியான மையத்தினால் தான் மதரைப் புரிந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற முடிந்ததுசொசைட்டி புக்ஸ்தான் வழிகாட்டி. மேலும் நாங்கள் வாழ்க்கையில் முன்னேறி, நல்ல நிலைமைக்கு வருவதற்கு ஸ்ரீ அன்னையை வேண்டுகிறோம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நினைவழிந்தால் ஆர்வமெழும். நாலு பேர் சொல்வதையும், நாம் நினைப்பதையும் இழந்தால் எழுந்த ஆர்வம் பூர்த்தியாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நல்லது செய்ய முனைவதில் நல்லதைவிட முனைப்பு அதிகம் இருப்பதால் அது தேவையில்லை.

நல்லதைச் செய்யும் முனைப்பும் முனைப்பாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

கண்மூடிச் செயல்படும் சக்தியைத் தன்னை உணரச் செய்வதே ஒருநிலைப்படுதல் என்று பூரணயோகத்தில் கொள்ளப்படும். விழித்தெழுந்த சக்தி, ஜீவனின் மையத்திலுள்ள ஒளியை நாடுவது சமர்ப்பணம்.

சக்தி விழித்து, ஜீவஜோதியை நாடுவது சமர்ப்பணம். விழித்தெழுந்த சக்தி, ஜீவனின் மையத்திலுள்ள ஒளியை நாடுவது சமர்ப்பணம்.


 


 


 


 


 


 book | by Dr. Radut