Skip to Content

14.வரவேற்க வேண்டியவற்றை நாம் பொறுத்துக் கொள்கிறோம்

வரவேற்க வேண்டியவற்றை நாம் பொறுத்துக் கொள்கிறோம்

     வர்கீஸ் குரியன் இன்ஜீனியர்அமெரிக்காவில் பட்டம் பெற்று வந்தவரை குஜராத்தில் ஆனந்த் கோவாப்பரேட்டிவிற்கு அனுப்பினர். அது கிராமம்பால் பண்ணைதங்க வசதியில்லைகார் ஷெட்டில் தங்க வேண்டும்இது சர்க்கார் வேலைஅவருக்கு எரிச்சல்வேலையை ராஜினாமா செய்தார்சர்க்கார் ஸ்காலர்ஷிப் பணத்தைத் திருப்பிக் கேட்டதுராஜினாமாவை வாபஸ் செய்தார். பால் பண்ணையில் மெஷின் சரியில்லைரிப்பேர் செய்யப் பணமில்லை. சர்க்காரில் எது செய்யவும் பல நாளாகும். மீண்டும் மீண்டும் ராஜினாமா செய்தார். ஸ்காலர்ஷிப்பைத் திருப்பித் தர முடியவில்லை என்பதால் தொடர்ந்து பணி செய்தார்...... ஆண்டுகள் கழிந்தனவேலை பலித்தது. நேரு வந்து பாராட்டினார். இன்றுவரை எல்லாப் பிரதமர்களும் பாராட்டினர்வெண்மைப் புரட்சி வெற்றி பெற்றது.  168 விருதுகள் பெற்றார்உலகப் பரிசு பெற்றார்.  உலக வங்கி பாராட்டியதுஉலகப் புகழ் எய்தினார்மாதம் 5 இலட்சம் சம்பளம் பெற வேண்டியவர் தியாக மனப்பான்மையால் 5000 ரூபாய் சம்பளத்தில் 80ஆம் வயதில் ஓய்வு பெற்றார்.

    1990இல் 2000 ADஇல் நடக்கப்போவது 1950இல் தெரிந்திருந்தால் குரியன் வேலையை ராஜினாமா செய்திருப்பாராபின்னால் நடக்கப் போவது முன்னால் தெரியுமா? அதை ஒருவர் கூறியதை குரியன் ஏற்கவில்லை.

-முரண்பாடு, உடன்பாடு என்பது ஸ்ரீ அரவிந்தம்.

-வெறுப்பானதை வரவேற்க வேண்டும்என்பது அன்னை கூறுவது.

-வெறுப்பினுள் அன்பு மறைந்துள்ளதுஎன்பது தத்துவம்.

-வேறு வழியில்லாமல் நாம் விலக்க வேண்டியதைப் பொறுத்துக் கொள்கிறோம்.

-ஞானம் வந்தபின் புரிந்தாலும் பிடிக்கவில்லைஎன்பது நிலை.

-மனம் தலைகீழ் மாற்றத்தை (reversal) ஏற்றால் பொறுத்துக் கொள்வது புரியும்.

-புரிந்தால் சிரமத்தின்மூலம் சிறப்பு வரும்.

-புரிவதை மனம் ஏற்றுக் கொண்டால் சிரமமின்றி சிறப்பு வரும்.

-வெறுப்பதைப் பொறுத்து, பொறுத்துக் கொள்வதைப் புரிந்து, புரிவதை ஏற்று, ஏற்பது மகிழ்ச்சி தந்தால், சிரமம் விலகி, 50 ஆண்டிற்குப் பின் வரும் சிறப்பு இன்றே வரும்.

 

****


 



book | by Dr. Radut