Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                   (சென்ற இதழின் தொடர்ச்சி....)  கர்மயோகி

XV. The Supreme Truth-Consciousness
Page No.133, Para N.3

15. உயர்ந்த சத்தியஜீவியம்

This development is a progress of the world.

இம்மாற்றம் உலகம் முன்னேறுவதாகும்.

It is according to an original truth.

இது ஆரம்பத்திய உண்மையின்படி உள்ளது.

It is a truth of its being.

இது ஜீவனின் சத்தியம்.

It implies a succession of Time.

காலம் ஊர்ந்து செல்வது உண்மை.

It also implies a relation in space.

இடத்தில் உள்ள தொடர்பும் உண்மை

The succession of Time offers the aspect of causality to the relation of Space.

காலம் நகர்வது இடத்தின் தொடர்புக்குச் சட்டத்தின் அதிகாரத்தைத் தருகிறது.

The metaphysician speaks of Time and Space.

காலம், இடத்தைப் பற்றி தர்க்கவாதி பேசுகிறான்.

To him they are concepts.

அவனுக்கு அவை வெறும் தத்துவம்.

They have no real existence for him.

காலமும், இடமும் அவனுக்கு உண்மையில்லை.

All things are forms of Conscious-Being.

உலகிலுள்ள அனைத்தும் சத்புருஷனுடைய ரூபங்கள்.

Time and Space too are such forms.

காலமும், இடமும் அப்படிப்பட்ட ரூபங்கள்.

So, the distinction is of no great importance.

அதனால் இந்த மாறுபாடு பொருட்டன்று.

Conscious-Being viewing itself subjectively is Time.

சத்புருஷன் தன்னையே பார்ப்பது காலம்.

Viewing itself objectively is Space.

புறத்தில் தன்னைப் பார்ப்பது இடம்.

Thus Time and Space are extensions of Being,.

காலமும், இடமும் புருஷனின் வெளிப்பாடுகள்.

We ha e a mental view of them.

நம் மனம் அவற்றை அறியும்.

It is determined by a measure.

ஓர் அளவுகோல் அவற்றை நிர்ணயிக்கும்.

That measure is inherent in action.

அவ்வளவு செயலில் கலந்துள்ளது.

It is an action of the dividing movement of Mind.

துண்டாடும் மனத்தின் செயலில் அது உண்டு.

Time for Mind is a mobile extension.

மனத்திற்குக் காலம் நகரும் வீட்சி.

It is measured out by the past, present and future.

கடந்தது, நிகழ்வது, வருவதை அளப்பது அது.

Mind places itself at a certain point.

மனம் ஓரிடத்திலிருந்து அவற்றைக் காண்கிறது.

From that standpoint it looks before and after.

அங்கிருந்து மனம் முன்னும், பின்னும் பார்க்கிறது.

Space is a stable extension.

இடம் நிலையான நீட்சி.

It is measured out by the divisibility of substance.

பொருளைப் பகுப்பதால் அதை அளக்கிறோம்.

Mind places itself at a certain point in that divisible extension.

பொருளைப் பகுப்பதில் ஓரிடத்தில் மனம் தன்னை இருத்திக் கொள்கிறது.

So, Mind regards the disposition of substance around it.

எனவே, மனம் பொருளின் அமைப்பைக் கணக்கெடுக்கிறது.

Page No.133, Para No.4


Mind measures Time by event.

மனம் காலத்தை நிகழ்ச்சியால் அளக்கிறது.

It measures Space by Matter.

அது இடத்தை ஜடத்தால் அளக்கும்.

It is the actual fact.

இது நடைமுறை உண்மை.

Something else is possible in pure mentality.

தூய மனதில் வேறொன்றுக்கு வாய்ப்புண்டு.

It can disregard the movement of event.

நிகழ்ச்சிகளின் போக்கை அது மறுக்கலாம்.

It can disregard the disposition of substance.

பொருளின் அமைப்பை அது மறுக்கலாம்.

Thus, it can realise the pure movement.

இங்ஙனம், மனம் தூய சலனத்தைக் காண முடியும்.

It is of the Consciousness-Force.

தூய சலனம் சித்-சக்திக்குரியது.

It is that which constitutes Space and Time.

காலமும், இடமும் சித்-சக்தியாலானது.

These two are then merely two aspects of the universal force of consciousness.

இவையிரண்டும் ஜீவியத்தின் பிரபஞ்ச சக்தியின் இரு அம்சங்கள்.

They interact by intertwining.

அவை ஒன்றோடொன்று பின்னிக் ஊடாடும். 

They comprehend the warp and woof of its action.

செயலின் குறுக்கு நெடுக்கிழைகளை அது புரிந்து கொள்ளும்.

It acts upon itself.

அது தன்மீது தானே செயல்படும்.

There is a consciousness higher than Mind.

மனத்தைவிட உயர்ந்த ஜீவியம் உண்டு.

To it our past, present and future are one.

அங்கு திரிகாலமும் ஒன்று சேரும்.

It contains them.

அது திரிகாலத்தை உட்கொண்டது.

It is not contained by them.

இது காலத்துளில்லை.

It is not situated at a particular moment of Time.

அது காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலில்லை.

That is its point of prospection.

அதுவே அது தன்னை இருத்திக் காலத்தைக் காணும் புள்ளி.

There Time is different.

அங்கு காலம் வேறாகக் காண்கிறது.

It is the eternal present.

அது திரிகாலத்தைத் தன்னுட் கொண்ட காலம்.

The same Consciousness can be not situated at a particular point of space.

அதே போல் இடமும் ஒரு புள்ளியில்லாமலிருக்கலாம்.

But it contains all points and regions in itself.

ஆனால் எல்லா இடங்களையும், எல்லா லோகங்களையும் அது தன்னுட் கொண்டது.

Space also is an extension.

இடமும் ஜீவனின் விளக்கம்.

It can offer so.

அதுவும் அப்படிச் செய்யலாம்.

It can be a subjective extension.

இடம் அகத்துள் விரியும்.

It can be indivisible.

இடம் பகுக்க முடியாத முழுமையுடையது.

Space is no less subjective than Time.

இடம் காலத்தைப் போல் அகத்தைச் சேர்ந்தது.

There are certain moments.

சில அசைவுகள் உண்டு.

Then we become aware of such a regard.

அப்படிப்பட்ட மனநிலையை அங்கு உணரலாம்.

It is an indivisble regard.

அது பகுத்தறியாத மனநிலை.

It upholds its unity.

ஐக்கியத்தை அது ஆதரிக்கும்.

It is a self-conscious immutable unity.

அது சலனமறியாத தன்னையறியும் ஐக்கியம்.

Thus it upholds its variations of the universe.

பிரபஞ்சத்தின் மாற்றங்களை அது இவ்விதம் ஆதரிக்கிறது.

There it is a transcendent truth.

அங்கு அது பிரபஞ்சத்தைக் கடந்த சத்தியம்.

How Time and Space would present there?

அங்கு காலமும், இடமும் எப்படித் தோன்றும்?

We must not ask that now.

அக்கேள்வியை நாம் கேட்கக் கூடாது.

Because our mind cannot conceive it now.

ஏனெனில் நம் மனம் அதையறிய முடியாது.

It would even be ready to deny the Indivisible.

நம் மனம் பகுதியைறியாத முழுமைக்கும் இதையறிய முடியாது எனும்.

It would deny to the Indivisible knowledge of the world.

உலகம் பகுக்கப்படாததுஎன்ற ஞானத்தை அது மறுக்கும்.

Our mind and senses know the world in their way.

நம் மனமும், புலனும் உலகைப் பகுதியாக அறியும்.

We would deny another way to the indivisible.

வேறு வழியில்லைஎன நாம் பிரம்மத்திற்கும் கூறுவோம்.

Contd....

தொடரும்....

****

****

book | by Dr. Radut