Skip to Content

06.அன்பர் கடிதம்

 அன்பர் கடிதம்

 

அன்னையே,

நான் உங்களுக்கு 2007 ஜனவரி மாதத்தில் எங்கள் பிரச்சினையைக் கூறி ஒரு கடிதம் எழுதினேன். உங்கள் அன்பான பதிலும் பெற்று, அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பணம் செய்து பலன்களைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். நான் அப்பொழுது உங்களுக்கு நன்றி கூறவேண்டும் என்று நினைக்கவும் இல்லை. அதன் பிறகு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினை வந்தாலும் உடனுக்குடன் தீர்வும் கிடைத்துக் கொண்டு வருவதால் உங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.ஆனால் கொஞ்ச நாட்களாக உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றியைச் செலுத்த வேண்டும் என்று தோன்றிக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால் சொசைட்டியின் வெளியீடுகளான மனித சுபாவம், பேரொளியாகும் உள்ளொளி, அன்னையின் அருளமுதம்,ஆகியவற்றைப் படிக்கும்பொழுது உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச்செய்து என்னை, புத்தகத்துடன் ஐக்கியப்படுத்தி விடுகின்றது. அதன் பிறகு மறுபடியும் சுயநினைவுக்குவர கொஞ்ச நேரம் ஆகிவிடுகிறது. என்னுள் நிறைய நிறைய மாற்றங்களை உங்கள் புத்தகங்கள் கொண்டு வந்துள்ளன. இதுவரை நான் ஒரே ஒரு முறை 2007 ஆகஸ்ட் 15 அன்று அன்னை தரிசனம் பெற்றுள்ளேன்.இப்பொழுது நான் மத்தியப் பிரதேசத்தில் இருந்தாலும் அன்னையின் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன். அதற்கு உங்கள் புத்தகங்களே உதவுகின்றன. படித்தவுடன் மனதில் அமைதி, சாந்தி வந்து குடி கொள்ளும். இவை அனைத்தும் எனக்குக் கிடைக்கச் செய்த உங்களுக்குக் கோடானுகோடி நன்றியைச் செலுத்தினாலும் போதாது.

மிக்க மிக்க நன்றி.

- விஜயலஷ்மி, இந்தோர்.

 



book | by Dr. Radut