Skip to Content

07.சாவித்ரி

 "சாவித்ரி"

P.90 An Answer brought to the torn earth's hungry need.

பூமாதேவியின் புத்ரசோகப் பசிக்குரிய பதில்

 . இரவு தெரியாததை மறைத்துள்ளது அதைக் கிழித்தெறிந்து,

. மறந்த ஆத்மாவை இழந்தவர்க்கு அதை மீண்டும் தருவது,

. மனித முயற்சியின் புனித முழுமை அங்கு முடிகிறது.

. முரண்பாடான வாழ்வை சுமுகமாக்கும் தெய்வீக விவேகம்.

. முணுமுணுக்கும் மனத்தின் சலசலப்பைக் கையில் ஏந்தி,

. மனித வாழ்வின் குழப்பமான நம்பிக்கையை எடுத்து,

. அவற்றை இனிய மகிழ்வின் எழுச்சியான அழைப்பாக்கி,

. மறைந்து வலிக்கும் மந்திரத்தை விலக்கி,

. வாயில்லாத வலியின் பேச்சற்ற முனகல்,

. இத்தனையும் அனந்தனின் அத்தனையாகும்படி

. யானையான வலிமையின் ஒருமையெனும் இலட்சியம்,

. ஆத்மாவின் அந்தரங்க அபயக்குரலைச் சேர்த்து,

. ஜடமான எண்ணத்தை மாற்றாமல் படித்து,

. ஜடமார்பின் ஸ்மரணையற்ற மயக்கம்,

. தூக்க மயக்கத்தில் உளறும் சொல்லென,

. இழந்த பொன்னிழைகளைச் சேர்த்து அணைத்து,

. இறைவனில் ஐக்கிய இதமான இகவாழ்வெனக் காட்டும்.

. பிரிந்த பிரம்மநிலை தவிர்க்க முடியாத தவறு தவழும் நிலை.

. சிருஷ்டியின் பரிணாமக் குரல் "ஓம்" என ஒலிப்பதைக் கேட்டு,

. ஓம் எனப் பரிணாமம் ஓலமிடுவதை ஒருமையுடன் ஒன்றுவதாகக் கண்டு,

. சொல் ஜோதியின் பிரம்மமாக உயர்ந்து,

. ஜடத்தின் அக்னியை ஜகத்குருவின் அழைப்பென அறிந்து,

. எழாத சொல்லின் எழுச்சியை அழியாத ஆத்மாவின் அழகெனக் கண்டு,

. சத்தியம் சுமுகமாக சத்தியத்தை அணைத்து,

. மாறுபாடாக விரியும் மாநிலத்தின் பரப்பு.

. ஞான ஊற்றின் ஒளிமயமாக ஒபரப்பு.

. பிரிந்து விரியும் பிரியா ஐக்கியம்.

. உலகம் வலம் வந்த மனம் இழந்த ஐயம்.

. சொல்லின் திருஷ்டி சுவையென எழுந்த மூலம்.

. மூலம் தந்த முதலெழுச்சியின் ஆடையெனும் அணிகலன்.

. முடிவான புதிரின் முதற்காண்டமென உருவாகி,

. காலனின் சிருஷ்டி குணமென முக்காலமாகி,

. ஐக்கிய அழகை அலங்காரமாக எழுப்பி,

. கருத்தின் கரு கருகரு என எழும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

கண்டத்தை முடிவானதாகவும், மாற்றமில்லாததாகவும் கருதலாம். அல்லது அகண்டத்தின் ஒரு வெளிப்பாடாகக் கருதலாம். அகண்டத்தைக் கண்டத்தின் சட்டப்படி புரிவது ஒன்று. அடுத்தது இறைவனை எங்கும் காண்பது.

கண்டத்தை முடிவானதாகவும் மாற்றமில்லாததாகவும் கருதலாம்.

 



book | by Dr. Radut