Skip to Content

11.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                (சென்ற இதழின் தொடர்ச்சி....)     கர்மயோகி 881) சேவை, ஊழியர் என்பவை சேவையில் பெருமைப்படு- பவர்க்கே எழும். சேவையின் நோக்கம் மனிதனை உருவாக்குகிறது. சேவை அன்பான ஊழியமானால் மனித நிலை உயரும். நான்கு பகுதிகளில்லாவிட்டால் முழு மனிதன் இல்லை. பிராம்மண, க்ஷத்திரிய, வைஸ்யன் சேவையின்றி, அதுவும் தாம் பெருமைப்படும் அன்பு ஊழியமின்றி முழுமை பெறமாட்டார்கள். கடைசிப் பகுதி என்பதால் இதைத் தயார் செய்வது கடினம்.

. ஞானம், வீரம், உற்பத்தி, சேவை ஆகியவற்றுள் சிறந்தது சேவை.

. அது சிறப்புற அன்பால் அது நிறைய வேண்டும்.

. மனிதன் முழுமைபெற, சேவை சிறந்து அன்பால் நிறைய வேண்டும்.

. சிறந்த சேவை அன்பால் நிறைந்து முழுமை பெறும்.

. மனிதன் அறிவால் மட்டும் வாழ முடியாது என்பதுபோல வீரத்தால் மட்டும் வாழ முடியாது. எந்த ஒரு திறமையால் மட்டும் வாழ முடியாது.

. வாழ எல்லாத் திறமைகளும் வேண்டும்.

. எல்லாத் திறமைகளும் செயல்படும்பொழுது ஒன்று முனைப்பாக இருக்கும்.

. எந்த நேரமும் ஒன்றே முனைப்பாக இருப்பதும் பயன்படாது.

. ஒருவனுக்கு எல்லாத் திறமைகளுமிருந்து, எந்த நேரம் எது தேவைப்-படுகிறதோ அந்த நேரம் அது முனைப்பாக எழுவது மனித வாழ்வு பூரணம் பெறுவது. . அப்படி நாம் செயல்பட எந்தச் செயலுள்ளும் இந்த நான்கு அம்சங்களும் அவை கலந்திருக்கவேண்டிய அளவு கலந்திருக்க வேண்டும்.

. க்ஷத்திரியனே வீரன் என்றாலும் நாட்டில் நிர்ப்பந்தம் ஏற்பட்ட நேரம் மற்ற ஜாதியினரும் ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்ற சட்டம் தமிழகத்திலிருந்தது

. இப்பொழுது எந்த ஜாதிக்காரனையும் இராணுவத்தில் சேர்த்துப் பயிற்சி அளித்தால் அவன் க்ஷத்திரியனாக செயல்படுவதைக் காண்கிறோம்.

. அதேபோல் எல்லா ஜாதிக்காரர்களும் பேராசிரியராக, போலீஸ் ஆபீஸராக, இன்ஜீனியர்களாக, ஸ்ரீழ்ஹச்ற்ள்ம்ங்ய் வேலை செய்பவர்களாக வருகிறார்கள்.இது அவசியத்தை முன்னிட்டு நடக்கிறது.

.அவசியத்தால் செய்வதை அறிவால் செய்வது நல்லது.

.ஆத்மாவால் செய்வது உசிதம்.

.வளரும் ஆன்மாவால் செய்வது சிறப்பு.

.வளரும் ஆத்மா நம் ஜீவனின் பாகங்களில் எழ, அப்பாகங்கள் விழித்து எழுந்து ஆன்மாவாகி, மேலும் பரிணாமத்தால் மலர்தல் அவசியம்.

.அனைத்தும் அன்பில் முடிகின்றன.

.அன்பு ஆன்மாவின் அதிகபட்ச முயற்சி

****

882) விரதமும், தவமும் வாழ்வில் இறைவனை சந்திக்க உதவா.முதிர்ந்த அனுபவம் செறிந்த மனப்பக்குவத்தால் இறைவனை வாழ்வில் காணலாம்.முதிர்ந்த அனுபவம், செறிந்த மனப்பக்குவத்தால் ஸ்ரீ அரவிந்த தரிசனம் தவறாது பெறும்.

.விரதம் கட்டுப்படாத உணர்ச்சியை கட்டுப்படுத்தும்.

. தவம் கடுமை வாய்ந்தது.

.கடுமையான சுபாவம் கனிந்துவரப் பயன்படுவது தவம்.

.ஆசையை அனுபவிக்க மறுப்பது விரதம்.

.அனுபவம் முதிர்வது வாழ்வில் ஆத்மா நிறைவது.

.மனப்பக்குவம் எனில் சிந்தனையின்றி விஷயங்கள் புரிவது.

.ஸ்ரீ அரவிந்தர் கண்டது நாராயண தரிசனம்.

.அதில் அர்ஜுனன் கண்ட கோரமில்லை.

.அர்ஜுனன் மனத்தால் கண்டான்.

.பகவான் சத்தியஜீவியத்தால் கண்டார்.

.நாராயணன் (overmind) தெய்வீக மனத்திற்குரியவர் எனினும் அவர் பிறந்தது சத்தியஜீவியம். வேறு சொல் இல்லாததால் நாராயண தரிசனம் என்றார். சுத்த சிவம், சுத்த பிரம்மம், சுத்த விஷ்ணு பிறந்த இடம் சத்தியஜீவியம் என்பதால், அதுவும் சரி எனக் கொள்ளலாம்.

.பிடியை விட்டுக்கொடுப்பது,

அடுத்தவர் அபிப்பிராயத்தை ஏற்பது,

பகுதியை முழுமையாகக் கருதுவது,

சிந்திக்காமல் புரிந்துகொள்வது,

பலனுக்காகப் பிரார்த்திக்காதது,

சரணாகதியை எந்தப் பலனுக்காகவும் ஏற்காதது,

முரண்பாட்டை உடன்பாடாகக் கருதுவது,

பிரம்மம் அனைத்துள்ளும் இருக்கிறது,

அனைத்தும் பிரம்மத்துள்ளிருக்கிறது,

அனைத்தும் பிரம்மம்,

ஆகியவை வாழ்வில் இறைவனை காணும் பாதைகள்.

.ஆன்மா அசைவற்றது, வெளி வாராது.

.ஆன்மா வளர ஆரம்பித்தால் வெளி வரும். வெளி வரும்பொழுது மனமே ஆன்மாவாவது சைத்தியப்புருஷனாகும்.

.வாழ்வின் அனுபவம் சமர்ப்பணத்தால் ஆன்மீக முதிர்ச்சி பெறும்.

.மனம் மௌனத்தால் பக்குவம் பெறும். அது ஸ்ரீ அரவிந்த தரிசனம் தரும்.

தொடரும்....

****

 

ஜீவிய மணி

அநியாயத்தை நியாயமாக்கும் மனிதன்.


 

 book | by Dr. Radut