Skip to Content

05.அஜெண்டா

' Agenda'

அன்னை அஜெண்டாவில் கூறியவை:

1.ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது : அருளிடம் நாம் நம்மை முழுமையாக ஒப்படைப்பது.

2. அப்படி நம்மை ஒப்படைக்க நாம் அருளை மட்டும் நம்ப வேண்டும்.

3.நம்மை ஒப்படைக்க, அருளை மட்டும் நாம் நம்ப, பொய் நமக்கு அருவெறுப்பாக இருக்க வேண்டும்.

4. சத்தியம் நமக்கு எட்டும் தூரத்திலுள்ளது. நாம் சத்தியத்தைப் பொருட்படுத்துவதில்லை.

5. மனிதனுக்குப் பொய் அருவெறுப்பானால், உலகம் சத்திய ராஜ்ஜியத்திற்குத் தயாராகும்.

.நமது வாழ்வில் முக்கியக் கட்டங்களை நினைத்துப் பார்த்தால் நமக்குப் பொய் அருவெறுப்பாக இருந்துள்ளதா எனத் தெரியும். எந்த வழக்கு வம்பாக நீடித்ததோ அதில் பொய் அந்த அளவு கலந்திருக்கும்.

.அது நடந்து 10 ஆண்டானால், இன்று பொய் அன்றைய மனநிலையைவிட அதிகமாக அருவெறுப்பாக இருக்கிறதா? இருந்தால் அருள் செயல்படும்.

.விஷயம் முக்கியமானால் சத்தியத்தைவிட பொய் ருசிக்கிறது, வசதியாக இருக்கிறது, ஆதாயமாக இருக்கிறது என்ற மனநிலை என்றோ, இன்றோ நமக்கிருக்கிறதா? இருந்தால்,

அருள் தொலைவிலும் நம்மை நோக்கி வாராது.

.விஷயம் பெரியது, சிறியது என்பது அன்னைக்கோ, அருளுக்கோ இல்லை.நமக்குப் பெரிய விஷயம் பயம் தரும். ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களூர் தியான மையத்திற்குப் போவது அது போன்றது.

அருளை முழுமையாக ஏற்பது;

அருளிடம் முழுமையாக நம்மை ஒப்படைப்பது;

அருளை மட்டும் நம்புவது;

பொய் அருவெறுப்பாக இருப்பது;

சத்தியத்தை மனதால் எட்டித்தொட்டு ஏற்பது;

சத்தியத்தை மட்டும் ஏற்பது,

என்ற மனநிலை வளர்ந்து, அது மனத்திற்கு இனித்தால், அம்மன -நிலையுடன் தியான மையத்திற்குப் போனால்,

மையம் அருள் மையமாக, அமிர்தமாக இனிக்கும்.

அன்னை தரிசனம் நிதர்சனமாகும்.

அங்கிருந்து மொபெட் கடைக்குப் போய் மொபெட் வாங்கப் போனால் வரும் பொழுது கார் வாங்கி வருவோம். அது நடந்தால்,

நாம் அருளுக்குப் பாத்திரமானோம்,

அருளை மட்டும் நம்பியுள்ளோம்என அறியலாம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

படைப்பான ஒவ்வொரு செயலிலும் நாம் ஆரம்பித்ததிலிருந்து நாமே மறைந்து செயலை வெளியிலிருந்து இரண்டாம் பேர் வழியாகப் பார்க்கலாம். அது பேரானந்தம் தரவல்லது.

இரண்டாம் நபரால் இதையும் சாதிக்கலாம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அனிச்சைச் செயல், பிறவிப் பழக்கம், பிடித்தம் ஆகியவை கரணங்கள் தாமே செயல்பட உதவுகின்றன. அதுபோல் ஆன்மாவுக்கு அக்னி கருவியாகச் சேவை செய்கிறது.

அக்னியே ஆன்மாவுக்கு ஆதாரம்.


 


 



book | by Dr. Radut