Skip to Content

13.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி )           

கர்மயோகி

61. சைத்தியப்புருஷனை அழைக்க வேண்டும்.

இது வளரும் ஆன்மா; ஆன்மாவைக் கடந்த நிலை.

கம்பனியில் முதலாளி ஆன்மா, மேனேஜர் சம்பளக்காரன்.

மானேஜர் முதலாளி அளவு திறமை பெற்று, பொறுப்பேற்றால் கம்பனி ஓஹோ என வரும். அது சைத்தியப்புருஷனாகும்.

மனம் அறிவு பெற்றது, உடல் திறமை பெற்றது, இவை பகுதிகள் என்பதுடன் ஆத்மாவுடன் தொடர்பில்லாதவை; ஜீவனற்றவை.

வளரும்ஆன்மா அறிவில் ஆன்மாவாக உதயமாகும்; அது மேதமை. உடலின் திறமையில் ஆன்மாவாக எழும்; அவன் செயல்வீரன்.

முதலாளி மகன் கம்பனியில் இன்ஜீனியர், ஆடிட்டராக வேலை செய்வதை வளரும் ஆன்மா -சைத்தியப்புருஷனுக்கு -  எனக் கூறலாம்.

நாம் செய்யும் வேலையில் உடல் திறமையை வெளிப்படுத்தும், உயிர் உணர்ச்சி தரும், மனம் அறிவால் விளக்கம் தரும், ஆன்மா சாட்சியாகப் பின்னாலிருக்கும்.

உடல் திறமையை நம்பாவிட்டால், உயிர் உணர்ச்சியை நம்பாவிட்டால்,மனம் அறிவை நம்பாவிட்டால் நம்மால் சமர்ப்பணம் செய்ய முடியும்.

திடீரென ஒரு கம்பனிக்கு கவர்னர் வரப்போகிறார்என்றால் எதுவும் ஓடாது. உத்தரவு கொடுக்க நேரமிருக்காதுகவர்னர் வந்துவிட்டால் நமது சட்டங்கள் எதையும் செலுத்த நேரமிருக்காது,  அவரவர் இஷ்டப்படி நடக்க வேண்டியிருக்கும். சமயத்தில் அது முதலாளியில்லாத நேரமாகவும் இருக்கும்கவர்னர் வந்து போனபின், "எப்படி நடந்தது, என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனைவரும் தானே சிறப்பாக நடந்தனர்இது போல் கம்பனி என்றுமேயிருந்ததில்லை. கவர்னர் வேலை நடப்பதைக் கண்டு பிரமித்துப் பாராட்டினார்'' என்று சொல்வார்கள்.

இதை சைத்தியப்புருஷன் வெளிப்பட்டுச் செயல்படுதல் எனலாம்.

பாடகர், மேடைப்பேச்சாளர், நடிகர் ஆகியவர்கட்கு இதுபோன்ற நேரம் வந்தால் அற்புதமாக இருக்கும். Mood வந்தாலும் இப்படியிருக்காது என்பர்.  He was in his form, அவர் தம்நிலையிலேயே இல்லை என்பர் (ஆங்கிலத்தில் உண்டு என்பதை தமிழில் இல்லை யென்று கூற வேண்டியிருக்கிறது). எவரும் தம் வேலையில் இதுபோன்ற நேரத்தைக் காணலாம்அன்பான, ஒற்றுமையான குடும்பக் கல்யாணத்தில் இதைக் காணலாம். "இது நம் வீட்டு விசேஷமாக நடக்கவில்லை. பெரிய இடத்துப்  பெரிய விசேஷமாக அன்னை நடத்தினார்'' என்று கூறுவதைக் காணலாம்.

٭ நம்மை மறந்து அன்னையை நினைத்தால்

சைத்தியப்புருஷன் வெளிவருவான்.

தொடரும்....

**** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

செயல்கள் முழுமையானவைநம் விருப்பங்களால் கட்டுப்படாதவை. அன்றாட வாழ்விலும் அவற்றைக் காணலாம். ஒரு பிள்ளையைப் புறக்கணித்து, மற்றொரு பிள்ளையைச் செல்லமாகக் கருதி அவனுக்கு மட்டும் கொடுக்க தகப்பனார் விரும்பியது புறக்கணித்த பிள்ளை வாழ்வில் பூர்த்தியாவதைக் காணலாம். இது தலைகீழாகவும் நடக்கும்காங்கிரஸ் சுதந்திரம் பெற்றதுஆயுள் முழுவதும் சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் நாட்டை ஆள்வதைக் காண்கிறோம்இந்த அம்சத்தைப் புரிந்து கொள்வது ஞானம்.

புறக்கணிக்கப்பட்டவர் பெறும் அதிர்ஷ்டம்.


 


 



book | by Dr. Radut