Skip to Content

08.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

     சுமார் ஆறு மாதங்களாக மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டியின் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டு தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன்.

     நான் ஆபீஸில் வேலை இல்லாத நேரங்களில் படித்துவரும்பொழுது, என்னுடன் வேலை செய்யும் ஒருவர் (வயது 70) நான் படிக்கும் புத்தகங்களை அவரும் எடுத்து ஒரு சில பக்கங்களை பார்த்துவிட்டு, "இது உபநிஷதத்தில் கூறப்பட்டுள்ளது, நமது ஆச்சாரியன் சொன்னது'' என்று கூறிவிட்டு போய்விடுவார்நான், "முழுவதும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்'' என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டேன்.

     ஒரு நாள் அவரிடம் The Life Divine புக்கை கொடுத்து படிக்கச் சொன்னேன்அவர் புத்தகத்தை வாங்கியவுடன் ஒரு பக்கத்தை எடுத்தார்அதில் the problems of human being என்றிருந்ததுஅதைப் படித்து விட்டு, "இனி இதுபோல் யாராலும் எழுதமுடியாது. இப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் டிக்க்ஷனரி வைத்துக்கொண்டுதான் படிக்கவேண்டும்'' என்று கூறி, தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். நான், "அதை நான் தினம் ஒரு  பக்கம் படிப்பேன்எனவே பிறகு தருகிறேன்'' என்று கூறி வீட்டுக்கு எடுத்தும் சென்றுவிட்டேன்.

     மறுநாள், இவர் ஓரளவிற்கு ஸ்ரீ பகவான், அன்னை கருத்துகளை ஏற்க ஆரம்பித்துள்ளார்என ஊகித்து Lectures on Sri Aurobindo's The Life Divine என்ற புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னேன்அவரும் அப்புத்தகத்தை எடுத்து ஆவலுடன் படிக்க ஆரம்பித்து, சில பக்கங்களிலேயே சிலவற்றைப் புரிந்துகொண்டு அவர் என்னிடம் கீழ்க்கண்டவாறு சொன்னார்:

     "எனக்கு இதுநாள்வரையில் இருந்த மனகஷ்டங்கள் இப்புத்தகத்தை படித்தபிறகு தெளிவாகிறது'' என்று கூறிவிட்டு, "இப்புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டுத் தருகிறேன்'' என்று சொன்னதைக் கேட்டுவிட்டு நான் அதிர்ந்து போனேன்ஏன் என்றால் ஒரு சில பக்கங்களைப் படித்ததற்கே இந்தப் பெரிய மாறுதல் ஏற்பட்டால், முழுவதும் படித்தபிறகு அவரிடம் என்ன மாறுதல் வரும் என கற்பனை செய்ய முடியவில்லை!

     மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டியின் புத்தகங்களை பிறருக்கு எடுத்துச் சொல்ல வைத்த அன்னையின் பாதகமலங்களில் என் நன்றியை சமர்ப்பிக்கின்றேன். 

     இதுபோல் இன்னும் ஸ்ரீ பகவான், அன்னையை அறியாதவர்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு அறிய வைப்பதற்கு அன்னை அருள்புரிய வேண்டுமாய் பிரார்த்தனை செய்கிறேன்இதுபோன்று நான் புத்தகச் சேவை செய்ய அன்னைதான் அருள் புரியவேண்டும். நன்றிகள் பல!

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நமக்குரிய யோக முறை எதுஎன்று அறிந்து, அதைப் பெற முனைய வேண்டும்.

அதுபோன்ற முறைகளில் பல:

1. தீவிர பிரார்த்தனை.

2. உணர்வின் ஏக்கம் உச்சக்கட்டத்தை அடைவது.

3. (THAT ) 'அது' உன்னை வந்தடையும் முறையை பூரணமாக அறிவது*.

4. பற்றற்றிருத்தல்.

5. சமர்ப்பணம்.

6. ஆன்மாவின் அக்கறையை அதிலிருந்து திருப்புவது.

             உரிய முறை உயர்ந்த முறை.

-------------------------------------------------------------------------------------------

* THAT 'அது' என்பது முடிவானது; பிரம்மம். நமக்குகந்த முறையை நாம் கண்டுபிடித்துவிட்டால், அம்முறைக்கு நம் வாழ்வில் இருக்கும் பலன் THAT 'அது' செயல்படுவதுபோலிருக்கும்.

 


 



book | by Dr. Radut