Skip to Content

09.சூட்சுமப் பார்வை

சூட்சுமப் பார்வை

N. அசோகன்

     நம்முடைய ஊனக்கண்ணால் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம்இது ஜடவுலகில் நாம் காண்பதுநம் கண்களுக்குத் தெரியாத சூட்சும உலகமொன்றுள்ளதுஇதையும் தாண்டி காரணவுலகம்என்று ஒன்றும் உள்ளது. அங்கே தெய்வீக சக்திகள் நிலவுகின்றனஅச்சக்திகளின் செயல்பாடுகளுக்குண்டான பலனை நாம் ஜடவுலகில் பார்க்கிறோம்சூட்சும சக்திகள் செயல்படும்பொழுது நாம் வாயால் சொல்லாதது நடந்து நிறைவு பெறுவதைக் காணலாம்மனிதர்களிடையே நிறைய சூட்சும விழிப்புணர்வும் உள்ளதுஅதே சமயத்தில் சூட்சுமச் செயல்பாடுகளைப் பற்றி நிறைய அறியாமையும் உள்ளது.

     விவசாயிகளுக்குப் பயிர் செய்கின்ற பருவம் பற்றியும், அரசாங்கத் துறையிலிருப்பவர்களுக்கு inspection பற்றியும், குடும்பங்களுக்கு அவரவருடைய உறவினர் வட்டத்திலுள்ள திருமண வயதிலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களைப் பற்றியும் முன்கூட்டியே விவரம் தெரிவதுண்டு. வருங்காலத்தைப்பற்றி இப்படியொரு சூட்சும அறிவுள்ளபொழுது வருங்காலத்தை நம்மால் வெற்றிகரமாகச் சந்திக்க முடிகிறதுஜடவுலகில் நம்மால் உடனடியாகப் பலன்களைப் பார்க்க முடிகிறதுஆனால் சூட்சும உலகம் அதிகப் பலன்களைத் தாமதமாகத் தருகிறதுசூழ்நிலை பொருத்தமாக மாறும்வரை அப்பலன்கள் வெளிப்படுவதில்லை.

     நிறைய நிலபுலன்கள் வைத்திருந்த விவசாயி ஒருவர் தம்முடைய நிலங்களை எல்லாம் தமது நான்கு மகன்களுக்கும் சமமாகப் பிரித்துத் தந்தார்அவருக்கோர் அரிசி ஆலையிருந்ததுஎல்லோருடைய கண்களும் அதன்மேல் பதிந்திருந்தன. இறுதியில், விசுவாசமாக வேலை செய்த ஊழியர் ஒருவருக்கு அந்த ஆலை போய்ச் சேர்ந்ததுவிசுவாசமென்பது ஒரு சூட்சுமமான பண்பாகும். அதற்குண்டான பலன் உடனே தெரியாதுதாமதமாகவே தெரியும்.

     ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்கு ஒரு கதாசிரியருடன் தொடர்பு இருந்தது. ஒரு நாள் தயாரிப்பாளர் தம்முடைய பணபலத்தைப் பயன்படுத்தி கதாசிரியரைக் கம்பெனியிலிருந்து வெளியேற்றினார்அவ்வருடம் முடிவதற்குள் கதாசிரியர் மாநில அமைச்சரவையில் அமைச்சரானார்அப்பொழுது அந்தத் தயாரிப்பாளர், "இவர் அமைச்சராவார் என்று தெரிந்து இருந்தால் நான் அந்நேரம் இவருடன் சண்டை போட்டிருக்கமாட்டேன்'' என்றார்அந்நேரம் அரசியல் சூழல் எத்திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று அவர் அறியாமலிருந்துவிட்டார்ஓர் அரசியல்வாதி முதலமைச்சராக மாறியபொழுது அவருடனிருந்தவர் ஒருவர், "இனிமேல் இவரின் கீழ் வேலை செய்பவர் எல்லோரும் இவர் எந்தக் கோவிலுக்குப் போகிறார், இவருக்குப் பிடித்தமான உணவு என்ன, உடை என்ன, பிடித்தமான நண்பர்கள் யார், எதிரிகள் யார், உறவினர்கள் யாரென்று தெரிந்துவைத்துக்கொள்வார்கள்'' என்றார். இம்மாதிரி விஷயங்களைத் தெரிந்துவைத்துக்கொள்வதில் நம் நாட்டு மக்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்.

     ஒழுக்கம், நேர்மை, விசுவாசம் போன்ற பண்புகள் சூட்சும உலகில் நம்மை வலுப்படுத்துகின்றனஅவற்றிற்குண்டான பலன் வரும்பொழுது அபரிமிதமாக இருக்கும்.

     அனுபவப்பட்ட சமையல்காரர்கள் தாம் சமைத்த உணவை ருசி பார்த்தோ அல்லது கையால் தொட்டோ பதமறிவதில்லைஉணவைப் பார்த்த மாத்திரமே அதன் பக்குவத்தைப் புரிந்துகொள்கிறார்கள்இதுவொரு சூட்சுமத் திறமையாகும். ஒரு தேநீர் மற்றும் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளராக இருந்த சமையல்காரர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் ருசிக்கு ஏற்றபடி காப்பி மற்றும் தேநீர் போட்டுத் தரும் திறமை பெற்றிருந்தார். அவர் கடையில் காப்பி குடித்தவர்கள் வேறெங்கும் குடிக்கப் பிரியப்படமாட்டார்கள்அடுத்தவருடைய ருசியை அறிந்துகொள்ளும் திறமை ஒரு சூட்சுமத் திறமையாகும்ஆன்மாவுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் எல்லோரும் அவரவருடைய தொழிலில் இப்படியொரு சூட்சுமத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இத்திறமை அவரவருடைய தொழிலில் முதல் நிலைக்குக் கொண்டு செல்ல உதவும்.

     பூவும், பழமும் தம்முடைய மணத்தைப் பரப்புகின்றனபழமென்பது ஜடமானது. ஆனால் பூவின் மணம் என்பது சூட்சுமமானதுஆன்மா என்பது முழுவதும் சூட்சுமமானது. வாழ்க்கைக்குச் சிறப்பைக் கொண்டு வருவது அதனுடைய சூட்சுமப் பகுதியாகும்தொழிற்சாலை உற்பத்தியானாலும், குடும்பப் பாசமானாலும், மேடைச் சொற்பொழிவானாலும், கண்ணிற்குத் தெரிந்த திடப்பகுதிகளைவிட, கண்ணிற்குத் தெரியாத சூட்சுமப் பகுதிகளே முக்கியமானவையாகும்.

****

 ஸ்ரீ அரவிந்த சுடர்

அறியாமை விழிப்படைந்து அறிவுடைமையாக மாறும்பொழுது அது செயலிலும், நிகழ்ச்சியிலும், எண்ணத்திலும்,உணர்ச்சியிலும் பிரதிபலிப்பது. உள்ளுணர்வை கண்ணாடியாக வாழ்வு பிரதிபலிப்பதாகும்.

           அறியாமை அறிவாகி நம்முள்ளுணர்வு வாழ்வை    பிரதிபலிப்பது  ஆன்ம விழிப்பாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவன் முழுமையானதுஅதன் அறிவு பூரணம் பெற்றது. கடந்த காலமும் அதனுட்கொண்டதுமுழுமையடையும்பொழுது அது மேலும் செறிவடைகிறதுஇது சைத்தியப்புருஷனில் இருக்கிறது; சுமுகமானது. அதனால் இனிமை அதிலிருந்து எழுகிறது.

முழுமையும் சுமுகமும் இனிமையாகும்.


 


 


 


 


 


 



book | by Dr. Radut