Skip to Content

13.மக்கள்தொகை

மக்கள்தொகை

சுமார் 40 ஆண்டுகளாகப் பெருகிவரும் மக்கள்தொகை பெரிய சாபக்கேடு எனத் தினமும் கேள்விப்படுகிறோம். சமீபத்தில் அமெரிக்கப் பத்திரிகையொன்று இந்தியாவுக்கும், சைனாவுக்கும் 2030முதல் 2050வரை ஜனத்தொகை வரப்பிரசாதமாக அமையும். அதனால் அவர்கள் வருமானம் பெருகும். சைனா உலகில் முதன்மையான பொருளாதார நாடாகும். அமெரிக்கா இரண்டாவதாகும். இந்தியா மூன்றாவதாகும். அன்று இந்தியர் வருமானம், தலைக்கு,

$17,300 ஆகும். அது இன்று இத்தாலியின் வருமானமாகும். இன்றைய

இந்தியர் வருமானமான $486வுடன் ஒப்பிடும்பொழுது அது 36 மடங்காகும்,

என்று எழுதியுள்ளது. எதிர்காலத்தில் மேலைநாடுகளில் வயதானவர் தொகை அதிகமாகவும், இளைஞர் தொகை குறைவாகவுமாகும். ஆனால், சைனாவிலும், இந்தியாவிலும் இளைஞர் தொகை அதிகப்படுவதால் நாடு அதிக உற்பத்தி செய்து முன்னேறும்எனக் கூறுகிறது.

- சாபம் வரமாவது திருவுருமாற்றம்.

- சத்தியஜீவிய சக்தி நம் குறைகளை நிறைவாக்கி, கஷ்டங்களை வாய்ப்பாக மாற்றி, சாபக்கேட்டை வரப்பிரசாதமாக மாற்றவல்லதுஎன்பதை மேற்கூறிய கட்டுரை முன்னோடியாக விளக்குகிறது.

*******



book | by Dr. Radut