Skip to Content

11.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

நாங்கள் 5 சகோதரர்கள் தனித்தனியே சமைத்து ஒரே வீட்டில்,பெரிய வீட்டில், வசித்து வருகிறோம். எங்கள் வீட்டு water tank overhead tank 3வது மாடியில் ஒரு side இல் உள்ளது. அந்த cement tank கடந்த ஒரு வருடமாக leak ஆகிக் கொண்டிருந்தது. அதைச் சீர் செய்ய நான் தான் முயல வேண்டும். நான் செய்ய வேண்டும் என்றால் "முடியாது',மீதிச் சகோதரர்கள் பார்க்கட்டும் எனக் கூறிக் கழித்துவிட்டேன்.இருப்பினும் தண்ணீர் லீக் ஆகிறது. என் மனைவி என்னிடம் அதைச் சரி செய்ய அடிக்கடி கூறினார். ஆனால் எனக்கோ, இழுப்பு பிராப்ளம்.வேலை செய்தால் அடிக்கடி மாடி ஏறி, டேங்க் மேற்பார்வை பார்க்க வேண்டும். இதனால் என் உடல்நலத்திற்குச் சரி வாராது. இருப்பினும் இந்த மேட்டரை ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பித்தேன். கடந்த 12 நாட்கள் நான் ஊரில் இல்லாத சமயம் என் சகோதரர் ஒருவர் வேலையாட்களை வைத்து வாட்டர் டேங்கினைச் சரி செய்து, வாட்டர் லீக்கேஜை நிறுத்தினார். ஊரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்தபோது, இந்த ஆச்சர்யத்தை, அற்புதத்தைக் கேள்விப்பட்டேன். ஸ்ரீ அன்னை அவர்கள் என் வாழ்வில் நடத்தியது மறக்க முடியாத பேரனுபவம் ஆகும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சட்டத்தால் (law or rule ) நியாயத்தை வழங்க முடியாது. அவற்றால் அநியாயத்தைத் தடுக்க முடியும். அவற்றாலும் நியாயம் வழங்க முடியும். அதற்கு, சட்டத்திற்கு பண்பு, நேர்மை, தெளிவு, நியாய உணர்வு தேவை.


 


 



book | by Dr. Radut