Skip to Content

06.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

                                                   (சென்ற இதழின் தொடர்ச்சி....)  கர்மயோகி

இந்த 93 முறைகளையும் விவரித்து எழுதினால் கட்டுரை நீளும்.எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டவை என்பதால், கேள்வி எழும் இடங்களுக்கு மட்டும் விளக்கம் எழுதுகிறேன். மீண்டும் மையக் கருத்தைக் கூறுகிறேன். நாம் ஓரளவு அன்னையை அறிந்துள்ளோம்.அவரைப் பற்றி முழுமையாக அறிவது கடினம். யோகம் பயின்றால் தெரியும்.ஏதோ காரணத்தால் விவரமாகத் தெரியும் பொழுது "இதெல்லாம் நமக்கில்லை" என மலைப்பாகத் தோன்றும். அது உண்மை இல்லை. 30ஆண்டுகட்கு முன் கனவு காணமுடியாதவை இன்று ஏராளமான பேருக்குப் பலிக்கிறது. அன்னையின் சிறப்பை உச்சக்கட்டத்தில் அறிந்தவர் மலைத்துப் போவதற்குப் பதிலாக அதுவும் நமக்கு முடியும் எனக் கூறும் வாயிலாக இக்கட்டுரை எழுதுகிறேன். பேராசையால் பெரிய விஷயத்தைக் கருதுபவர் வேறு. அவர் என் பிரச்சினையில்லை.நம்மைப் போன்றவர் எட்டிய பெரிய நிலையை நாமும் எட்ட வேண்டும் என்பது நியாயமான எண்ணம். அதற்குரிய முயற்சி பலிக்கும் என்பதை இக்கட்டுரை கூறும். அதற்குரிய முறை எது என்ற கேள்விக்கு -எதுவும் முறை என்பது பதில்.

முறை எதுவானாலும், பூரணமாகச் செய்தால் பலிக்கும் என்பதே கருத்து.

1.காரியம் கூடிவரும்பொழுது மேலே போக வேண்டும். Raise the rising aspiration. காரியம் கூடிவந்தவுடன் நாம் அனைத்தையும் மறந்து காரியத்தைப் பார்க்கிறோம். அந்த நேரம் நெஞ்சு ஆர்வமாக இருப்பது தெரியும். அந்த ஆர்வம் உயரும்படி உள்ளே மனம் செயல்பட வேண்டும்.

காரியம் கூடிவரும் நேரம் பெரிய நேரம். பெரிய நேரம் வந்தது பெரிய மனநிலை எழுந்ததால். பெரிய நேரம் தொடர நாம் பிரியப்படுகிறோம். அது தொடர பெரிய மனநிலை தொடர வேண்டும். காரியம் கூடிவரும் அதே க்ஷணம் மனம் பழைய நிலைக்குப் போகும்.

2. எது உனக்குச் சிறந்த முறையோ அதை அளவுகடந்து பின்பற்று.

இங்கு 90க்கு மேற்பட்ட முறைகளைக் கூறினேன். இதுபோல் மேலும் பல முறைகளை நாம் நினைவுகூர முடியும். நாம் எதிர்பார்க்கும் அளவுகடந்த பெரிய பலன் பெற ஒரு முறை போதும். அம்முறையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே நிபந்தனை. முறை சுத்தம் செய்வதாக இருக்கலாம்.பெருக்கித் துடைப்பது நமக்குச் சுத்தம். சுத்தமான இடங்களை இன்று ஏராளமாகப் பார்க்கலாம். அந்தச் சுத்தமும் அடுத்த கட்டம் போக முடியும். தரையைச் சுத்தம் செய்வது; மேஜை, நாற்காலியைத் துடைப்பது;அவற்றிற்கு அடியில் துடைப்பது; வெள்ளையடிப்பது; சீப்பு, சோப்புப் பெட்டியைக் கழுவுவது; பல் விளக்கும் பிரஷ்ஷை சர்ஃப் போட்டு கழுவுவது என 10 முதல் 20 கட்டங்களை ஏற்படுத்தி, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

எரிச்சல் படக்கூடாது என்பது முறையானால், எரிச்சல் மனத்திலும் எழக் கூடாது; ஒரு முறையும் உள்ளே தவறக் கூடாது.(.ம்.): நம்மால் முடிந்ததை 100% செய்து முடித்தால், அன்னை செயல்படுவார்.

3.சைத்தியப்புருஷன் செயல்படும்படி நடப்பது சரி.

இதை விளக்குவது எளிது. எந்த நேரமானாலும், எந்த இடமானாலும்,எந்த வேலையாக இருந்தாலும், பிரச்சினை நினைவுக்கு வந்தவுடன், க்ஷணம் தாமதிக்காமல் அன்னையிடம் கூறுவதே இம்முறை.

4.மௌனம் சேர்ந்து மனம் கனத்தால், அதைப் பேச அனுமதிக்க வேண்டும்.

மௌனம் சேர்ந்தால் பேச முடியாது. பேசினால் மௌனம் கலையும். ஆனால் மௌனம் முழுவதும் சேர்ந்தால் ஜீவன் ஆழ்ந்து, அகன்று,செறிவு பெற்று கனக்கும். அப்பொழுது பேசலாம். அது மௌனத்தைக் கலைக்காது. மௌனத்தின் பெருஞ்சக்தி சொல்மூலம் வெளிப்படுவது தெரியும். அடுத்த கட்டத்தில் அப்படிப் பேசுவதால் மௌனம் வளர்ந்து, மௌனத்தின் பின்னுள்ள மௌனமாகும்.

5.உனக்குத் தெரிந்த அத்தனைக் கட்டுப்பாடுகளையும் (disciplines)மொத்தமாகப் பின்பற்ற வேண்டும்.

இங்கு 93 முறைகளைக் காண்கிறோம். ஆனால் ஒருவருக்கு 8 அல்லது 10 முறை பழக்கமாக இருக்கும். அவையனைத்தையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

6.கூறும் குறையை நிறைவான நினைவாக மாற்றுதல்.

ஒருவர் மீது குறை மனத்தில் எழுகிறது. இவரை நம்ப முடியாது என நினைக்கிறோம். மனம் அதையே 10 நிமிஷம் கருதும். அத்துடன் வேறு வேலைக்குப் போகிறோம். அதற்குப் பதிலாகச் சற்று பாஸிட்டிவாக நினைத்துப் பார்த்தால், அவர் எந்த விஷயங்களில் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நம்மிடம், பிறரிடம் நடந்து கொண்டார் என்ற நினைவு வரும்.குறையைப் புறக்கணித்து, இந்த நிறைவைப் பாராட்டலாம். அடுத்த நிலையும் உண்டு. அவர் நம்மிடம் நம்பிக்கைக் குறைவாக நடப்பது நம்முள் உள்ள நம்பிக்கைக் குறைவின் பிரதிபலிப்பு என ஏற்க வேண்டும். அது நிறைவு.

7.வெறுப்பின் பின் இறைவன் உள்ளதைக் கவனி.

வெறுப்பு அன்பின் தலைகீழ் உருவம் என்பது தத்துவம். அன்பு மேலுலகினின்று பொய்யான நம் உலகுக்கு வந்ததால் வெறுப்பாகத் தெரிகிறது. வெறுப்பு வெறுப்பன்று, அன்பேயாகும். நம் மனத்தில் வெறுப்பு இல்லாவிட்டால் நமக்கு வெளியில் வெறுப்பு தெரியாது.

8.}உள்ளம் அடங்கினால் உலகை உள்ளே நாடு

15 } உள்ளே போ. உலகம் உள்ளே தெரியும்வரை உள்ளே போ. உலகை வெளியில் காண்பதற்குப் பதிலாக உள்ளே காண்பது உண்மையை அறிவது.

இவை பெரிய யோகப் பயிற்சிகள். பொதுவாக மனம் அடங்கவில்லை,உள்ளே போக முடியவில்லை என்பார்கள். ஆனால் பக்குவமுள்ளவர் பலர் என்பதால், அவர்கட்கு இது பலி க்கும். பலிப்பது பெரியது. ஒருவருக்கு இது பலித்தால்,இதன் மூலம் எதுவும் பலிக்கும்.பெரியது, சாமானியர்கட்கு இல்லை என்பது உண்மை. சாமானியர்கட்கு பெரியது பப்பது அன்னையிடம் பலரும் கண்டது.

9. மௌனம் சிறந்து காட்சியாகும்.

உணர்ச்சியால் காட்சி பெறுபவர் அநேகர். அவர்கட்கு அக்காட்சி பலிக்கும்.மனம் உணர்ச்சியைக் கடந்தது. முனிவர் மனத்தின் மௌனம் மனத்தையும் கடந்தது. காட்சி ரிஷியைச் சேர்ந்தது. ஓர் ஆபீசில் கிளார்க் மூலம் ஒரு காரியத்தைநிறைவேற்றுவதற்கும்,  ஆபீசர்மூலம் நிறைவேற்றுவதற்கும் உள்ள வித்தியாசம், இந்த இரண்டு காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.மனம் மௌனமாகும் பொழுது சில சமயம் தானே கலையும். சில சமயம் உயரும். உயரும் பொழுது நாம் அதைக் கலைக்காமலி ருந்தால் அது காட்சியாக மாறும்.

யோகி - ஞானம் பெற்றவர்.

ரிஷி - மௌனம் சிறந்து எழும் காட்சி.

முனிவர் - மௌனத்திற்குரியவர்.

மனிதன் - சிந்தனைக்குரிய மனம் உடையவன்.

உணர்ச்சி - பெரும்பாலோர் காணும் காட்சி.

தியானத்தில் மனம் அமைதிப்படுபவருக்கு உரிய பயிற்சி முறையிது.

10. காட்சியைக் கருதாதே - அதை ஞானமாக அனுமதி.

நமக்கு எட்டாதவை தோன்றுவதுண்டு. நாம் ஆசைப்படுவது வேறு, தானே தோன்றுவது வேறு. தானே தோன்றுவது ஞானம் (intuition). அவை பிறகு பெரியதாகும், தடையின்றி வளரும். தானே தோன்றும்பொழுது மனத்தின் அமைதி இது ஞானமா, ஆசையா எனக் கூறும். ஞானம் யோகிக்குரியது. யோகி ரிஷியைக் கடந்தவர். காட்சி பக்கும்பொழுது,அது பெரியதானால் காட்சியோடு நின்றுவிடும். அதைக் கருதாது அமைதியாக இருந்தால், காட்சி முதிர்ச்சியடைந்து ஞானம் உதயமாகும். ஞானம் வாழ்வில் உதயமாவது அதிர்ஷ்டத்தின் எல்லைக்கு வருவதாகும்.

தொடரும்....

****


 


 



book | by Dr. Radut