Skip to Content

07.அஜெண்டா

"Agenda"

மனித ஜீவியம் அனந்தத்துடன் தொடர்புகொள்ளும் வாயில்கள் திறந்துள்ளன. அது பலிக்க:

1. தீவிரம்,

2. அகந்தை கரைவது

தவிர்க்க முடியாத நிபந்தனைகள்.

. பௌத்த மதம் ஆசியா முழுவதும் பரவியதற்குக் காரணம் அம்மதம் அகந்தையை வளரவிடுவதில்லை. தான் எனும் முனைப்பு அம்மதத்தைச் சார்ந்தவர்க்கிருக்காது.

. தாவரம், விலங்கு ஆகியவற்றை sub-conscientஎன்ற பகவான் மனிதனை conscient என்றார். Conscient என்றால் கண் திறந்துள்ளது எனவும், sub-conscient என்றால் கண் முழுவதும் திறக்கவில்லை எனவும் பொருள்.

. நாகரீகம்என உலகம் அறிந்தது முழுவதும் விலங்கால் ஏற்படவில்லை மனிதனால் மட்டுமே ஏற்பட்டது.

. அவன் மனம் செயல்பட்டுப் புதியதாக மாறியவை நாகரீகம்.

. மனிதருள் மாணிக்கமாக விளங்குபவன் ரிஷியும் கவியுமாகும்.

நமக்கு முக்கியமாக இல்லாதவற்றுள் கவி இறைவனைக் காண்கிறான்,

அழகைக் காண்கிறான்.

இரவில் கவி வானவெளியில் தன்னை இழந்துவிடுவதுண்டு.

சூரியோதயம், சூரிய அஸ்தமனம் கவிகட்குப் பெரிய பேறு.

குயிலின் குரலைக் கேட்ட கவி தன் வயமிழக்கிறான்.

கவி கண்டு மகிழ்வதை நாமும் ஓரளவு பாராட்டுகிறோம்.

குழந்தைகளைக் கண்டு நாம் மலர்கிறோம்.

மலரின் மணம் மகிழ்விக்காதவருண்டோ!

பாம்புகளில் அதிக விஷமுள்ளதை நல்லபாம்பு என்கிறோம்.

"மூங்கிலை மேலே தூங்கும் பனிநீரை" கம்பனும் வியக்கும்படி

"வாங்கும் கதிரோனே"என ஏற்றப்பாட்டுக் கொண்டாடுகிறது. அடிக்கும் கை அரவணைக்கும்.

காய்க்கும் மரம் கல்லடி படும் என முரண்பாட்டை மனிதன்

உடன்பாடாகக் கருதுவது அவற்றின்பின் ஆண்டவனிருப்பதை அவன் காண்பதாகும்.

இளம் உள்ளங்கள் இணைவதைக் காதல்என உலக இலக்கியம் பாராட்டுகிறது.

வீரனைப் பாராட்டாதவரில்லை.

அனந்தம் அழகாக மனித மனத்தைத் தொட்டவாறு உள்ளது.

ராஜ்ய பாரத்தை விட்டு துறவறம் மேற்கொண்டவர் இறைவனை நடைமுறையில் பாராட்டுகிறார்.

சிபிச்சக்ரவர்த்தி, மனுநீதிச் சோழன் இறைவனின் கருணையை இதயத்தில் கண்டவர்.

பத்தினி விரதம் பகலவனையும் நிறுத்தும் என்றாள் நளாயினி.

திருமூர்த்திகளும் கற்பின் பெருமைக்குத் தலைகுனிந்தனர்.

இறைவனை மனிதன் இடைவிடாது அறிய அவன் ஜீவியத்தின்

வாயில்கள் திறந்துள்ளன.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனத்தைக் கடக்கும் முயற்சியில் அடுத்தவர் கோணத்தில் பார்ப்பது பெரிய முன்னேற்றம் என்றாலும் அது மனத்தின் எல்லைக்குள் உள்ள முன்னேற்றமேயாகும்.

மனிதனுக்குப் பெரிய முன்னேற்றம் மனித முன்னேற்றம்.


 


 



book | by Dr. Radut