Skip to Content

09.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)   

                                                                                                                      கர்மயோகி

889) நல்லதும் கெட்டதும் தேவை. இரண்டும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தும். மனிதன் முழுஆனந்தம் பெற அவன் இரு பக்கங்களையும் அனுபவிக்க வேண்டும்.

நல்லதை ஏற்பதைப்போல் கெட்டதையும் ஏற்றால் வாழ்வு முழுமை பெற்று ஆனந்த மயமாகும்.

நாம் நல்லதை ஏற்கிறோம், கெட்டதை விலக்குகிறோம். இது வாழ்வை முழுமையாக அனுபவிக்க உதவாது.

வாழ்வை முழுமையாக அனுபவிக்க, கெட்டதையும் ஏற்க வேண்டும்.

உடலுக்கு உணவு தேவை; ஆனால் வேலையும் தேவை. ஒருவர் உடலை வளர்க்க உணவையும், உரமான வேலையையும் நாட வேண்டும்.

உணவு நல்லது, வேலை கெட்டது என்பது ஒருவர் போடும் கணக்கானால் அவருடல் வலிமையற்று, பெருத்து பூசணிக்காய் போல் வளரும். நோய்வாய்ப்பட்டால் உடலுக்கு தாங்கும் வலிமை இருக்காது. உணவு எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவு வேலையும் அவசியம்.

வாழ்வில் நல்லதும், கெட்டதும் மொழிக்கு இலக்கியம், இலக்கணம் போலாகும்.

ரிஷிகள் வாழ்வை வெறுத்தனர்; உடலைப் பேண மறுத்தனர்.

அவர்கள் பெற்ற மோட்சம் பெரியது என்றாலும், முழுமை என்ற நோக்குடன் பார்க்கும்பொழுது, அது சரிஎனக் கொள்ள முடியாது; தவறாகும்.

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. 1949இல் சைனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியை நிறுவினர்உலகம் இந்தியாவை ஏற்றது. சுமார் 10 ஆண்டுகள்வரை ஐ.நா. கம்யூனிஸ்ட் சைனாவை ஏற்கவில்லை.

சைனா ஒதுங்கி வாழ்ந்தது.

இந்தியா பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கி வல்லரசுகளுடன் சேராமல் வாழ்ந்ததால் ஆசியத் தலைமையை நேருவும், இந்தியாவும் பெற்றனர். சைனா ரஷ்யாவுடன் சேர்ந்துகொண்டிருந்தது. அதன் இராணுவம் வலிமை பெற்றது. பஞ்சசீலக் கொள்கையாலும் வல்லரசுகளுடன் கூட்டுச் சேர மறுத்ததாலும் இந்தியா இராணுவத்தைக் கருதவில்லை.

1962இல் சைனா இந்தியாமேல் படை எடுத்தது.

நேருவுக்கு இடி விழுந்தது.

12,000 சதுரமைல் இடத்தைச் சைனா அபகரித்தது.

நல்லதை மட்டும் நாடி கெட்டதை விலக்குவது போல் இந்தியா சமாதானத்தை மட்டும் நாடி, போரை விலக்கியது; இராணுவத்தைப் புறக்கணித்தது.

க்ஷணத்தில் நிலைமை மாறியது.

கூட்டு சேராக் கொள்கை கரைந்தது.

அமெரிக்க உதவியை இந்தியா நாடியது.

சைனா பின்வாங்கியது.

முழுமையை மறுப்பது அறிவுடைமையாகாது; அது மடமை.

அரசியல், யோகம், வாழ்வு, வியாபாரம், கல்விஎன அனைத்துத் துறைகட்கும் பொதுவான உண்மையிது.

முழுமையை முழுமையாகப் பாராட்ட வேண்டும்.

****

890) ஆண், பெண் வேறுபாட்டை ஜடம் பயன்படுத்துகிறது. உணர்வில் ஆனந்தம் பெற வலியும் சந்தோஷமும் அவசியம். மனதில் ஞானம் வர அறிவும் அறியாமையும் தேவை.

உணர்வு வலியை ஏற்பதைப்போல் மனம் அறியாமையை ஏற்க வேண்டும்.

மனிதன் வளருகிறான்.

உலகம் நாகரீகமடைகிறது.

வாழ்வு வசதி பெறுகிறது.

வளரும் அறிவு வாழ்வை வசதிமயமாக்குகிறது.

இவை உலகில் ஏற்படும் மாற்றங்கள்.

ஜடமும், உணர்வும், அறிவும் இதற்கு வெவ்வேறாகச் செயல்படுகின்றன.

ஜடம் ஆண், பெண் வேறுபாட்டைப் பயன்படுத்துவதாலும்,

உணர்வு வலியை ஏற்பதாலும்,

மனம் அறியாமையை ஏற்பதாலும்

உலகம் முன்னேறுகிறது.

உலக முன்னேற்றத்தை பகவான் பலவகையாகக் கூறினாலும் ஏழு அஞ்ஞானம், ஏழு ஞானமாக மாறுவதால் நடக்கிறது என்றார்.

பிரம்மம் ஆனந்தம் தேடி சிருஷ்டியை ஏற்படுத்தியது.

இதன் போக்கு, தலைகீழானது.

தலைகீழான போக்கே அதிகபட்ச ஆனந்தம் தரும் என்பது தத்துவம்.

அறியாமையை அறிவு நாடும்பொழுது அறிவு ஆனந்தமாகும் என்கிறார்.

நாம் மடையனைக் கண்டு சிரிக்கிறோம், கேலி செய்கிறோம்.

அவனுக்கும் அறிவுண்டு என ஏற்றுப் பொறுமையாக அவன் என்ன நினைக்கிறான்எனக் கேட்டால்,

அவனுடைய நோக்கில் அவன் நினைப்பது சரி என்று தெரியும். மேலும் அவன் உள்ள இடத்தில் நாமிருந்தால் நாமும் அப்படித் தான் செய்வோம்என்று விளங்கும்.

அந்த அனுபவம் பெறவே அவன் மடையனானான் என்று விளங்கும்.

அதனால் அவன் மடையனில்லை; அவனை மடையன்என நாம்

நினைத்தது மடமை எனத் தோன்றும்.

இந்த மடையன் மனத்தை ஆராய்ந்திராவிட்டால் நமக்கு இந்த

ஞானம் உதயமாகியிருக்காதுஎன விளங்கும்.

மடையன் தன் மடமை என்ற தோற்றத்தால் உலகை மடையர்கள் ஆக்குகிறான்என்பது தத்துவம்.

மடையனுக்குப் புரிவதுபோல் செயல்பட்டவர் உலகத்தலைவர்களாக ஆனார்என நாமறிவோம்.

வலியை நாடும் உணர்வு ஆனந்தமாவதும்,

பெண்ணை நாடும் ஆண் ஆனந்தம் பெறுவதும்,

அறியாமையை அறிவாகக் கருதும் மனம் ஆனந்தம் பெறுவதும் ஸ்ரீ அரவிந்தம் உலகுக்களித்த பரிசுகள்.

      பகவானையடைய இவ்வுண்மைகளை நாம் முக்கியமாகக் கருத வேண்டும். இன்று உலகில் ஏழை, பணக்காரன், மடையன், மேதை, தலைவர், தொண்டர், கவி, சிஷ்யன், கணவன், குரு, மனைவி என்பது போன்ற பலதரங்களை உடையதாகும்மனம் நிறைய பெறும் கருத்து காதல் romance என்பது நாம் கவனிக்கத்தக்கது.

****

தொடரும்.....

ஜீவிய மணி
சதிகாரனை வென்றவனுக்கே  சந்தர்பம்

ஸ்ரீ அரவிந்த சுடர்
பவித்ரமான ஆத்ம்மாவினுள் அன்னை வந்தபின் அவன் முயற்சி
அன்னைக்குத் தடையாகும்.  மற்றவர்கட்கு அம்முயற்சி தேவை .
அன்னை சக்தியைப் பெற்று அனுபவிப்பதே முயற்சி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 



book | by Dr. Radut