Skip to Content

08.அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

(சென்ற இதழின் தொடர்ச்சி....)     

                                                                                                                 N. அசோகன்

5.  முன்னேற்றத்திற்கு தனித்தன்மை (individuality) மிகவும் அவசியம்.

     Value-based functioning இருக்கும்பொழுது முன்னேற்றம் விரைவு 

     பெறுகிறது.

     இந்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் அவர்களுக்குத் தனித்தன்மை, அதாவது individuality அதிகம்நமக்கு அது குறைவுதனித்தன்மை மிகுந்தவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவார்கள். தனக்குச் சரி என்று படுவதைச் செயல்படுத்துவார்கள்.  Self-reliantஆகவிருப்பார்கள். அடுத்தவர்கள் உதவியையோ, ஆதரவையோ நம்பியிருக்கமாட்டார்கள். தன்கையே தனக்கு உதவி என்று தான் செயல்படுவார்கள்.

     இவ்விடங்களில் இந்தியர்களின் பர்சனாலிட்டியே வேறுவிதமாக செயல்படுகிறதுநமக்குச் சரியென்று படுவதால்மட்டும் நாமொரு வேலையைச் செய்வதில்லைகுடும்பம், உற்றார், உறவினர் மற்றும் சமூகம் ஆதரித்தால்தான் நாம் அவ்வேலையைச் செய்வோம்ஊரோடு ஒத்து வாழவேண்டும். அதுதான் நமக்குப் பாதுகாப்பாகவிருக்கும்என்பது நம்முடைய கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்டதுஇதை ஆங்கிலத்தில் social conformity என்கிறார்கள். முன்னேற்றத்தை விரைவுபடுத்த நாம் முயலும்பொழுது இத்தகைய social conformity தடையாக வந்து நிற்கிறது.

     சுயதொழிலும் enterpriseம்தான் நாட்டிற்கு இப்பொழுது தேவை என்னும்பொழுது, ஊரில் நாலு பேர் employmentயைத்தான் தேடுகிறார்கள் என்ற ஊர்ப் பழக்கத்தை மீறித் தைரியமாகச் சுயதொழிலில் இறங்க இளைஞர்கள் தயங்குகிறார்கள். அப்படித் துணிந்து செயல்படுகின்றவர்களையும் உற்றார், உறவினரும் சமூகமும் அதைரியப்படுத்திவிடுகின்றார்கள். அதனால் அவர்கள் ஆரம்பத்தில் சந்திக்கின்ற தடைகளைக் கண்டு பயந்து, பின்வாங்கி விடுகின்றார்கள்.

     சடங்கு, சம்பிரதாயம், ஜாதகம், வாஸ்து, இராகுகாலம் போன்றவை எல்லாம் நம்முடைய பழங்கால வாழ்க்கையைச் சேர்ந்தவைஇவையெல்லாம் நம் முன்னேற்றத்தைத் தடை செய்யுமே தவிர, முன்னேற்றத்திற்கோ, நவீனமயமான வாழ்க்கைக்கோ ஒத்துவாராதவை. திருமணங்களை ஆடம்பரமாகச் செய்யும் பொழுது நிறைய பணம் விரயமாகிறதுஆனால் அதுதான் இப்பொழுது fashion என்றும், மரியாதை என்றும் ஆகிவிட்டதுஇதனால் பணபலமில்லாதவர்களும் கடன் வாங்கியாவது ஆடம்பரமாகத் திருமணங்களை நடத்த முயன்று வீண் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  இவ்வாடம்பரம் அனாவசியம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், துணிந்து எளிமையாகத் திருமணங்களை நடத்த மக்கள் முன்வர தயங்குகிறார்கள். சமூகத்திற்குப் பயந்து தேவையில்லாத ஆடம்பரங்களுக்கு அடிமையாகிப் பணத்தை விரயமாக்குகின்றனர்.

     அமெரிக்கர்கள் இப்படிச் சமூகத்திற்குப் பயந்து வீண்செலவிற்கு அடிமை ஆவதில்லை. 1960இல் பெட்ரோல் விலை மலிவாக இருந்த பொழுது பெரிய கார்களை வைத்துக் கொண்டு பயணம் செய்வது அங்கே fashionஆகவிருந்தது. ஆனால் பெட்ரோல் விலை ஏறியபின்பு பெரிய கார் வைத்திருந்தால் petrol consumption அதிகமாகிறதுஎன்று தெரிய வந்ததுஉடனே எல்லோரும் சிறிய fuel-efficientஆன Japanese கார்களுக்கு மாறிவிட்டனர். வறட்டு கௌரவம் பார்த்துக்கொண்டு, பெரிய கார்களையே வைத்துக்கொண்டு யாரும் வீண்செலவு செய்வது இல்லை.

     அங்கே individuality அதிகம் என்பதால் யார் தயவையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் நிற்பதைத்தான் அதிகம் விரும்புகின்றனர்.  இங்கே அரசாங்கத்திடம் கிடைக்கும் மான்யம், subsidy, சலுகை என்றிவற்றை நம்பியே மக்கள் தம்முடைய முயற்சியைக் குறைத்துக் கொண்டு அரசாங்கத்தின் ஆதரவை அதிகம் நாடுகிறார்கள்விவசாயிகள் இலவச மின்சாரத்தை நீட்டிக்கச் சொல்கின்றார்கள். வசதியானவர் கூட ரேஷன்கார்டுமூலம் மலிவான விலையில் பொருட்களை வாங்கப் பிரியப்படுகின்றார்கள்உண்மையில் ரேஷன் என்பது வறுமைகோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்காக ஏற்பட்டதுஅந்தச் சலுகை விலையில் வசதியானவர்களும் வாங்கப் பிரியப்படுவது நியாயமாகப் பார்த்தால் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

     மாமனார் ஸ்கூட்டர் வாங்கித் தரவேண்டும், கார் வாங்கித் தர வேண்டும், 50 ஆயிரம் அல்லது இலட்ச ரூபாய் வரதட்சிணை தர வேண்டும்என்று மாப்பிள்ளையும் வரன் வீட்டாரும் கேட்பது இங்கே வாடிக்கையாகிவிட்டது. அங்கே இத்தகைய காட்சிகளைப் பார்க்கவே முடியாதுஇப்படித் திருமணத்தின்மூலம் ஆதாயம் தேடுவதை அமெரிக்கர்கள் தங்களுடைய self-relianceகுக் களங்கமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இங்கே மேரேஜ் மார்க்கெட்டில் தனக்கு எவ்வளவு வரதட்சிணை கிடைக்கும் என்பதை மணமகன் பெருமையாகப் பேசிக் கொள்கிறான்.

     இங்கே நாட்டை தொழில்மயமாக்குவதற்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளும் அரசாங்க ஏஜென்சிகளும்  cottage industries  மற்றும் small scale industryகளுக்கும் தொழில்முனைவர்களுக்கும் வழங்கும் கடன் மற்றும் நிதியுதவியைக் கண்டு அமெரிக்கர்கள் அசந்துபோகின்றார்கள்எங்கள் நாட்டில் வங்கிகள் இப்படியொரு தாராள மனப்பான்மையுடன் நிதியுதவியெல்லாம் வழங்குவதே இல்லைநாங்களே முதலீடு செய்து தொழிலை வெற்றிகரமாக நடத்தி, நல்ல லாபமீட்டும் நிலைமைக்கு வந்த பின்னர்தான் மேற்கொண்டு அபிவிருத்திக்காகக் கடன் கேட்க முடியும்இங்கே தாயார் குழந்தைக்கு உணவு ஊட்டுவதுபோல வங்கிகள் மக்களுக்கு நிதிவசதியை வழங்குகின்றன. இவ்வளவு நிதியுதவி பெறும் பொழுது ஏன் இன்னமும் நாடு தொழில்மயமாகவில்லைஎன்று கேட்கிறார்கள்.

     முதலீட்டைத் தாமே திரட்ட அமெரிக்கர்கள் முயலும்பொழுது அதிலுள்ள சிரமங்களைச் சந்திக்கும்பொழுது அவர்களுடைய  organising ability வளர்கிறது. அதனால் அவர்களால் வெற்றிகரமாகத் தொழிலை ஆரம்பித்து நடத்த முடிகிறது. இங்கே அந்த முயற்சி இல்லாமல் பணம் சுலபமாகக் கிடைக்கும்பொழுது அதனுடைய அருமை நமக்குப் புரிவது இல்லை. அதனால் அந்தப் பணம் நமக்கு உபயோகப்படுவதில்லை.

     Microsoft Chairman Bill Gatesஉடைய சொத்தின் மதிப்பு 2,30,000கோடி ரூபாயாகும். அவருக்கு மூன்று பிள்ளைகள்; இரு பெண்கள், ஒரு பையன் உள்ளார்கள். அவர்களுக்கு இப்பொழுது 9 வயதிலிருந்து 2 வயதுதானாகிறது. ஓர் இந்தியத் தகப்பனாராக இருந்தால் இந்த 2,30,000 கோடியில் 2,00,000 கோடியையாவது தன் பிள்ளைகளுக்கு ஒதுக்கிவைத்திருப்பார். ஆனால் Bill Gates இவ்வளவு பெரிய சொத்தில் வெறும் 300 மில்யன் டாலர்தான் (1350 கோடி) பிள்ளைகளுக்கு தருவேன். அதற்குமேல் தந்தால் அவர்கள் பணத்தின் அருமை தெரியாமல் வீணாக்கிவிடுவார்கள் என்றொரு கருத்தைத் தெரிவித்தார்இப்படிப் பெரும்பணக்காரர்கூட பிள்ளைகளை self-reliant ஆகவே வளர்க்க விரும்புகின்றார்கள்.

     அமெரிக்காவில் 1½ வயதிலிருந்து 2½வயதிற்குள் குழந்தைகளுக்கு ஸ்பூன் எடுத்துச் சாப்பிடவும், டாய்லட் ட்ரெயினிங்கும்ட்ரஸ் பண்ணிக் கொள்ளவும், தலைவாரிக்கொள்ளவும் கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் இங்கே 4 வயது குழந்தைக்குக்கூட தாயார் ஊட்டிவிடுவதை நாம் பார்க்கலாம். Self-reliantஆகவிருக்கவேண்டும் என்பது அவர்கள் நோக்கமாகவிருப்பதால் சிறு வயதிலேயே இப்படிப்பட்ட ட்ரெயினிங்கை ஆரம்பித்துவிடுகிறார்கள்இங்கே வயதாகிவிட்டால் பிள்ளை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடன் பல பெற்றோர் இருக்கிறார்கள்ஆனால் அங்கே அம்மாதிரியான எதிர்பார்ப்புகளைப் பெற்றோர் வைத்துக் கொள்வது இல்லை. தம்முடைய சேமிப்பு, ஓய்வூதியம்social security benefits என்றிவற்றை நம்பித்தான் முதுமைக் காலத்தைச் சந்திக்கின்றார்களேயொழிய, கடைசிக் காலத்தில் பிள்ளையோடு போய் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைப்பதில்லைகுழந்தைப் பருவத்திலிருந்து வயோதிகம் வரை இப்படி self-reliance என்ற மனோபாவத்துடன் தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்இங்கே கணவன் கைவிட்டால் இரண்டு, மூன்று பிள்ளைகளுடன், படிப்பறிவில்லாமல், வேலைக்குப் போய் வருமானம் தேடிக் கொள்ள முடியாமல் நிர்க்கதியாக நிற்கும் அபலைப்பெண்கள் அதிகம். அங்கே இப்படிப்பட்ட நிலைமை வந்தால் சமாளிக்கவேண்டும் என்பதற்காக பெண்களும் நன்கு படித்து, சுயமாகச் சம்பாதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால் கணவன் கைவிட்டாலும் நடுத்தெருவிற்கு வருவதில்லை. பெற்றோரிடமோ, உறவினரிடமோ அடைக்கலம் வேண்டுமென்று கெஞ்சுவதில்லை.

     இத்தகைய self-reliance நம் நாட்டவரிடமும் வந்தால் நாடு விரைவாக முன்னேறும். விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்பதால் அரசாங்கத்திற்கு மின்உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் இல்லாமல் போகிறதுஇலவசமாக மின்சப்ளை வழங்குவதால் 5அல்லது 6 மணி நேரந்தான் கிராமப்புறங்களில் சப்ளை வருகிறது.உரிய கட்டணம் கொடுக்க விவசாயிகள் முன்வந்தால் அரசாங்கமும் மின் உற்பத்தியைப் பெருக்கும். விவசாயிகளுக்கும் 24 மணி நேரமும் மின் சப்ளை கிடைக்கும்.

     நம் நாட்டின் முன்னேற்றப் பணிகளுக்கு foreign aid கிடைக்குமா என்று நம்முடைய அரசாங்கம் ஏங்கிக்கொண்டிருந்த நாட்களுண்டு.ஆனால் அமெரிக்காவின் சரித்திரத்தைக் கவனித்துபார்த்தால் இப்படி foreign aidயையெல்லாம் நம்பி அந்நாடு முன்னேறியதாகத் தெரியவில்லைதங்களுடைய சொந்த உழைப்பு மற்றும் திறமை மற்றும்  natural resourcesயை வைத்துத்தான் அந்நாட்டு மக்கள் முன்னேறியுள்ளார்கள். அதே பாசியை நம் நாட்டிலும் பின்பற்றி aids கேட்கும் மனப்பான்மையை உதறித் தள்ளிவிட்டு நம் சொந்தச் சேமிப்பை அதிகரித்து, அதையே முதலீடாக்கி முன்னேற முயன்றால், இதில் நாம் வெளிப்படுத்தும் self-reliance நம் முன்னேற்றத்தை விரைவுபடுத்த உதவும்.

     வருமானத்திற்கும் value-implementationற்குமுள்ள தொடர்பை அமெரிக்கர்கள் நன்கு தெரிந்துவைத்துக்கொண்டுள்ளார்கள். ஆகவே அவர்கள் வருமானத்தை உயர்த்த விரும்பினால் value-implementationயை மேலும் அதிகப்படுத்துகிறார்கள். சுத்தம், ஒழுங்கு, காலந்தவறாமை, குவாலிட்டி (quality), கஸ்டமர் satisfaction, நேர்மை, முறையாகக் கணக்கு எழுதுதல், on-time delivery, சுமுகம், விரயம் தவிர்த்தல், systematic செயல்பாடு போன்ற பண்புகளை அவர்கள் பிஸினஸில் நம்மைவிடப் பல மடங்கு சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றார்கள். அதற்கேற்றாற்போல அவர்கள் வருமானமும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

     Federal Express என்ற courier service அங்கு செயல்படுகிறதுஅமெரிக்காவிற்குள் எந்தவோர் இடத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் courierஐ டெலிவரி செய்துவிடுகிறார்கள். அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைக்கும் மேற்குக் கடற்கரைக்குமிடையே உள்ள தூரம் கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டராகும். New Yorkகிலிருந்து San Franciscoவிற்கு அனுப்புகின்ற courierஐ மறுநாள் டெலிவரி செய்துவிடுகின்றார்கள்அப்படி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தாமதமானால் அவர்கள் வாங்கிய கட்டணத்தொகையை refund செய்துவிடுகிறார்கள். On-time delivery  என்ற valueவை அக்கம்பெனி எவ்வளவு serviceஆக எடுத்துக்கொண்டிருந்தால் இப்படி கட்டணத்தொகையை refund செய்வார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். சென்னையிலிருந்து டெல்லி சுமார் 2000 கிலோமீட்டர் தூரத்தில்தானுள்ளதுஇந்த தூரத்தில் டெலிவரி செய்வதற்கே சென்னையிலுள்ள courier கம்பெனிகள் 2 நாட்கள் கால அவகாசம் கேட்கிறார்கள். அப்படியிருக்கும்பொழுது 5000 கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி 24 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்கிறார்கள் என்றால் இந்த Federal Express courier company எவ்வளவு systematic காகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் கருதவேண்டும்.

     40,000 அல்லது 50,000 சதுர அடி கொண்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களை மிகவும் சுத்தமாக வைத்துள்ளார்கள்அங்குள்ள பல்லாயிரக்கணக்கான பொருட்களை அழகாக அடுக்கிவைத்துள்ளார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டுப் போகிற இடத்தில், பொருட்களை வரிசை கெடாமல் வைத்திருப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை நாமெண்ணிப் பார்க்கவேண்டும். சென்னையிலுள்ள ஸ்பென்சர் பிளாசா ஷாப்பிங் காம்ப்ளக்ஸைப் பார்த்து மக்கள் பிரமித்துப் போகிறார்கள்இம்மாதிரி நூற்றுக்கணக்கான ஷாப்பிங் பிளாசாக்கள் அமெரிக்காவிலுள்ளன. அவற்றையெல்லாம் கண்ணைக் கவரும்வகையில் சுத்தமாக வைத்துள்ளார்கள் என்றால் சுத்தத்தை அவர்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்பது நமக்குப் புரியவேண்டும்.

     இந்தப் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலெல்லாம் வாங்கிய பொருள் திருப்திகரமாக இல்லையென்றால், கஸ்டமர் அதை returnபண்ணி பணத்தைத் திருப்பி வாங்கிக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.  சண்டை போடுவதில்லை. வேறேதேனும் வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்துவதில்லை. அமைதியாகப் பணத்தைத் திருப்பித் தருகின்றார்கள். இப்படி customer satisfactionஐ அவர்கள் பாராட்டுவதால் உண்மையில் அவர்களுக்கு வியாபாரம் அதிகரிக்கின்றது, customer loyalty கிடைக்கிறது.

     ஆனால் இங்கே பொருள் திருப்திகரமாக இல்லை என்று சொல்லி replacement கேட்டாலோ, அல்லது refund  கேட்டாலோ பெரிய கடைகளில் கூடத் தகராறு செய்கிறார்கள்.  Billலிலேயே 'Goods once sold will not be taken back' என்று அடித்து கொடுத்துவிடுகிறார்கள். நம் கண்ணோட்டம் பணத்தின் மேலுள்ளது. அவர்கள் கண்ணோட்டம் இலாபத்தைத் தாண்டி customer satisfaction  என்ற உயர்ந்த valueவின் மேலுள்ளது. அவர்களுக்கு பிஸினஸ் வேகமாக வளர்கிறதுநம் வளர்ச்சியில் அவ்வளவு வேகமில்லை என்றால் அதில் ஆச்சர்யமில்லை.

     அமெரிக்கா நம்மைவிடப் பலமடங்கு dynamism அதிகமுள்ள நாடு.  ஜனத்தொகை 30 கோடி என்றால் அங்குள்ள கார்களின் எண்ணிக்கை 22 கோடியாகவுள்ளது. அதாவது 1000 பேருக்கு 765 கார்கள் இருக்கின்றன. நெடுஞ்சாலைகளைப் பார்த்தால் வெறுங் கார்மயமாகவே காட்சியளிக்கின்றன. இவ்வளவு கார்கள் சாலைகளில் இயங்கி கொண்டிருந்தாலும் horn அடிக்காமல் ட்ராபிக் அமைதியாகத்தான் நகர்கிறதுசென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் traffic noise எவ்வளவு பெரிதாகக் கேட்கும்என்பது உங்களுக்குத் தெரியும். Horn அடிக்காமல் 100 மீட்டர்கூட கார்கள் நகர்வதில்லை.

     நம்முடைய பெருநகரங்களில் இரவு 10 மணிவரையிலும்கூட, குடி இருக்குமிடங்களில்கூட வீதியில் சத்தமிருக்கும். ஆனால் அங்கே residential  பகுதிகளில் இரவு 7 மணிக்குமேல் அமைதியாகவுள்ளது. ஆன்மீகத்தின் பிறப்பிடமான நம் நாட்டில் இருக்கவேண்டிய அமைதி இயக்கத்திற்கும் movementற்கும் பெயர் வாங்கியுள்ள அமெரிக்காவில் தானுள்ளது. எல்லா இயக்கங்களுக்கும் பிறப்பிடம் silence என்றும், இயக்கத்தில் வெளிப்படும் எனர்ஜியெல்லாம் பின்னிருக்கும் silenceஇல் இருந்து தான் வெளிவருகிறது என்பது பகவானின் கூற்று.

     Silence என்ற ஆன்மீகப் பண்பை அமெரிக்கர்கள்தாம் தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றிவருகிறார்கள். ஆன்மீகச் சிறப்புக் கொண்ட நம் நாட்டிலோ silenceஇன் அருமை தெரியாமல் நாம்தான் அதைக் கெடுத்துக்கொண்டு, நம்முடைய எனர்ஜி levelஐ குறைத்துக்கொள்கிறோம்நம்முடைய ஆன்மீகச் சிறப்பிற்கு ஏற்றபடி நம்முடைய வீடுகளிலும் வீதிகளிலும் அலுவலகங்களிலும் ஒரு நல்ல silenceஐக் கொண்டுவந்தால் நம்முடைய எனர்ஜி levelஉம் அதிகரிக்கும், நம் முன்னேற்றமும் விரைவு பெறும்.

6.மனிதனுடைய அறிவாற்றல்தான் அவனுக்குள்ள மிகச்சிறந்த resource ஆகும். அதை வைத்துக்கொண்டு அவனிடமுள்ள limited resource களை limitless resourceகளாக மாற்றிக்கொள்ளலாம்.

     நம்முடைய வாழ்க்கை பலவகைகளில் வரம்பிற்குட்பட்டு உள்ளதுநம்முடைய ஆயுளுக்கு ஒரு வரம்புண்டு. நம்முடைய உடல் தெம்பிற்கு வரம்புண்டு. பலபேருடைய வருமானம் ஒரு வரம்பிற்குட்பட்டுள்ளது.  வரம்பற்ற வருமானத்தைப் பெரும்பாலோரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. நமக்குள்ள சுதந்திரம், அதிகாரம் மற்றும் உரிமைகள் என்று எல்லாமே வரம்பிற்குட்பட்டுள்ளன. பூமியின் பரப்பளவிற்கும் ஒரு வரம்பு உண்டு. பயிரிடுவதற்கு நமக்குக் கிடைத்துள்ள நிலமும், பயன்படுத்துவதற்குக் கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களும் அளவிற்குட்பட்டுத்தான் உள்ளன.

    நிலக்கரி மற்றும் எண்ணெய் வளங்களை நாம் வேகமாகப் பயன்படுத்தி வருவதால் இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளில் இவை தீர்ந்துவிடக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பட்சத்தில் நம்முடைய எனர்ஜி தேவைகளுக்கு என்னசெய்வது என்ற கேள்வி இப்பொழுதே எழுந்துவிட்டதுஇப்படிப் பலவகைகளில் நம் வாழ்க்கை வரம்பிற்கு உட்பட்டிருப்பதால் வரம்பற்ற வளர்ச்சி என்பது மனிதனுக்குக் கிடையாதோ என்ற அச்சமும் மனிதனுக்கு எழுந்துள்ளது.

     ஆனால் உண்மையில் மனிதனுடைய அறிவாற்றலுக்கு வரம்புகளை மீறும் சக்தி உண்டுஇந்த அறிவாற்றலை வைத்துத்தான் மனிதன் நாகரீக வாழ்க்கையையும் விஞ்ஞான வளர்ச்சியையும் இந்த அளவிற்கு மேம்படுத்தியுள்ளான்எனவே இதே அறிவாற்றலை வைத்துக்கொண்டு தற்பொழுது உள்ள வரம்புகளையும் இயற்கை வளங்களுடைய பற்றாக்குறையினால் வரும் பிரச்சினைகளையும் மனிதனால் முறியடிக்க முடியும் என்றாகிறது.

     ஆதிமனிதன் வேட்டையாடியும் மரங்களில் காய்த்த காய் மற்றும் பழங்களையும்தான் உண்டு வாழ்ந்தான்அவ்வகையில் மனித சமூகத்திற்குக் கிடைத்த உணவு சப்ளை குறைவுஇந்தக் குறைந்த சப்ளையை வைத்துக்கொண்டு ஜனத்தொகைப் பெருக்கத்தைச் சமாளிக்க முடியாதுஇத்தகைய நெருக்கடி ஏற்பட்டபொழுது மனிதன் தன்னறிவாற்றலைப் பயன்படுத்தித் தன்னுடைய உணவு சப்ளையைப் பெருக்கிக் கொண்டுள்ளான்ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்குகளைத் தானே வளர்க்க ஆரம்பித்தான்விதை விதைத்துத் தண்ணீர் விட்டுப் பயிர்களை வளர்க்கக் கற்றுக்கொண்டான். பிராணி வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு இவைமூலம் தன்னுடைய உணவு சப்ளையைப் பெருக்கிக்கொண்டுள்ளான்.

      கைகளால் வேலை செய்தவன் நாளடைவில் ஆயுதங்களைத் தயாரித்துக்கொண்டான். அடுத்த கட்டமாக மெஷின்களையும் இப்பொழுது தனக்கு உதவியாக வைத்துக்கொண்டுள்ளான்இதனால் மனிதனுடைய உற்பத்தித்திறன் பெருகியுள்ளதுகால்நடையாகப் பயணம் செய்தவன் இன்று கார், விமானம்மூலம் பயணம் செய்யும்பொழுது அவனுடைய வேகம் அதிகரிக்கிறது. டெலிபோனில் பேசும்பொழுது பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தை நிமிடத்தில் கடக்கிறான்.  கம்ப்யூட்டரில் informationஐச் சேகரிக்கும்பொழுது 1000 பக்கங்களிலுள்ள தகவலை ஒரு சின்ன hardware driveஇல் சேகரிக்கிறான்.

      ஆகவே நம்முடைய அறிவாற்றல் நமக்கு இயற்கை விதிக்கும் வரம்புகளை மீறி நம்முடைய உற்பத்தித் திறனைப் பெருக்கிக்கொள்ள உதவுகிறதுஎன்று தெரிகிறதுஇப்படிப்பட்ட அறிவுத் திறனால் விளைகின்ற வரம்பற்ற வளர்ச்சிக்கு அமெரிக்காவே முன்னுதாரணமாகத் திகழ்கிறதுநம் நாட்டின் labour force இல் 60% விவசாயத்தில் தான் ஈடுபட்டுள்ளனர்ஆனால் அமெரிக்காவில் 2 சதவிதத்திற்கும் குறைவான labour force தான் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. 60% labour force விவசாயத்தில் ஈடுபட்டிருந்தபொழுதும் நம் நாடு உணவு உற்பத்தியில் 1970 வரை தன்னிறைவு பெறவில்லைஆனால் ஒரு சதவிதத்திற்கும் குறைவான labour force  விவசாயத்தில் ஈடுபட்டிருந்தபொழுதும் அமெரிக்கா தன் தேவைக்குமேல் உற்பத்தி செய்து உணவுப்பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டே நம்முடைய விவசாய உற்பத்தித் திறனுக்கும் அவர்களுடைய விவசாய உற்பத்தித் திறனுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

     இரண்டாம் உலகப்போரில் தான் ஈடுபட வேண்டிவரும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. ஆனால் 1941 டிசம்பரில் ஜப்பான் திடீரென்று Pearl harbour இல் தாக்குதல் நடத்தியபொழுது அமெரிக்கா விழித்துக்கொண்டு தானும் போரில் இறங்கியது. அப்பொழுது அமெரிக்க இராணுவத்தில் 1,30,000 வீரர்கள்தானிருந்தனர். அடுத்தவொரு வருடத்திற்குள் அந்த வீரர்களின் எண்ணிக்கை 40,00,000 உயர்ந்ததுதன்னுடைய வீரர்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டிய அவசியம் போக, நேசநாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சோவியத் யூனியனுக்கும் ஆயுதங்கள், பீரங்கிகள், விமானங்கள், போர்க்கப்பல்கள் என்று எண்ணற்ற கணக்கில் வழங்க வேண்டியிருந்ததுஇந்த அபரிமிதமான ஆயுத உற்பத்திக்கு அமெரிக்கா தன்னை வெற்றிகரமாகத் தயார் செய்துகொண்டது. மனிதனுடைய உற்பத்தித் திறனுக்கு வரம்பே இல்லை என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.

     வரம்பற்ற வளர்ச்சி என்பது power of infinity physical levelஇல் வெளிப்படுவதாகும்Infinity எண்ணிக்கையில் வரம்பற்ற வளர்ச்சியைக் கொண்டுவருவதுடன் மற்றும் பல வழிகளில் தன்னாற்றலை வெளிப்படுத்தும். காலத்தையும் இடத்தையும் அளவுகடந்து சுருக்குவது infinityயின் வெளிப்பாடு எதிர்த்திசையில் நிகழ்வதாகும். இரண்டாம் உலகப்போர் நிகழும் சமயத்தில் கப்பலொன்று ரிப்பேராகிப்போனது. சாதாரணமாக அதைச் சரிசெய்ய மூன்று மாதங்களாகும். ஆனால் போர் நெருக்கடியின் காரணமாக அந்த ரிப்பேர் வேலையை விரைவாக முடிக்க விரும்பியவர்கள் 2 நாட்களில் முடித்தார்கள் என்றால் அதை நம்மால் நம்பமுடிகிறதா? ஆனால் இப்படியொரு சம்பவம் உண்மையில் அந்நாட்டில் நிகழ்ந்தது.

     Infinity physical levelஇல் வெளிப்படுவதுபோல உணர்வு லெவலிலும் வெளிப்படும், எண்ணத்திலும் வெளிப்படும். தம்மால் தீர்க்கமுடியாத பிரச்சினை எதுவுமில்லை என்ற மனோபாவம் அமெரிக்கர்களுக்கு நிறைய உண்டு. இந்த எண்ணமும் அதனை நிறைவேற்றுவதில் அவர்கள் வெளிப்படுத்தும் தைரியமும் infinityயின் வெளிப்பாடுகளாகும். சிகாகோ நகரில் தவறுதலாகக் கட்டிடங்களைத் தாழ்ந்த பகுதியில் கட்டியிருந்தார்கள். பின்பு இக்கட்டிடங்களை எல்லாம் உயர்த்தி மேலே கொண்டுவர வேண்டும் என்று அந்நகரத்தின் முனிசிபாலிட்டி முடிவு செய்ததுஒரு பெரிய நகரத்திலுள்ள எல்லாத் தாழ்ந்த கட்டிடங்களையும் உயர்த்த வேண்டும் என்றால் அது ஒரு சாதாரண முயற்சியே இல்லை. ஆனால் இப்படியொரு முயற்சியை அவர்கள் மேற்கொண்டார்கள்கட்டிடங்களுக்கு கீழே எல்லாப் பக்கங்களிலிருந்தும் jackகளை வைத்து உயர்த்தினார்கள்.  ஓர் 5 மாடி கொண்ட, ஓட்டலாக இயங்கிக்கொண்டிருந்த கட்டிடத்தை அங்கே வேலை நடக்கும்பொழுதே இப்படி jackஐ வைத்து தூக்கினார்கள்.  அதுவும் உடையாமல், சாயாமல் மேலே 5 அடி எழும்பி வந்ததுஇப்படியொரு மாபெரும் முயற்சியை வேறெந்த நாட்டிலும் யாரும் வெற்றிகரமாக எடுத்திருக்க முடியாதுஆனால் அமெரிக்கர்களுக்கு இது சாத்தியமாகி உள்ளது என்றால் அவர்களுடைய மனோபாவமே இதற்குக் காரணம்.

     1980இல் Chrysler என்ற அமெரிக்க கார் கம்பெனி நிர்வாகம் சரியில்லாமல் போனதால் 3 பில்லியன் அளவிற்கு நஷ்டமடைந்தது. 3 பில்லியன் என்றால் 300 கோடி டாலராகும். அன்றைய foreign exchange rateபடி பார்த்தால் ஒரு டாலர் 12 ரூபாய்க்கு சமமாகவிருந்திருக்கும்.  அப்படியிருந்தால் கூட பில்லியன் டாலர் என்பது 36,000 கோடிக்குச் சமமாகும்.

     உலகத்தின் தொழில் சரித்திரத்தில் இப்படியொரு மாபெரும் நஷ்டம் அதுவரையிலும் வந்ததில்லைஇந்த நஷ்டத்திலிருந்து இக்கம்பெனி மீளவே முடியாது என்று எல்லாப் பொருளாதார வல்லுநர்களும் பேசினார்கள்ஆனால் Lee lacocca என்ற automobile  இன்ஜீனியர் அக்கம்பெனிக்கு தலைமைப் பொறுப்பேற்றார். கம்பெனியை நிமிர்த்த முடியுமென்று பேசினார்.

     பொறுப்பேற்றவுடன் கம்பெனியின் நிர்வாகத்தையும் செயல்பாடுகளையும் அணுகுமுறைகளையும் சரிசெய்தார். பொறுப்பற்ற, ஒழுங்காக வேலை செய்யாத உயர்நிலை அதிகாரிகள் 32 பேரை பதவிநீக்கம் செய்தார்பெட்ரோல் அதிகம் செலவாகும் இன்ஜின் டிசைனையெல்லாம் மாற்றி fuel efficiency மிக்க புதிய டிசைன் இன்ஜின்களை உருவாக்கும்படி கட்டளையிட்டார்தானே டி.வி. கார் விளம்பரங்களில் கம்பெனியின் சார்பாகத் தோன்றி கம்பெனியின் மாடல்களை விளம்பரப்படுத்தினார்கஸ்டமர்களுக்கு கார் திருப்தியில்லை என்றால் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக வாக்களித்தார். கம்பெனிக்கும் மார்க்கெட்டிற்கும் தொடர்பு விட்டுப் போன இடங்களிலெல்லாம் அத்தொடர்பை புதுப்பித்தார்இதன் விளைவாக மூன்றே வருடங்களில் கம்பெனி நிமிர்ந்ததுபழைய நஷ்டத்தை சரி செய்து அதற்குமேல் 3 பில்லியன் இலாபம் ஈட்டிக்காட்டினார்உலகமே அதிசயித்ததுஒரு தனிமனிதன் ஒரு பெரிய கார்ப்பரேஷனையே காப்பாற்றிச் சாதனை படைத்தார். Lee lacoccoவின் செயல்பாட்டிலும் பர்சனாட்லிடியிலும் power of infinity வெளிப்பட்டு முடியாத காரியத்தை முடிந்ததாக்கியது.

     Power of infinity என்பது ஓர் ஆன்மீக சக்தியாகும்.  2000 வருடங்களுக்கு முன்பே நாமதை உணர்ந்துவிட்டோம். காலப்போக்கில் நாம் கண்டுபிடித்ததையே நாம் மறந்துவிட்டு வறுமை, இயலாமை, பற்றாக்குறை, அடிமைத்தனம் என்று பலவித வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு விட்டோம். நம் நாட்டவருக்கு ஆன்மீக விழிப்பு வந்தால், நாம் அமெரிக்கர்களையும் வளர்ச்சியில் மிஞ்ச முடியுமென்பதுதானுண்மை.

     நம் நாட்டின் அண்மைக்காலச் சரித்திரத்திலேயே power of infinity சிறப்பாகச் செயல்பட்டுள்ளதுநம் நாட்டிற்கு வன்முறையின்றி 1947இல் சுதந்திரம் கிடைத்தபொழுது அந்தச் சுதந்திர அலை தொடர்ந்து செயல்பட்டு மேலும் 43 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதுமுயன்றால் சாதிக்க முடியும் என்றவிடம் நமக்கும் உண்டுபஞ்சமும் பட்டினியுமே வாடிக்கையாக இருந்த நாம் 1970இல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம். பால் உற்பத்தியில் வெண்மைப்புரட்சி நிகழ்த்த நம் நாடு முயற்சி எடுத்தபொழுது 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகிலேயே பால் உற்பத்தியில் நமக்கு முதலிடம் கிடைத்தது.

     நம்முடைய ஜனத்தொகைப் பெருக்கத்தை நாம் பெரிய சுமையாகவும் பாரமாகவும் நினைத்த நாட்களுண்டு. நம்முடைய உற்பத்தித் திறன் குறைவாக இருந்தபொழுது ஜனத்தொகைப் பெருக்கம் பாரமாகவிருந்தது.  ஆனால் நம்முடைய உற்பத்தித் திறனை உயர்த்திவிட்டால் இதே ஜனத்தொகை பாரமாகவில்லாமல் பெரிய assetஆக மாறிவிடும்சில வெளிநாட்டு research institutions 2030ல் இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் முன்னணிக்கு வரக்கூடும் என்ற கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன.

     இந்தியா is a sleeping giant என்று வர்ணிக்கப்பட்ட காலம் உண்டு.  இப்பொழுது நாம் விழித்துக்கொண்டுவிட்டோம். 2030இல் நாம் உலக அரங்கில் பொருளாதாரத்தில் முன்னணிக்கு உண்மையில் வந்து நின்றோம் என்றால் power of infinityஐ நாம் உண்மையில் வெளிப்படுத்தியதாக அமையும்.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

"பாராமுகமாக இருக்கும் தன்மையை வாழ்வு இழக்க ஆரம்பித்து விட்டது'' என்கிறார் அன்னை. சிறு நல்லகாரியம் பெரும் பலனையும், சிறு தவறுகள் பெரிய விபத்துகளையும் உற்பத்தி செய்கின்றன. முன்னே செல்லாவிட்டால் நாம் உள்ளதை இழக்க நேரிடும் என்று அறிவோம். ஒரு நிலையின் (plane) ஆரம்ப கட்டத்தில் நல்லது, கெட்டது, இடைப்பட்டது என மூன்று பிரிவுகள் இருக்க முடியும். கடைசிக் கட்டத்தில் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ மட்டும் இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பதில்லை. திருமணம் செய்து, குடும்பத்தை நடத்தி,சமூகத்தின் பகுதியாக இருக்க வேண்டும். அல்லது ஒதுக்கப்பட வேண்டும். இடைப்பட்ட நிலையில்லை.

. சிறு நல்லது பெரும்பலன் தரும்.

. இனிமேலும் வாழ்வு பார்த்துக்கொண்டிருக்காது.

. கடவுளுக்குக் கண்ணில்லையா என்பது இனியில்லை.


 book | by Dr. Radut