Skip to Content

14.முழுமையின் சிறப்பு

முழுமையின் சிறப்பு

Perfection என்பதைச் சிறப்பு எனலாம். நேரான தமிழ்ச் சொல் இல்லை. 99% பிரார்த்தனை பலிப்பது நம்பிக்கை. அருளால் பலிப்பது 100%. அன்னையின் அருளால் பலிக்கும்பொழுது 100%க்கு மேல் பலன் எழும்.

ஒரு கம்பனியில் பல அம்சங்கள் உண்டு. எதை உயர்த்தினாலும் அதற்குரிய பலன் உண்டு. எல்லா அம்சங்களையும் உயர்த்தினால் கம்பனியின் நிலை உயரும். சில்லரை வியாபாரம் மொத்த வியாபாரமாகும். இந்த ஆண்டு ஆபீசில் லீவு எடுக்காமல் இருக்கப் போகிறேன் என்று முடிவு செய்தால், லீவு குறைவாக எடுக்கலாம்;எடுக்காமலேயிருப்பது கடினம். அப்படிப்பட்ட ஸ்தாபனங்களும் உண்டு.

Perfection சிறப்பு வந்தால் மனித நிலை தெய்வ நிலையாகும். வேலை எதுவானாலும் சிறப்பு சிரமம்.

அன்னையைத் தரிசிக்க என் வாழ்நாளில் நான் ஒரு முறையும் தவறியதில்லை என்ற அன்பருக்கு அன்னை சித்திக்கும் நிலை எழும்.ஹர்த்தால், இன்ஸ்பெக்ஷன், நோய் போன்ற எதுவும் அவருக்குத் தடையாக இல்லை என்பது பிற்காலச் சித்தியை சுட்டிக் காட்டும்.

வின்ஸ்டன் சர்ச்சில் மூதாதையர் ஒருவர் ஆட்டு மந்தை வைத்திருந்தார். அது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டது. இரண்டு லட்சமாக்க முயன்றார். பல முறை 199,999 வரை வந்தது. இரண்டு இலட்சத்தை ஒருபொழுதும் அது தொடவில்லை என்று ஒரு செய்தி Perfectionனுடைய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

ஒரு பிழையின்றி டைப் செய்வது, அச்சடிப்பது, ஒரு நாள் தவறாமல் பதில் எழுதுவது, ஒருவர் தவறாமல் நல்ல பெயர் எடுப்பது,போன்றவை பலித்தால், அவர் அடுத்த கட்டத்திற்குப் போகமாட்டார்;முடிவான கட்டத்தை எட்டுவார்.

சிறப்பு உயர்வை எட்டும் என்பதே அதன் சிறப்பு.

****


 



book | by Dr. Radut