Skip to Content

14.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

                                  (சென்ற இதழின் தொடர்ச்சி....)                கர்மயோகி


 

70. அபிப்பிராயம் ஒன்றைக் கைவிடு.

சூட்சுமப் பார்வைக்கு உலகில் உலவும் அபிப்பிராயங்கள் ஊசிபோல் தெரியும்.

மனம் குறுகியது. அது ஒரு பக்கம்மட்டுமே காணவல்லது.

சிந்தனை அதனுள் ஒரு பகுதி.

அபிப்பிராயம் என்பது ஒரு விஷயத்தைப் பற்றி நம் மனத்தின் முடிவு.

அதனால் இது உண்மையாக இருக்க முடியாது.

மனம் உண்மையை அறிய முடியாதது.

காமராஜ் பெரியவர் என்பது என் அபிப்பிராயம்.

காமராஜ் பெரியவரல்லர் என்பது மற்றோர் அபிப்பிராயம்.

என் அபிப்பிராயம் நல்ல அபிப்பிராயம் எனலாம்.

காமராஜ் எப்படிப்பட்டவர் என்பதை ஆராயும் திறன் என் அபிப்பிராயத்திற்கில்லை.

குறுகிய மனம் ஒரு விஷயத்தைப் பற்றி எடுக்கும் முடிவு மேலும் குறுகியதாக இருக்கும். அதில் விசேஷமில்லை.

அபிப்பிராயமே இல்லாத மனம் (open mind) வெள்ளை மனம் எனப்படும்.

அதற்கு மனத்தின் சக்தியுண்டு.

அபிப்பிராயம் எப்படி உருவாயிற்று என்று கண்டு, அதைக் கரைத்தால்,மனம் அபிப்பிராயம் என்ற தளையிலிருந்து விடுபடும்.

ஒரு தளையிலிருந்து விடுபட்டாலும், மனம் அனுபவிக்கும் சுதந்திரம் பெரியது.

ஓர் அபிப்பிராயம் விலகினாலும், பிரச்சினை உடனே விலகும்.

ஒருவர் முதுகில் cystகட்டி போன்ற உருண்டை 5 வருஷமாக இருந்தது.

டாக்டர் கண்ணில் அது பட்டவுடன் அதை அறுத்துவிடச் சொன்னார்.

அவர் தமக்குத் தெரிந்த அன்பரிடம் இதைக் கூறினார்.

அன்பர் 1 வாரம் பொறு என்றார்.

மறுநாள் அது தானே உடைந்துவிட்டது.

டாக்டர் அறுத்து எடுப்பார் என்ற அபிப்பிராயம் மனத்திலிருந்து

விலகியவுடன், கட்டி உடைந்துவிட்டது.

விஷயம் எதுவானாலும், அதில் பிரச்சினை எழுந்தால், அதைப் பற்றி நமக்குள்ள அபிப்பிராயங்களை விலக்கினால், பிரச்சினை தீரும்.

பிரச்சினையே நம் அபிப்பிராயம்.

அபிப்பிராயத்தை விலக்குவது சிரமம்.

அன்னையை நம்பியவருக்கு அதை விலக்க முடியும்.

Pride&Prejudiceஇல் எலிசபெத் தன் அபிப்பிராயத்தை மாற்ற படும் போராட்டம் எவ்வளவுஎன நாம் கண்டோம். டார்சிக்கு அவள் மீது காதல் எழுந்தாலும், எலிசபெத் அபிப்பிராயம் மாற மறுக்கிறது. பெம்பர்லி தான் அதை மாற்றியது.

தொடரும்....

 

****


 


 



book | by Dr. Radut