Skip to Content

09.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)    N. அசோகன்

26. மனிதனுடைய அறிவு என்பது பிரிவினையை உண்டாக்கும் ஒரு கருவி. அது படைப்பில் உள்ளவை எல்லாவற்றையும் இரு வேறு எதிர்மறைகளாகப் பார்க்கிறது.

மானிட அறிவு அறியாமையைச் சார்ந்ததாகும். அது அறிவை நோக்கிச் செல்கிறது.

27. மானிட அறிவிற்கு அடுத்த மேல்நிலையில் உள்ள அறிவு மௌன சக்தியால் செயல்படுகிறது. அந்த உயர்ந்த அறிவிற்கு முனிவர் எடுத்துக்காட்டாக அமைகிறார்.

28. மானிட அறிவிற்கு இரண்டுபடிகள் மேலுள்ளது விளக்கமான அறிவு என்பதாகும். இது காட்சியால் செயல்படுகிறது. இந்நிலைக்கு ரிஷி எடுத்துக்காட்டாக அமைகிறார்.

29. மானிட அறிவிற்கு மூன்றாம் உயர்நிலையில் உள்ளது எழுச்சிமயமான அறிவாகும். இது உள்ளெழுச்சியால் செயல்படுகிறது. யோகி இந்நிலைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறார்.

30. மானிட அறிவிற்கு நான்காம் உயர்நிலையில் உள்ளது மேல்மனம் என்ற நிலையாகும். இந்நிலை அறியாமையும், சத்தியஜீவியமும்சேர்கின்ற இடத்திலுள்ளதால் இவ்விரண்டு நிலைகளுக்கும் உண்டான அம்சங்களைப் பெற்றிருக்கிறது. இந்நிலைதான் கடவுள்கள் உறையும் இடம்.

31. மனிதன் என்பவன் ஒரு மனோமயப்புருஷன். உயிருள்ள ஓர் உடம்பை ஏற்பதாகும். இன்னும் சரியாக சொல்லப்போனால் மனிதன் என்பவன் அறிவும், உயிருமுள்ள உடம்பில் ஓர் ஆன்மா பிறப்பதாகும்.

32. சைத்தியப்புருஷன் என்பது ஜீவாத்மாவுடைய பரிணாம வளர்ச்சி பெறுகின்ற பிரதிநிதியாகும். ஜீவாத்மாவிற்கும், சைத்தியப்புருஷனுக்குமுள்ள வேறுபாடு என்னவென்றால் முன்னதற்கு வளர்ச்சி இல்லை; பின்னதற்கு வளர்ச்சி உண்டு.

33. மேல்மன நிலையிலுள்ள கடவுள்களெல்லாம் பரிணாம வளர்ச்சி இல்லாத நிலையான ஜீவன்கள் ஆவார்கள். தெய்வீக அன்னை அவருடைய படைப்புப் பணியில் அவருக்கு உதவும்பொருட்டு இவர்களை உருவாக்கினார்.

34. ஒருவகையில் பார்த்தால் மனிதனை தெய்வங்களைவிட உயர்ந்த ஜீவனாக நாம் கருதலாம். ஏனென்றால் மனிதனால் சத்தியஜீவனாக மாறமுடியும். ஆனால் தெய்வங்களால் சத்தியஜீவனாக மாறமுடியாது.

35. ஜீவாத்மா என்பது படைப்பின் லீலையின்பொருட்டு பரமாத்மாவிலிருந்து பிரிந்து நிற்கும் பரமாத்மாவின் ஒரு பகுதியாகும். அப்பட்சத்தில் அது பரமாத்மாவைச் சார்ந்ததேயொழிய அதனிடமிருந்து வேறுபட்டதில்லை.

36. அனந்தம் என்பது வரம்பற்ற இடத்தைக் குறிக்கின்றது. நித்தியம் என்பது நிலையற்ற காலத்தைக் குறிக்கிறது. பூரணச் சுதந்திரம் நமக்குள்ளே ஆனந்தத்தையும், வெளியே அனந்தத்தையும் உருவாக்குகிறது.

37. நம் உடம்பிற்குள் சைத்தியப்புருஷன் இருப்பது படைப்பிற்குள் ஆன்மா இருப்பதைக் குறிக்கிறது. இந்நிலை காலமும், காலத்தைக் கடந்த நிலையும் ஒன்றாக இருப்பதைக் காட்டுகிறது. இப்படி இரண்டும் ஒன்று சேர இருப்பது உடனடி விளைவுகள் சாத்தியமாகின்றன.

38. மனிதனுடைய அடிமனதென்பது அவனுடைய விழிப்புணர்வுக்கு கீழே இருக்கின்ற பர்சனாலிட்டியைக் குறிக்கின்றது. இந்நிலையில் தான் அவனுக்கு மேலுள்ள நிலைகளும், கீழுள்ள நிலைகளும் ஒன்று சேர்கின்றன. அடிமனதிலுள்ள ஒரு குகையில்தான் சைத்தியப்புருஷன் உறைகிறது.

39. மனோமயப்புருஷன், பிராணமயப்புருஷன், அன்னமயப்புருஷன் என்பவைகள் எல்லாம் மனிதனுடைய அறிவு, உணர்வு, உடம்பு என்றிந்த மூன்று நிலைகளிலும் உறைகின்ற ஜீவாத்மாவின் பிரதிநிதிகளாகும்.

40. நம்முடைய பிராணமையம்தான் நம்முடைய பர்சனாலிட்டி; எனர்ஜியின் உறைவிடம். உண்மையான பிராணமயப்புருஷன் அங்குதான் உறைகிறான். நம்முடைய ஆசைகள் பிராணமையத்தினுடைய மேல்பகுதியைச் சார்ந்தவை.

தொடரும்....

ஸ்ரீ அரவிந்த சுடர்

(Perfection) சிறப்பு இரு வகைப்படும். உயர்ந்த சிறப்பு அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். தாழ்ந்த நிலையின் சிறப்பு உயர்வை நிச்சயமாகத் தடுக்கும். (e.g) பூரணமான அறிவு ஆன்மாவை அறிய உதவும்.

ஆசையைப் பூரணமாக அனுபவிப்பது அறிவையும் தடுக்கவல்லது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவன், ஜீவியம், திறன், சிருஷ்டி, ஆனந்தம் சச்சிதானந்தத்தின்  ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்தைக் குறிக்கின்றன.


 


 


 

 



book | by Dr. Radut