Skip to Content

11.Life Divine - கருத்து

Life Divine - கருத்து

ஆத்மா என்பது வாழ்வின் (Existence) அகம்;

சத்தியம் அதன் புறம்.

. "இது சத்தியம்'' என ஒருவர் அடித்துப் பேசும்பொழுது அவர் எதைச் சத்தியம் என்கிறார்.

கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கும்பொழுது, "இந்த நிலம் என்னுடையது' என்று அவர் கூறினால் அந்த நிலத்தின் உரிமை அவருடையது என அவர் நம்புகிறார். அந்த நம்பிக்கையை சத்தியம் என்கிறார்.

அவர் நம்புவது அவருக்கு உண்மையானால், அதையும் மீறி அவர் நம்பிக்கை பொய்என்ற நிலையும் இருக்கலாம்அவர் கூறுவது அவருக்கு சத்தியம். அவர் மனதில் பொய்யில்லை.

இதேபோல் பல உதாரணங்கள் கூறலாம். "என் அண்ணன் என்னை அடித்தான்'' என சிறுவன் தாயாரிடம் கூறும்பொழுது அது உண்மையாக இருக்கலாம்இவனை அடித்தது தம்பிஅந்த நேரம் அண்ணன் அங்கு வந்தான்அண்ணன் அடித்ததாக இவன் நினைக்கிறான்அவன் நினைவு பொய்ஆனால் அவன் அதை நம்புகிறான்.

இவை உண்மையானால் கண்ணால் கண்டது, காதால் கேட்டதை மீறி தீர விசாரிப்பதே மெய் என்கிறோம்தீர விசாரித்து வந்த முடிவும் பொய்அதை மீறிய உண்மையுண்டான நேரம் உண்டு.  முடிவான சத்தியம் என்று உண்டா? அதை எளிய மொழியில் கூற முடியாதா? கூறும் வகையில்லாவிட்டால் உதாரணமாகக் காட்ட முடியாதா? முடிந்தவரை சொல்லுவோம்.

சத்தியம் என்பது சத்புருஷனின் அம்சம்.

சத்புருஷன் அகம், புறம் எனப் பிரியும் பொழுது, அகம் ஆன்மா ஆகவும், புறம் சத்தியமாகவும் மாறுகிறது.

நாம் பேசும்பொழுது உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசலாம்.

உள்ளம் புறத்தைவிட அதிக உண்மையானது.

உள்ளம் உள்ளதை அறியாத பேதை நிலையுண்டு.

அப்பொழுது அதைக் கடந்த உண்மை உள்ளத்தில் புதைந்திருக்கும்.

நமக்கு உள்ளம் என்பது உயிர். அதைக் கடந்து மனமும், ஆன்மீக

மனத்தின் 4 நிலைகளும், சத்தியஜீவியமும், ஜீவியமும், ஜீவனும் 

உண்டு.

உள்ளத்தைக் கடந்ததைப்போல் எல்லா நிலைகளையும் 

நிதானமாகக் கடந்து சென்றால் சத், சத்தியமாக எழுவதைக்

காணலாம்.

அதன் சாயலை நாம் எந்த நிலையிலிருந்தாலும் அந்த நிலையில்

காணலாம்.

எது முக்கியம்:

நாம் பேசும்பொழுது, நினைக்கும்பொழுது, உணரும்பொழுது,

உணர்வைக் கடந்து செல்லும்பொழுது, எந்த நிலையிலும் மனம் எது

உண்மை, எது பொய்என அறியும். நாமறிந்த உண்மையை

அகத்திலிருந்து புறத்தில் பேசுவது யோகம்.

அது எளிதன்று.

எளிதாக இல்லாதது ஏழு நிலைகளைக் கடக்க உதவும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் ஈடுபடாமல் அதிகப் பொறுப்பும், பாரமும் படபடப்பை அளிப்பதில்லை.

உணர்வுள்ள உறவு படபடப்பை அளிக்கும்.


 


 



book | by Dr. Radut