Skip to Content

05.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

கடந்த சில வருடங்களாக நான் அன்னையை வணங்கி வருகிறேன். நான் +2 படித்துகொண்டு இருக்கும்போது, ஒரு சிம்பலை பாண்டிச்சேரியில் ஓரிடத்தில் பார்த்தேன். ஒரு நாள் அந்த சிம்பலை போடலாம் என நினைத்து போட்டுக்கொண்டு இருக்கும்போது (அன்றைக்கு எனக்கு +2 ரிசல்ட் வரும் எனத் தெரியாது) ஓர் அன்னை அன்பர் வந்து என்னுடைய ரிசல்ட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த முறை என்னுடன் எழுதிய மாணவர்கள் பெரும்பாலானோர் பரீட்சையில் தவறினர். ஆனால் அந்த முறை அதிசயத்தக்க வகையில் நான் அந்த ஆண்டு பரீட்சையில் 753 மார்க் வாங்கி பாஸ் செய்து இருந்தேன். இது நிச்சயமாக அன்னையின் அருளால்தான் நடந்தது. ஏனெனில் அந்த ஆண்டு நான் பரீட்சைக்கு 10நாட்கள் முன்னர் மட்டுமே படித்து இருந்தேன்.

அதன்பிறகு எல்லா காலேஜுக்கும் அப்ளை செய்து இருந்தேன். ஆனால் எந்த காலேஜில் இருந்தும் அழைப்பு வரவில்லை. எனவே டிப்ளமோவில் E.E.E. சேர்ந்து படித்தேன். டிப்ளமோ முடித்து, B.E.சேர்வதற்கு டிப்ளமோவின் மூன்றாவது ஆண்டு மார்க்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். இரண்டாவது ஆண்டில் 85% மார்க் குறைவாக வாங்கி இருந்த நான் அன்னையின் அருளால் மூன்றாவது ஆண்டில் 92% மார்க்குகள் வாங்கி பாஸ் செய்தேன். B.E.

கவுன்சிலிங் சென்றபோது தரப்பட்டியல் வரிசையில் 1024 இடத்தில் இருந்தேன். மொத்த இடங்கள் 6000 இருந்தது. எனவே நான் நினைத்த இடத்தில் E.E.E கிடைத்துவிடும் என நினைத்தேன். ஆனால் என்னுடைய கவுன்சிலிங் டைம் வரும்போது E.E.E எல்லா இடங்களும் பூர்த்தியாகி இருந்தது. எனவே நான் காலியாக இருந்த மகேந்திரா பொறியியல் கல்லூரியில் B.Tech (I.T.) சேர்ந்தேன். நான் நினைத்த இடத்தில் கிடைக்கவில்லை என வருத்தத்தில் சென்ற எனக்கு, அங்கு அட்மிஷன் போடச் சென்றபோதுதான் கல்லூரி prospectusஇல் கடைசி பக்கத்தில் அன்னை ஸ்ரீ அரவிந்தரைப் பார்த்தேன். பிறகுதான் தெரிந்தது அந்த இடம் எனக்கு அன்னை அளித்தது என்று; மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும்போது ஒரு பேப்பரில் அரியர் என்று ரிசல்ட் வந்தது. நான் அதை நம்பாமல் revaluationக்கு அப்ளை செய்துவிட்டு, அன்னையிடம் ரிசல்ட் பாஸ் என வர வேண்டும் என வேண்டிக் கொண்டு, நான்கு வருடங்கள் கழித்து மேற்கூறிய சிம்பலை மீண்டும் போட்டேன். ரிசல்ட், அன்னையிடம் வேண்டிக் கொண்டபடி, பாஸ் என வந்தது. அன்னைக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நவம்பர் 2005 வரை அந்த சிம்பலின் பெயர் என்னவென்று எனக்கு தெரியாது. மற்றோர் அன்னை அன்பர் வந்து இன்டர்நெட்டில் தாம் பார்த்ததாக எனக்கு விவரம் கூறினார். அப்போதுதான் இந்த சிம்பலின் அர்த்தம் என்னவென்று எனக்கு தெரிந்தது. அது முதல் எனக்கு, அன்னையின் அருளால், இந்த சிம்பல் போட்ட காரணத்தினால்தான், நான் இந்த அளவுக்குப் படித்தேன்என்று புரிந்தது. ஏனென்றால் அது கல்விக்கான (education) சிம்பல் ஆகும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதிர்பார்த்தல்: விஷயம் முடியும் என்பதை மனம் சுட்டிக் காட்டுவதை எதிர்பார்ப்பது குறிக்கும். உணர்வின் நம்பிக்கையை எதிர்பார்க்கிறது. கடந்த கால அனுபவத்தால் ஒரு முறை அறிந்ததை ஆயிரம் முறை திரும்பச் செய்வது உடலின் பழக்கம். எதிர்பார்ப்பதும் அதற்கு இதுவே. இறந்து போனவரைத் தேடும் நிலையும் கண்ணுக்குண்டு. ரயிலில் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தபிறகு அவரை வீட்டில் தேடுவதும் உடலுக்கு முடியும்.

எதிர்பார்ப்பது சக்திவாய்ந்தது.


 


 



book | by Dr. Radut