Skip to Content

05. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

எனதுஊர் விருதுநகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமம்.ஊருக்குச் சென்ற நான் அங்குள்ள பெரிய ஏரியில் குளிக்க ஆசைப்பட்டுக் குளித்தேன். குளித்து முடித்தவுடன் எனதுகம்மல்,மாட்டலோடு நீரில் காணாமல் போனது. அங்குள்ள அனைவரும் இங்கு எது தொலைந்தாலும் கிடைக்காது என்று கூறினார்கள். ஆனால் நான் அன்னையை அழைத்து, தொலைந்த என்கம்மல், மாட்டலோடு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்ஒரே இடத்தில் கம்மல், திருகு, மாட்டல் மூன்றுமே கிடைத்தது. அங்குள்ள அனைவரும், "எந்த தெய்வத்தை வணங்கினீர்கள்? எங்களுக்கும் சொல்லுங்கள்!'' என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அன்னையை நம்பினால் கைவிடமாட்டார் என்பது அங்குள்ள அனைவருக்கும் புரிந்தது.

-M. பஞ்சவர்ணம், பெரம்பூர், சென்னை-11.

 

     


 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

தகப்பனார், மகன், வாக்காளர், தலைவர்என்ற பகுதிகளை மனிதன் கொண்டவன்என்று நம்மால் ஏற்க முடிகிறது. ஆனால் அகண்டமாகவும், கண்டமாகவுமானவன் அவன்என ஏற்க முடிவதில்லை.
 

எதிராக உள்ள நிலைகளை ஏற்கும் திறன் யோகத்திற்குண்டு.
 


 


 


 



book | by Dr. Radut