Skip to Content

07. முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

 முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

RECEPTIVITY - ஏற்புத்திறன் :

அன்னை அன்பர்களுக்கு அன்னையின் அருள் அவர்கள் வாழ்வில் சாதிக்க விரும்புவதை அடைவதற்கு உறுதுணையாக இருக்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

நம்மால், நம் முயற்சியால், நம் திறமையால் சாதிப்பதற்கு அளவு உண்டு. அது நம் திறமையையும் அறிவையும் பொருத்தது. ஆனால் அன்பர்கள் அன்னை சக்தியைத் தங்கள் வாழ்வில் செயல்பட அனுமதித்தால் சிறியது பெரியதாக மாறும். இதற்கு ஏற்புத்திறன் அவசியம். நம் மனம் உடனே கேள்வியை எழுப்புகின்றது. ஏற்புத் திறனை எப்படி உயர்த்துவது? ஏதேனும் formula இருக்கின்றதா? Shortcut உண்டா? காசு போட்டால் instant coffee வருவது போல் ஏதேனும் instant magic இருக்கின்றதா? என்று பல கேள்விகளை எழுப்புகின்றது. அன்னையிடம் வந்தபின் நமக்கு வருவது எல்லாமே அருளின் செயல்பாடுதான்என்று மனம் ஏற்றுக்கொண்டால், ஏற்றதை உண்மைஎன்று நம்பினால், அந்த நம்பிக்கை மட்டுமே நமது ஏற்புத்திறனை அதிகரிக்கும். மாறாக அருள் நான் நினைத்தபடிதான் வரவேண்டும்என்ற மனநிலை ஏற்புத்திறனுக்கு எதிரி.

அருள், வேலையில்லாத ஒருவனுக்கு வேலையை வாங்கிக் கொடுக்கின்றதுஎன்று வைத்துக்கொள்வோம். சம்பளமும் எதிர்பார்த்-ததைவிட அதிகம். இருப்பினும் மனம் கேள்வியை எழுப்புகின்றது. நான் வெளியூர் செல்ல வேண்டுமே, தினமும் 10 மைல் பஸ்ஸில் போக வேண்டுமே, ஒரு மைல் நடக்க வேண்டுமே, மதியம் சாப்பாடு canteenஇல் சாப்பிட வேண்டுமே, T.V. யில் முக்கியமான programme பார்க்க முடியாதே, வேலை நான் விரும்பியதுபோல் இல்லையேஎன்று முட்டுக்கட்டை போடுகின்றது. நாமே நமக்குத் தடையை ஏற்படுத்திக்கொள்கின்றோம். நமக்கு மட்டுமன்று, வருகின்ற அருளையும் தடை செய்கின்றோம்என்று தெரிவதில்லை. நாம் நம்முடைய விருப்பத்தை அன்னையின் மேல் திணிப்பதால் அன்னையின் அருள் செயல்படத் தடை ஏற்படுகின்றது. வருகின்ற அருள் நம்முடைய perosnalityக்குத் தகுந்தபடிதான் வரும். ஆகவே அதைத் தடையின்றி சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வது Receptivity ஆகும். அது அருள் நம் வாழ்வில் தொடர்ந்து செயல்பட அஸ்திவாரமாக அமைகின்றது.

வாழ்வில் அன்னை விரும்பும் பண்புகளைக் (values) கடைப்பிடிக்க முயன்றால் நம்முடைய ஏற்புத்திறன் அதிகரிக்கும். நம்முடைய சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது, வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, தினசரி கணக்கு எழுதுவது, குறித்த நேரத்தில் செயல்படுவது (punctuality), தணிவான பேச்சு, அடக்கம் போன்ற பண்புகள் நம்முடைய personalityஐ expand செய்வது மட்டும் அல்லாமல் நம்மை அன்னையை நெருங்கி வரவும், அவர் அருள் நம் வாழ்வில் செயல்படவும் உறுதுணையாக இருக்கின்றது. நாம் நம்முடைய சக்தியை முழுமையாக அன்னையின் கோட்பாடுகளை ஏற்றுச் செயல்படுத்தும் பொழுது அன்னை சக்தி நம்முள்ளே அபரிமிதமாகப் புகுந்து, செயலை ஓர் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதைக் காணலாம். அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்து நம் வாழ்க்கை அதனுள் நுழைவதைக் காணலாம்.

தொடரும்....

***
 


 



book | by Dr. Radut