Skip to Content

13. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம் .

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

925) சில்லரை சந்தோஷத்தைத் தேடுபவரை நிதானமான மனிதன் குறைவாக நினைக்கிறான். பக்குவமான நிதானமுள்ளவனுடைய மனம் புண்பட்டபொழுது உள்ளேயுள்ள கருணை அதைக் கரைக்கும்என்றறியாது, ரணத்தை ஆற்றும் மனிதாபிமானத்தை நாடி மனிதாபிமானத்தையே நிலைநிறுத்துகிறான்.

பெரிய மனிதனும் மனம் புண்பட்டபொழுது சிறிய மனிதனாகிறான்.
ஒரு பெரிய மிராசுதாரின் மகன் P.U.C. பெயிலாகிவிட்டான். எந்த டியூட்டோரியல் பிரபலமானதுஎன விசாரித்து, அதில் சேர்த்தார். பையன் 4முறை பரீட்சை எழுதி, தவறிவிட்டான். அவனை கிராமத்திற்கு அழைத்துப் போய் விவசாயம் செய்யச் சென்னார்.

அவர் உறவினர்களைப் பார்க்கப் போயிருந்தார். அந்த வீட்டில் எவரும் பள்ளியைத் தாண்டியதில்லை. ஒருவர் 2 வருஷம் காலேஜில் படித்தவர். அந்த வீட்டுப் பையன் ஒருவனை நண்பர் ஒருவர் அழைத்துப் போய் வீட்டில் வைத்திருந்தார். அவர் அவனுக்கு பரீட்சைக்குரிய பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை. "பாடம் என்றால் என்ன? படிப்பு ஏன் முக்கியம்?' என்பதை அவன் மனதில் பதியும்படிக் கூறினார். பையன் பெரிய பட்டம் முடித்தான். அதைக் கேள்விப்பட்ட மிராசுதார் அந்த நண்பனைத் தேடிவந்து பையனை அவரிடம் ஒப்படைத்தார். பையனை அவர் வேறு ஒருவரிடம் பொறுப்புக் காட்டினார். "நோட்ஸ் படிக்கக் கூடாது. பாடப்புத்தகம் மட்டும் படிக்க வேண்டும்'' என்பது பயிற்சி. P.U.C. பாஸ் செய்தான். B.Sc. பாஸ் செய்தான். M.Sc.யும் பாஸ் செய்தான்.

கல்லூரி மாணவர் ஹாஸ்டல் பரீட்சை சமயத்தில் எல்லா மாணவர்களும் நோட்ஸ் படிப்பார்கள். சில மாணவர்கள் பாடப்புத்தகமே வாங்குவதில்லை.

  • நோட்ஸ் அறிவுக்கு எதிரி.
  • பாடப்புத்தகம் அறிவின் உறைவிடம்.

எந்தக் கல்லூரியிலும் இந்தக் கருத்துகள் எந்தக் காலத்திலும் எடுபடுவதில்லை.

  • சில்லரை சந்தோஷம், சந்தோஷத்திற்கு எதிரி.
  • உள்ளேயுள்ள கருணை, நிதானம் சந்தோஷத்தின் உறைவிடம்.

பொதுவாக இது புரியாத கருத்து. எவரும் பின்பற்றத் தயார் இல்லை. நிதானம் உள்ளவரே நேரம் வந்தால் உள்ளே போவதில்லை.எளிய பரிகாரத்தைத் தேடுகிறான்.

  • சில்லரையாக இருப்பது எளிது.
  • நிதானமாக இருப்பது சிரமம்.

நிதானம் நித்திய தியானம்.

 பொறுக்காது. மாநிலத்தில் முதல் மார்க் வாங்கியபின், அதைத் திருத்தி அடுத்தவருக்குக் கொடுப்பது பாவம். அது தினமும் நடப்பது; மனம் ரணமாகும். இந்த நேரம் மனிதன் வேண்டியவரிடம் ஆறுதல் தேடுவான். நண்பர் நல்லவராக இருந்து ஆறுதல் தந்தால், ஆறுதல் பெறுவதால், அப்பிரச்சினை தீராதுஎன மனிதன் அறிவதில்லை. ஆறுதல் இதமாக இருக்கும். ஆறுதலை நாடுவதற்குப் பதிலாக உள்ளே சென்றால், உள்ளே கருணையுண்டு. அதையும் கடந்து சென்றால் கருணை வெள்ளமாக உள்ளது. அது மனத்தின் ரணத்தைக் கரைத்துவிடும். அத்துடன் அதை ஏற்படுத்திய பிரச்சினையை அழிக்கும். இழந்த முதல் ராங்க் திரும்ப வரும்.

  • உள்ளே போகத் தோன்றாது; முயன்றால் முடியாது.
  • பொறுமையாக உள்ளே போவது ஆண்டவனை நாடுவதாகும்.
  • அதன் மூலம் நிதானம் கருணையாக மாறும். கருணை அருளுக்கு அடுத்தபடியான அம்சம்.

926) மனிதத் திறமைக்கு முழுப்பலன் சந்தோஷம் பொங்கி வழியும்பொழுதுதான் கிடைக்கும். மனச்சாட்சியின் தயக்கமிருக்கும்வரை பொங்கி வரும் சந்தோஷத்திற்கு அது தடைசெய்யும்.

பெரிய சந்தோஷத்திற்கு மனச்சாட்சி தடை.

  • திறமைக்குப் பலன் உண்டு.
  • ஆனால் முழுப்பலன் பெற பல்வேறு விஷயங்கள் ஒத்துவர வேண்டும்.
  • சந்தர்ப்பம், சூழலின் ஒத்துழைப்பு, பலன் பெறுபவரின் நன்றியறிதல், பலன் எழும் நேரம், செய்பவரின் நல்லெண்ணம்போன்று பல காரியங்கள் ஒத்துவருதல் அவசியம்.
  • இவை ஒத்து சுமுகமாக வருவதற்கும் பல தரங்களுண்டு. அனைத்தும் சரிவர இருந்தால்தான் சந்தோஷம் பொங்கி வரும்.
  • அப்படி நடக்க பல அடையாளங்களுண்டு.

எதிர்பார்த்ததைவிட அதிகப் பலன் எழுவது, குறித்த நேரத்திற்குமுன் பலன் வருவது, வந்த பலன் வளரும்அறிகுறி தெரிவது போன்றவை அவ்வடையாளங்கள்.

  • அதைத் தடை செய்பவை பல.

எக்காரணத்தை முன்னிட்டும் எழும் தயக்கம், தெளிவில்லாத மனம்,  வேறு விஷயத்தில் உள்ள குறை மனத்திலிருப்பது,எது காரணமானாலும் மனம் சுருங்குவது பொங்கிவரும் சந்தோஷத்தைத் தடை செய்யும்.

கூச்சம், பயம், அனுபவமின்மை, எதுவும் அப்படிச் செயல்படும்.

  • பெரிய பலன் வருவது நமக்கு மேலுள்ள சீனியர்களைக் கடந்து வந்தால் மனச்சாட்சி உறுத்தும்.

பல காரணங்கட்காக மனச்சாட்சி உறுத்தும், தயங்கும். பெரிய பாராட்டுவிழா நடப்பது நமக்காகஎன்றாலும், அந்தத் தேதி நம் வாழ்வில் தவறான நாளென்றால், மனம் சுருங்கும்.

  • உடல், பொருள், ஆவிஎன்பது வழக்கு.

உடல் பூரித்து, பொருள் பெருகி, ஆவி மலர்ந்தால் சந்தோஷம் பொங்கிவரும்.

அதில் குறை மிகச் சிறியதுஎனினும் அதற்கு அனுமதியில்லை.

பொங்கிவரும் பால் ஒரு சொட்டு நீரும் பொங்குவதை அடக்கும்.

  • பொங்கி வரும் சந்தோஷம், புளகாங்கிதம் தரும்.

அது உண்மையானால், எதிர்காலம் முழுவதும் ஏற்றமாக இருக்கும். வெற்றியாகப் பதவி வரும், பணம் வரும், வேலை முடியும்.இவை பெரிய சந்தோஷம் தரும்.

வெற்றியாக அன்பு கிடைப்பதுண்டு.

லிமையான அன்பு, உயர்ந்ததுஎன்பதால் அது பதவி, பணம், வேலையை முடித்துக்கொண்டு வரும். அந்நிலையில் அன்பை உணர்ந்து அடுத்தவை நினைவில்லைஎனில் பொங்கி வரும் சந்தோஷம் பூரித்து புளகாங்கிதம் தரும்.

***

927) பஞ்சத்தைப் பற்றிய கருத்துக்கு A.K. சென்னுக்கு உலகப் புகழ் கிடைத்தது. மானேஜ்மெண்ட் தத்துவத்தில் ஒன்றை உணவு விநியோகத்திற்குப் பயன்படுத்தியதன் பலன் அது. பரம்பரைக் கருத்தை அடுத்த துறைக்குப் பயன்படுத்துவதை உயர்ந்த சிருஷ்டி ஞானம் (creativity) என்று உலகம் கருதுகிறது. பல ஆயிரம் கருத்துகள் அதுபோன்றுள்ளன.

துறை மாறினால் சிறியதும் பெரும்பலன் தரும்.

  • நாட்டுக்கோட்டை செட்டியார் ஒரு சிறு தொகை. 1947இல் அவர்கள் ஜனத்தொகை 1டீ இலட்சம். இப்பொழுது 5 இலட்சத்திற்கு மேலிருக்க முடியாது. 1947இல் தமிழ்நாட்டுத் தொழில் 1/3 அவர்களிடமிருந்தது.

அது பெருஞ்செல்வம் படைத்த வம்சம். அதற்குரிய முக்கிய காரணம் - பயிற்சி.எந்தத் தொழிலையும் கற்க 15 வருஷமாகும். அதுவும் பகுதியாகவே பயிலலாம். பயிற்சி முழுமையாக சில ஆண்டுகளில் அப்பலன் தரும். தானே கற்பதைவிட பயிற்சி பலன் தரும்என்பது மானேஜ்மெண்ட் சட்டம்.

  • கலைஞர் பலருண்டு. அரசியல் தொடர்பு கலைக்கு இல்லாத பிரபலத்தைக் கொடுக்கும். அதனால் பதவிக்கும் வருவதுண்டு.
  • இருதுறைகள் சேரும்பொழுது பலன் அதிகம்என்பது பொருளாதாரமும், கணிதமும் கண்டுகொண்டன.
  • காபி, டீ எஸ்டேட்களில் 10% இலாபம் வருவது அதிகம். டாட்டா 50,000 ஏக்கர் எஸ்டேட் வாங்கி மானேஜ்மெண்ட் தத்துவப்படி அவற்றை நிர்வாகம் செய்ததில் 50% இலாபம் கிடைத்தது.
  • நம் நாட்டில் 60 கோடி பேர் விவசாயம் செய்கிறார்கள்.

அமெரிக்காவில் 1900த்தில் 15 கோடி பேர் விவசாயம் செய்தனர். விவசாயத்தை டெக்னாலஜியைப் பயன்படுத்தி செய்ததால் அதே விவசாயத்தை இன்று 60 இலட்சம் பேர் செய்கிறார்கள். பலன் ஏராளம்.

  • மானேஜ்மெண்ட் தத்துவங்கள் ஏராளம், எல்லோரும் அறிந்தது. ஆனால் எவரும் அடுத்த துறைக்கு அதைப் பயன்படுத்துவதில்லை.

அவற்றுள் சில:

1. திட்டமிட்டு வேலை செய்தல் (Planning).

2. Cost accountancy ஒவ்வொரு செயலுக்கும் செலவைக் கணக்கிடுதல்.

3. சம்பளம் கச்சாப்பொருள், விளம்பரம் போன்றவற்றைச் செலாவணியில் என்ன சதவீதமாகிறதுஎனக் கணக்கிடுதல்.

4. எதையும் ஒரு system மூலமாகச் செய்வது.

5.Organisational chart எந்த வேலைக்கு யார் பொறுப்புஎன நிர்ணயிப்பது.

6.வரவு, செலவு கணக்கெழுதுவது.

7.எல்லாத் துறைகளும் ஒவ்வொரு துறையுடன் ஒத்துழைப்பது.

பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு மானேஜ்மெண்ட் தத்துவமே காரணம். எவரும் தம் குடும்ப வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் அவற்றைப் பயன்படுத்தினால் பலன் அதிகம்A.K.Sen நோபல் பரிசு பெற உதவியது இது போன்ற ஒரு தத்துவம்.

தொடரும்.....

 


 

ஜீவிய மணி

அறியாமைக்கும் அருளுண்டு.
 


 

 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

ஜடமான மனிதன் தன் கண்ணோட்டத்தை மாற்றினால்ஜடம் திருவுருமாற்றமடைகிறது. அந்நேரம் பிரம்மமும் சிருஷ்டியும் ஒன்றென அறிகிறோம்.
சிருஷ்டியை பிரம்மமாக்கும் திருவுருமாற்றம்.
 


 


 


 


 



book | by Dr. Radut