Skip to Content

2. தலைமைப் பதவி

 

ஜனாதிபதி நாட்டின் தலைவர். ஆனால் நாட்டின் முக்கிய அதிகாரம் திரைமறைவில் செயல்படுபவர்களின் கையிலிருப்பது வழக்கம். இன்று அமெரிக்க சர்க்கார் அதிகாரம் அதுபோல் 20 பேர் கையிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அமெரிக்கா போரில் இறங்கியது. உணவு உற்பத்தி முக்கியம். கோதுமைராஜாஎனப் பெயர் பெற்றவர் காம்பெல். சர்க்காரை அணுகி கோதுமையை அபரிமிதமாக உற்பத்தி செய்ய உதவி கேட்டார். சர்க்கார் மறுத்துவிட்டது. J.P. Morgan மார்கன் என்பவர் பாங்கு உரிமையாளர். அவரை அணுகி அதே கோரிக்கையை வைத்தார். 7 நிமிடத்தில் அவர் கேட்ட இரண்டு மில்லியன் டாலர்களை பாங்க் அவருக்கு சாங்ஷன் செய்தது.
நேரம், காலம், யார், எவர்என அறிந்து க்ஷணத்தில் செயல்படுவது தலைமையின் தகுதி.
இவர் தகப்பனார் 1907இல் அமெரிக்கப் பொருளாதாரம் நொறுங்கியதை ஒன்றரை நாளில் பாங்குகளையும், கம்பனிகளையும்  சந்தித்து சர்க்காரிடமிருந்து $25 மில்லியன் பெற்றுத் தடுத்தார்.
தலைமைக்குத் தகுதியுண்டு.
அத்தகுதி ஒருபோதும் தவறாது, தவறியதில்லை.
தவறாத தகுதி தலைமை.
 
*****

 

 



book | by Dr. Radut